பொருள் பொதிய உனைப் பற்றி எழுத வைத்து, பொருள் அல்லாத என்னையும் ஒரு பொருளாக்கி, அதை பலரும் அகமழிந்து பாராட்டக் கண்டு நீயும் ஆனந்தம் கொள்கிறாயே நியாயமா இது சங்கரா!
படைப்பு,எழுத்து, இயக்கம், வடிவம் என அனைத்தையும் நீயே செய்துவிட்டு, அதற்கு வெறும் வாய் அசைக்கும் நடிகனான என்னை பலரும் வாழ்த்த கண்டு நீயும் ரசிக்கின்றாயே நியாயமா இது சங்கரா!
ஒன்றுக்கும் உதவாமல், உன்னைத் தவிர வேறு ஒன்றுமே தெரியாமல் இருந்த எனக்கு ஓவ்வொன்றாய் கற்பித்து அதை கொஞ்சமும் வெளிக்காட்டாமல் மறைந்து இருந்து பார்க்கின்றாயே நியாயமா இது சங்கரா!
இத்துனையும் உன்னிடம் இருந்தே பெற்று, அதை உலகுக்கு கொண்டு சேர்க்கும் ஒரு கருவியான என்னை, அனைவரையும் ஆசீர்வதிக்க கண்டு நீயும் மகிழ்கின்றாயே நியாயமா இது சங்கரா!
உன்னை நாடும் சிறு புல்லையும், பெரும் புயலாக மாற்றி ஒரு சகாப்தம் படைக்க வைக்க, உன்னால் மட்டுமே முடியும், அதை செய்து விட்டு ஒன்றுமே தெரியாதது போல் நடிக்கின்றாயே நியாயமா இது சங்கரா!
ராமனின் காலடி பட்ட பின்பே அகலிகைக்கு மோட்சம், ஆனால் நீ இருந்த இடத்தில் இருந்தே உன் கடைக்கண் பார்வை பட்டு பலருக்கும் மோட்சம் கிடைக்க, அதற்கும் உனக்கும் ஒரு சம்மந்தமும் இல்லை என்பது போல் இருக்கின்றாயே நியாயமா இது சங்கரா!
“காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு” என்பது போல், பாச மழையை என் மேல் பொழிந்து விட்டு, “என் பக்தனை போல் உண்டோ” என்று சொல்லி என் தாயாகி நிற்கின்றாயே போதுமே இது சங்கரா!
பெரியவா சரணம்!!

No comments:
Post a Comment