Tuesday, March 11, 2014

ஒரு ஏழை ஹரிஜன ஸ்திரி,

ஒருநாள் ஸ்ரீ பெரியவர்கள் ஒரு சாலை வழியே
சில பக்தர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
வழியில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த பலர்,
பெரியவர்களின் தரிசனத்திற்காகக் கூடியிருந்தனர்.
அக்கூட்டத்தில் சில ஹரிஜனங்களும் இருந்தார்கள்.
பெரியவர்கள் கிராம மக்களுக்கு தரிசனம் கொடுக்க
நின்றுவிட்டார்கள்..

ஒரு ஏழை ஹரிஜன ஸ்திரி, இடுப்பில் சிறு
குழந்தையுடன் ஸ்ரீ பெரியவர்களை சிறிது நேரம்
தரிசித்தவண்ணம் நின்றிருந்தாள்.அப்போது
குழந்தை அழ ஆரம்பித்தது.தாய் சமாதானப்
படுத்தியும் அழுகை அதிகமாயிற்று.

பெரியவர்கள் அந்தப் பெண்மணியையும்
குழந்தையும் பார்த்து, குழந்தை பசியினால்
அழுகின்றதென அறிந்து, அருகிலிருந்த
அந்தக் கிராமப் பஞ்சாயத்துத் தலைவரை,
உடன் பசும்பால் வாங்கி வந்து கொடுக்கச்
சொன்னார்கள். சில நிமிடங்களில் பால்
கொண்டு வரப்பட்டு, அவ்வம்மாளிடம்
கொடுக்கப்பட்டது.குழந்தைப் பாலைப்
பருகியபின் அழுகை நின்றது.

பிறகு தன்னுடன் வந்த பக்தர் ஒருவரைக்
கூப்பிட்டு பெரியவாள்,அந்த அம்மாளுக்கு
நூறு ரூபாய் கொடுக்கும்படி சொன்னார்கள்.

அந்த அம்மாள், "கடவுளைப் போல் குழந்தைக்குப்
பால் கொடுத்தார்கள்" என்று கூறி விழுந்து
கும்பிட்டாள்.

மற்றும் அக்கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த
ஹரிஜனக் குழந்தைகளுக்கு, ஸ்ரீ பெரியவாளின்
ஆக்ஞைப்படி வாழைப்பழங்களும்,கற்கண்டும்
கொடுக்கப்பட்ட பின்னரே பெரியவர்கள்
அங்கிருந்து மறுபடி நடக்கலானார்கள்.

No comments:

Post a Comment