பிரபல
எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் கூறுகிறார்…
ஒரு புலவர், தன் குடும்பத்தவருடன்
செட்டிநாட்டுப் பகுதியிலிருந்து பயணிக்கும்போது, வழியில்
எங்குமே சாப்பிடக் கிடைக்கவில்லை. பசியோ குடலைப் பிடுங்கித் தின்கிறது. நேரமோ
நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அப்போது, புதுக்கோட்டை அருகே ஒரு ஊரில் மகாபெரியவர் தங்கி
இருக்கும் அறிவிப்பு அவர் கண்களில் படுகிறது.
உடனே காரை அங்கு விடச் சொல்கிறார். குடும்பத்தவர்களோ, ‘நள்ளிரவாகி விட்ட நிலையில், பெரியவர் தங்கி
இருக்கும் இடத்துக்குப் போய், அவரை சிரமப்படுத்துவது
சரியில்லை’ என்கின்றனர்.
நாம் சிரமப்படுத்த வேண்டாம். காலை அவரை தரிசித்துவிட்டு
செல்வோம். இந்தப் பட்டினி அவருக்கான விரதமாக இருக்கட்டும்‘’ என்கிறார் புலவர். காரும் அந்த ஊரை நெருங்கி விட்ட நிலையில், மணி ஒன்று!
ஊர் எல்லையிலேயே ஒரு பிராமணர் காத்திருந்து, வழிமறித்து நிறுத்தி, ‘நீங்கள் தானே புலவர்?’
என்று கேட்கிறார். புலவருக்கோ பெரும் வியப்பு…!
அந்த நள்ளிரவில் புலவரின் காரை வழிமறித்து, நீங்கள்தானே புலவர்?” என்று அந்த பிராமணர்
கேட்டபோது, அந்த புலவருக்கு பெரும் வியப்பு. ஏனென்றால்,
அவர் அங்கு பிரவேசம் செய்திருப்பதே எதிர்பாராத விதம்.
‘நான் வந்தபடி இருக்கிறேன்’ என்று கூற,
இன்றுபோல கைபேசி வசதிகளும் இல்லாத காலம் அது. அப்படி இருக்க,
இந்த பிராமணருக்கு தன் வருகை எப்படித் தெரிந்திருக்க முடியும்
என்கிற கேள்வி, அந்த புலவருக்கு மட்டுமல்ல; புலவர் குடும்பத்தவர்க்கும் சேர்ந்தே ஏற்பட்டுவிட்டது.
அதைத் தொடர்ந்து நடந்தவைகளும் ஆச்சர்யமூட்டும் அனுபவங்கள்தான்.
அந்த பிராமணர், அவரை பெரியவர் தங்கியிருக்கும் படத்துக்கு
அழைத்துப் போய், கைகால் கழுவி வரச் செய்து பின்
அமர்வித்து தையல் இலை போட்டு, அதில் அரிசி உப்புமா,
பிட்லே என்று சுடச்சுட பரிமாறியபோது புலவர் குடும்பம்
சிலிர்த்துப் போனது. சாப்பிட்டு முடித்த கையோடு, பெரியவர்
காத்திருப்பதாக கூறி, அவர்களை அழைத்துச் சென்று
நிறுத்தியபோது பெரியவரும் விழித்திருந்தார்.
புலவரும் அவர் குடும்பத்தவரும் அந்த சாப்பாட்டையும்எதிர்பாக்கவில்லை அந்த தரிசனத்தையும் எதிர்பாக்கவில்லை.
புலவருக்கு ஆனந்தக் கண்ணீரே வந்து விட்டது.
இப்போது நடந்த அவ்வளவும் எங்கள் பாக்கியம். நாங்கள் துளியும்
எதிர்பாராதது. எங்கள் வருகையும் சரி; பசியும் சரி;
உங்களுக்கு எப்படித் தெரியும் என்றே தெரியவில்லை” என்றார் புலவர். அதற்கெல்லாம் எந்த பதிலையும் கூறவில்லை பெரியவர். ஒரு
புன்னகைதான் பதில்.
சரி நாங்கள் இப்போதே தஞ்சாவூர் புறப்படுகிறோம்” என்று புலவர் கூறவும், படுத்து உறங்கிவிட்டு
காலையில் போய்க்கொள்ளலாம்” என்று உறுதியாக கூறிவிட்டார்
பெரியவர்.
படுக்கச் சென்ற இடத்தில் சூடாக பால் வேறு!
No comments:
Post a Comment