Tuesday, July 29, 2014

பழக்க வழக்கங்கள்

 பழக்க வழக்கங்கள் எப்போதும் ஒரே மாதிரி இருப்பவை,ஆனால், இப்போது அது காலத்திற்கு ஏற்றவாறு மாறு கிறது.

சிலசமயம் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறும், சமயத்துக்கு ஏற்ற வாறும் ,மனசுக்கு   ஏற்றவாறும் ,மனிதர்களுக்காகவும் மாறுகிறது.

ஆனால் சொல்வதென்னவோ எங்களுக்கு இது தான்  வழக்கம்னு !

அந்தக் காலத்தில் சிலவைகள் காலத்துக்கு தகுந்தவாறும், என்னக் கிடைத்ததோ அதற்கு தகுந்தாப்போல செய்தார்கள்.
இப்போ எவ்வளவோ நாம் மாற்றினதுடன் மற்றவர்களையும் மாற்றி விடுகிறோம்.போராதக் குறைக்கு மாற்றவும் முயற்சிக்கறோம்.அவர்கள் நம் மனதுக்கு ஏற்றவாறு மாறவில்லை என்றால் அவர்களுடன் 'டூ 'விட்டு விடுகிறோம்.

பிள்ளைகள் வளர்ப்பைப் பார்த்தால் , இப்போ பிறக்கும் குழந்தைகளுக்கோ, பெற்றவர்களுக்கோ பொறுமை என்பதே இல்லை,ஏன் கண் எதிரில் சின்ன குழந்தைகளை போட்டு அடித்து  மொத்துகிறார்கள் , பிள்ளைகளைப் பார்துக்க் கொள்ள ஆயா வேண்டியிருக்கிறது, கணவன் மனைவி இருவரும் சம்பாதிக்கவேண்டி குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை மற்றவர்களிடம் ஒப்படைத்து விட்டு அக்கடான்னு இருக்கிறார்கள், அந்தக் குழந்தைக்கு வேலைக்காரியே அம்மா அப்பா எல்லாம். பிறகு வளர்ந்து எங்கே நல்ல வழக்கங்கள் வரப் போகிறது?


No comments:

Post a Comment