Tuesday, March 11, 2014

நடக்கக்கூடியது-நடக்க முடியாதது= இரண்டுமே பெரியவாளுக்குத் தெரியும்.

"காப்பி, டீ சாப்பிட வேண்டாம்; பட்டுப்புடைவை
மற்றும் பட்டு வேட்டி அணிய வேண்டாம்.
ஆடம்பரங்களைத் தவிர்த்தாலே, பாதி
நிம்மதி வந்துவிடும்" என்று ஒரு நாள்
உபன்யாசத்தில் மகாபெரியவாள் சொன்னார்கள்.

பிரபல பௌராணிகர் ஒருவர் இதைக் கேட்டுக்
கொண்டிருந்தார்.

மறுநாள் காலையில் தரிசனத்துக்கு வந்தார்.

"...ஹி...ஹி...நேத்திக்குப் பெரியவா
உபன்யாசத்தைக் கேட்டேன். இனிமே ஊர்
ஊராகப் போய், காபி,டீ வேண்டாமென்று
பிரசாரம் பண்ணப் போகிறேன்..."
என்றெல்லாம் உணர்ச்சிவசப்பட்டு
சொல்லிக்கொண்டே போனார்.

பெரியவா பொறுமையாகக் கேட்டுக்-
கொண்டிருந்தார்கள்.

"அதெல்லாம் வேண்டாம். முதல்லே,
உங்க குடும்பத்திலே காபி-டீயை
நிறுத்துங்கோ. உங்க பத்னியை,
நூல் புடவை கட்டிக்கச் சொல்லுங்கோ.
உபன்யாஸப் பூர்த்தி அன்னிக்கு,
பட்டுப்புடவை-வேஷ்டி ப்ரெஸண்ட்
பண்ணப்படாதுன்னு சொல்லிடுங்கோ..

பூணூல் போட்டவா முன்னே பின்னே
ஆனாலும் சந்த்யாவந்தனம் பண்ணணும்;
மத்தவா ராமநாமம் சொல்லணும்னு
பிரசாரம் செய்யுங்கோ போதும்..."

நடக்கக்கூடியது-நடக்க முடியாதது=
இரண்டுமே பெரியவாளுக்குத் தெரியும்.

No comments:

Post a Comment