Tuesday, May 13, 2014

பெரியவா சரணம்!


காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமி தபோவனம் - கோவிந்தபுரம் பற்றிய எனது பகிர்வினைப் பகிர ஒப்புதல் அளித்த இந்த முகனூல் பெரியவா கோவிலின் தர்மகர்த்தாக்கள் அனைவருக்...கும் ஸ்ரீமஹாஸ்வாமியின் அனந்தகோடி பக்தாள்களின் சார்பாக முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
முதன்முதலாக இந்த தலத்திற்குச் சென்று வந்ததை நினைவுகூர்கையில் ஆனந்தப் படுகின்றேன். அன்றைய தினம் இந்த பூஜையிலும் பிக்ஷாவந்தனத்திலும் கலந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது, எனது முதல் பிரார்த்தனையே இதனில் அனைவரையும் கலந்து கொள்ள வைக்க என்னையும் இராமாயன சிற்றணில் போலிருக்கும் பாக்கியம் வேண்டியதே! சத்தியம் பகர்கின்றேன்! அந்த வேண்டுதலை செவிமடுத்து இன்றளவும் ஸ்ரீமஹாஸ்வாமியின் க்ருபையில் பற்பல பக்தகோடிகள் சேர்ந்தவண்ணமாயுள்ளனர்.
அருட்கூர்ந்து அனைத்து பக்தர்களும் இந்த புண்ணிய கைங்கர்யங்களில் தாமும் கலந்துகொண்டு தத்தம் உறவினர்களும், நட்புகளும் கலந்து கொண்டு குருபரம்பரையின் பேரருளைப் பெற வேண்டி இதை அனைவரிடமும் பகிரும்படியும் நமஸ்கரித்து வேண்டுகின்றேன்.
பெரியவா சரணம்! பெரியவா சரணம்! ஸ்ரீமஹாபெரியவா கடாக்ஷம்!!

No comments:

Post a Comment