நம் பூர்வ கர்மாவின் பயனாக இந்த துக்கங்களுக்கு நாம் முன்னமேயே விதைபோட்டிருக்கிறோம். இதில் இருந்து தப்ப வழியில்லை.
ஒவ்வொருவரும் தானே மகா புத்திசாலி, தானே மிகவும் யோக்கியன், தானே ரொம்ப அழகு என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.
அதுபோல், அதிகத் துன்பமுள்ளவனும் தானே என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.
நம் துக்கங்களையெல்லாம் ஞானமாகிய தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும்.
அப்போதும் துக்க ஹேதுவான விஷயங்கள் இருக்கத்தான் செய்யும்.
ஆனால், ஜலத்துக்குள் இருக்கிற மாதிரி அப்போது துக்கம் பரம லேசாகி விடும்.
மனநிறைவு: இன்னொருத்தனைவிட அதிகமாக இருக்கவேண்டும் என்ற போட்டி மனப்பான்மை மனித சுபாவம்.
இம்மாதிரி போட்டி இருக்கிற வரையில் மன நிறைவு யாருக்கும் உண்டாகாது.
பொருளாதார "வசதி" மட்டும் உண்டாவதால் இந்த போட்டி குறையாது.
No comments:
Post a Comment