Thursday, August 14, 2014

தயிர் (மோர்) வடை குழம்பு


தேவையானவை:
1. உளுந்து – 1 கப்

2. பச்சரிசி – 1 தேக்கரண்டி


3. துவரம் பருப்பு – 1 தேக்கரண்டி


4. பச்சை மிளகாய் – 2


5. தயிர் – 2 கப்


6. வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)


7. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி


8. எண்ணெய்


9. கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு – தாளிக்க


10. கறிவேப்பிலை


11. உப்பு
செய்முறை:
உளுந்து ஊற வைத்து, உப்பு சேர்த்து கெட்டியாக (வடை மாவு பதத்தில்)

அரைக்கவும்.

 பச்சரிசி, துவரம் பருப்பும் தண்ணீர் வீட்டு ஊற வைத்து, பச்சை மிளகாய்

சேர்த்து நன்றாக அரைக் கவும்.

1 கப் தயிரில் தண்ணீர் சேர்த்து அடித்து மோர் ஆக்கவும்.

 பாத்திரத்தில் எண் ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை

பருப்பு போட்டு தாளிக்க வும்.
இதில் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

இத்துடன், அரைத்த மசாலா, மோர், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தேவைக்கு

தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

 அரைத்த உளுந்து மாவை வடை போல் தட்டி, எண்ணெயில் பொரித்து

எடுக்கவும். மோர் குழம்பு கொதி த்ததும் ஆர விடவும்.

ஆரிய பின் இதில் மிச்சம் இருக்கும் 1 கப் தயிர் ஊற்றி கலந்து, சுட்ட வடை

போட்டு ஊற விட வேண்டும்.

No comments:

Post a Comment