Sunday, March 30, 2014

ஊத்துக்காடு வேங்கடகவி.!!


கண்ணபிரானை நேரில் தரிசித்து கவிபாடிய அருளாளர்களில் , வடநாட்டு ஜெயதேவருக்கு இணையானவர் !!


இவருக்கு , பகவான் ஸ்ரீகிருஷ்ணனே குருவாக இருந்து அருள்பாலித்ததாகக் கூறுவர்.!
கும்பகோணத்துக்கு அருகேயுள்ள திருத்தலமான ஊத்துக்காட்டில் வாழ்ந்தவர் !
இங்கு பகவான் கிருஷ்ணன் , ' காளிங்க நர்த்தனராய் ' எழுந்தருளி அருள் பாலிக்கிறார் !
பார்வையற்ற வேங்கடகவிக்கு , இவரே இஷ்ட தெய்வம் ! இவர் மீது எண்ணற்ற கீர்த்தனைகளை உருகி , உருகி பாடியிருக்கிறார் வேங்கடகவி !


பொதுவாக கிராமங்களில் மார்கழி மாதத்தில் ராதா கல்யாணம் வெகு விசேஷமாக நடை பெறும் !...


அவ்வகையில் , வேங்கடகவியும் ஒரு சமயம் தனது காளிய நர்த்தன கிருஷ்ணருக்கு ராதா கல்யாணம் செய்தார் : வைபவத்தின்போது , தானும் , தன்னுடன் உள்ளவர்களும் கோகுலத்தில் இருப்பதாகவே தன் ' மனக்கண்கள் ' மூலம் அவர் கற்பனை செய்து 


.......அடியார்கள் கண்ணனை ஆடி ஆடி ....அசைத்து ..அசைத்து தூக்கி வருவதை அகக்கண்களால் ரசித்து ..... மனமுருகி பாடல்களை பாடியவாறே வீதியுலா வந்து கொண்டிருக்க .......


அடியார்களும் அவரை பின்பற்றி பாடியபடி வந்து கொண்டிருந்த அக்கணம் .....
வீதியின் மற்றொரு முனையில் ...அன்று திருவாதிரை தினம் என்பதால், பக்கத்து ஊரான ஆவுரிலிருந்து நடராஜபெருமானின் ஊர்வலம் !....


வீதியின் ஒரு பக்கம் பஜனை , நாமாவளி , நாமசங்கீர்த்தனம் !


இன்னொரு பக்கம் , ஸ்ரீருத்ரம் - மேளம் !


பாடிக்கொண்டிருந்த வேங்கடகவிக்கு , நடராஜ பெருமானின் வருகை தெரிந்து விட .....
சட்டென்று அவரின் மனதில் ஒரு எண்ணம் !


' இது கோகுலமாயிற்றே ....ஓ ...காளியன் மீது கண்ணன் ஆடிய நடனத்தை கண்டு களிக்க , நடராஜனே வந்து விட்டான் போலும் ' 


மனதில் தோன்றிய அந்த எண்ணமே ,மறுகணம் பாடலாய் வெளிப்பட்டது அவரிடமிருந்து :....
'' ஆடலை காண தில்லை அம்பலத்து இறைவனும் .....தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தான் ''.....


என்று பாடியவரின் மனதில் இப்போது மீண்டும் ஒரு எண்ணம் !' குழந்தை கண்ணனின் நடனத்தை பார்த்து எவரேனும் கண் வைத்து விட்டால் ?.......அதிலும் பரமேஸ்வரனுக்கு மூன்று கண்களாயிற்றே ' 


பதறிப்போன அவர் அடுத்தகணம் ..


'' கனக மணி அசையும் உனது திருநடனம்
கண் பட்டு போனால் மனம் புண் பட்டு போகுமே ''


......பார்வையற்ற வேங்கடகவியின் உள்ளத்தில் உதித்த இந்த எண்ண ஓட்டங்களே , நாம் அனைவரும் அறிந்த பிரபல கீர்த்தனையான ...


'' ஆடாது அசங்காது வா ..கண்ணா ...'' 


எனும் பாடல் !!

1 comment:

  1. https://www.youtube.com/playlist?list=PL4ljP4IezNBLqn1W5rR1s71wd5dgw7BWP

    ReplyDelete