Saturday, October 18, 2014

மூன்றாம் பிறை சிறப்பு;


---------------------------------
ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள்,மூன்றாம் பிறை நாளாகும்.அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு,வெட்டி போடும் குட்டி நகம் போல் அழகாகவும்,பிரகாசமாக இருக்கும்.
பொதுவாகவே திதி என்பது சூரியனுக்கும்,சந்திரனுக்கும் இடைப்பட்ட தூரமாகும்.இந்த வளர்பிறை மூன்றாம் நாளில் பூமியில் ஈர்ப்பு சக்தியில் ஒரு விசேச தன்மையுண்டு.
மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம்.இந்தமூன்றாம் பிறையைத் தான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார்.மூன்றால் பிறையை பார்த்தல் மனநிறைவும்,பேரானந்தமும்,மன அமைதியும் கிடைக்கும்.
திங்கட்கிழமையும்,மூன்றாம் பிறையும் இணைந்து வரும் நாளை சோமாவரம் என்பார்கள்.இந்த நாள் சிவனுக்கு சிறப்புவாய்ந்த நாளாகும்.இந்த நாளில் சிவனை வழிபட்டால் நம்முடைய அனைத்து பாவங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
மூன்றாம் பிறையை சிறப்பை இன்னும் சொல்வதென்றால் அனைத்து மதங்களுமே இதை ஏற்றுகொண்டுள்ளன.அதாவது இஸ்லாம் மத‌ம், ஜைன‌ம், கிறித்தவம், இந்து மத‌ம் என்று எல்லா மதங்களும் மூன்றாம்பிறை என்பது தெய்வீக அம்சம் பொருந்தியது என தெரிவிக்கிறது . அந்த பிறையைகண்டு வணங்குவது ஆயுளை விருத்தி செய்யும் , செல்வங்களை சேர்க்கும், பிரம்மஹத்தி தோஷம் போன்ற தோஷங்களை நீக்கும்.
அன்புடன் பட்டுக்கோட்டை ஜோதிடர் சுப்பிரமணியன்.

No comments:

Post a Comment