Wednesday, September 17, 2014

யார் உசத்தி ?


அன்றென்னவோ  கொஞ்ச நேரம்  நாராயணன் ஆதிசேஷன் மேல் பள்ளிகொள்ளவில்லைகையில்  சங்கமோ சக்ரமோ எடுத்துகொண்டும்  செல்ல வில்லை
 கருடனுக்கும் ஆதிசேஷனுக்கும்  ‘ரெஸ்ட்’நடைமுறையில்  என்ன   வழக்கம்? எஜமான்  தலை  மறைவில் எப்போதும் சிப்பந்திகளுக்கு கொண்டாட்டம்  தானே. 
மேற்கண்ட இந்த நால்வருக்குள்ளும்  ஒரு  சம்வாதமோ பட்டிமன்றமோ இல்லாவிட்டாலும்  கொஞ்சம்  அதிக  பேச்சு நடந்தது என்றுவைத்துக்கொள்வதுஉத்தமம். இது  நடைபெறும் என்று  
தெரிந்து   தானோ, அல்லது  நடக்க வேண்டும்  என்று கருதிதானோ 
 நாராயணன்  அங்கில்லை.  

 “நீ எப்போதும்  பெருமிதத்துடன்  இருப்பது,  எங்களை  ஒரு மாதிரி
 பார்ப்பதுகொஞ்சம்அதிகம்தான்.எனக்கு   ரொம்ப நாளா மனசிலே இது பற்றி  வருத்தம்  தான்”” என்றான்  ஆதிசேஷன்  கருடனை  பார்த்து.

பாம்பும்  பருந்தும்  ஜன்ம வைரிகள்  என்று மக்கள் தான்  கருதுவார்கள்  நீயும் அப்படித்தானோ?'நான்'  என்று பெருமிதத்துடனும்   கர்வத்துடனும் உன்னிடம் பழகினேன்??
 கண்ணதாசன் பாட்டை கேட்டு  "இருக்கும் இடத்தில் இருந்துகொண்டால்  எல்லாம் சௌக்கியமே " டயலாக்எல்லாம்நமக்குள்  வேண்டாம்” வேற்றுமையை  மனசில் வளர்க்காதே''  என்றான்  கருடன்.

"நீ  சமாதானம்  சொல்வதால்  உண்மை மறைந்துவிடுமா?.என்னைப்   பார்நான் இன்றேல்,நாராயணனுக்கு  படுக்கைகிடையாது.  நான் 
பெருமையா பீற்றிக்கொள்கிறேன்??” என்று  சொல்லாமல் சொல்லி 
பெருமையை பீற்றினான் ஆதிசேஷன்.  

ஒரே இடத்தில்  படுத்து  கொண்டே  இத்தனை பேச்சு பேசுகிறாயே,  நான்  நாராயணனை நினைத்த இடமெல்லாம் நொடியில் தூக்கிச்
 செல்கிறேனே,உன்னிலும்   நானேஉயர்ந்தவன்  என்றா  கருதுகிறேன்”  என்று இடித்தான்  கருடன் பேச்சு  வளர்ந்தது. ரெண்டு பேர்  மோதினால்  மற்றவர்களுக்கு  கொண்டாட்டம் என்பது  நமக்கு  மட்டுமாசொந்தம். அங்கும் சிரிப்பொலி கேட்டது.இருவரும் திரும்பி பார்க்கசக்ரம்  குறுக்கிட்டது,

நாராயணனை  படுக்கும்போதும் பிரயாணத்திலும் சுமக்கும்  நீங்கள்  யார் பெரியவர் என்று  ஏன்  வறட்டு வேதாந்தம்பேசுகிறிர்கள்?? 
என்னைப்  பாருங்கள்.  நான் நாராயணனை சுமக்க வில்லை.  அவன் தான் என்னை  வலக்கரத்தில் சுமக்கிறான்.  என் சக்தி அவனுக்கு பெருமையை அளிக்கிறது.  எங்குசென்றாலும்  வெற்றிகரமாய்  எதிரிகளை வதம்செய்து நாராயணனின்  கரத்திற்கு  திரும்பும் நான்  ஏதாவது  என்னை  பற்றி டம்பம் அடித்து கொள்கிறேனா?  புரிந்துகொண்டு உங்கள் வேலையை  அமைதியாக   செய்யுங்கள்”” 
 என்று  அமர்த்தலாக சக்ரம்சொல்லியது.  மற்றவரை  கர்வத்தோடு  ஒரு முறை  பார்த்தது.  ஆதிசேஷனும்  கருடனும்  சுதர்சன சக்கரத்தின்  பேச்சை ஏற்பவர்களா?  அவர்கள்  இருவருக்கும்  ''இந்த  பேச்சில்  கர்வம் தான் உள்ளது.எனவே இத்தனை நேரம் 
பேசாமல்  இருக்கும்  சங்கு  கிட்டே  ஞாயம்  கேட்போம் '' என  சங்கின் பக்கம் திரும்பின.

அமைதியாக  இத்தனையும்  கவனித்த  சங்கு பேசாமல் தலையை
  மட்டும் ஆட்டியது “பேசமாட்டேன்” என்றதுநீ  உன்  அபிப்ராயம்  
சொல்லியே  ஆகவேண்டும்” என்  மூவரும் கேட்க  அமைதியாக சங்கு சொல்லியது”

“நம்  நால்வருக்கும்   நாராயணனால் தான் பெருமைஎன் வாயால் 
நான்  எந்த   தவறானவார்த்தையும்  பேச முடியாதுஏனெனில்  
 என்மீது தான்  ஸ்ரீமன்  நாராயணன் திருவாய்மலர்ந்தருளி  சப்தம் 
 வெளிப்படுகிறதுஅவன்காற்றே என் ஜீவ நாதம்  எனக்கென ஒருசெயலுமில்லை.ஏன்  உங்களையும் சேர்த்துதான்உலகில் அவனின்று ஓர்  அணுவும் அசையாது”.
 உங்களின்  தன்மையும்  நாராயணின் கருணையால்  உங்களிடம் சேரும்அபரிமிதசக்தியும்   உணர்ந்து  உள்ளம்அமைதியுற்று என் கடன் பணி  செய்துகிடப்பதே  என்று இருங்கள்”. 

இதெல்லாம்  கவனித்துகொண்டிருந்த நாராயணன் ஒன்றுமறியாதவனாய் திரும்பினான்

No comments:

Post a Comment