Sunday, March 30, 2014

.கடி ஜோக்ஸ் 83

ஆசிரியர்: பள்ளிக்கூடத்துக்கு வரும்போது இப்படியா தலையை பிரிச்சுப் போட்டு கிட்டு வாறது?

மாணவி:நீங்க தானே டீச்சர் நேத்திக்கு பூரா பின்னிடுவேன் பின்னிடுவேன்னு சொல்லி கிட்டு இருந்தீங்
க...
.........................................................

சீனாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை இந்தியப் பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டாள். முதல் வருடத்தில் அவர்களுக்கு அழகான குழந்தை பிறந்தது. மறு வருடம் யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த சீன இளைஞன் இறந்து போனான்.

இந்தியப் பெண்ணிடம் துக்கம் விசாரிப்பதற்காக உறவினர்களும், அந்தப் பகுதி மக்களும் கூடி அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இரண்டு வருடத்தில் இந்தியப் பெண்ணின் காதல் கணவன் இறந்து போனது அவர்களுக்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.
அந்தப் பெண்ணோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் "எனக்குத் தெரியும்! எனக்குத் தெரியும்!" என திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
நீண்ட நேரமாக அவள் ஒரே வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்ததைக் கண்ட ஒரு இளைஞன் அவளிடம் சென்று கேட்டான்.
"சகோதரி! எனக்குத் தெரியும் என்கிற வார்த்தையை நீண்ட நேரமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாய். அர்த்தம் புரியாமல் கேட்பதற்குச் சங்கடமாக இருக்கிறது. இப்பொழுதாவது தெளிவாகச் சொல் உனக்கு என்ன தெரியும்?"
அழுது கொண்டே சொன்னாள்.
"எனக்குத் தெரியும். சைனா பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும் என்று...!"
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

,,,,இரு உயிர் நண்பர்களின் கதை..!
பாக்கல, கேக்கலன்னு இரண்டு பேர் உயிர் நண்பர்களா இருந்தாங்க..
ஒரு நாள் பாக்கல சொன்னத கேக்கல கேக்கல..

கேக்கல காட்டியத பாக்கல பாக்கல..
பாக்கல சொன்னத ஏன் கேக்கலன்னு கேக்கலகிட்ட பாக்கல கேக்கல..
கேக்கல காட்டியத ஏன் பாக்கலன்னு பாக்கலகிட்ட கேக்கல கேக்கல..
மொத்ததில கேக்கல கேக்கல, பாக்கல பாக்கல..!
..............................................
" நண்பர் வீட்டுக்கு விருந்துக்கு போனாயே அங்கு என்ன சாப்பிட்ட?"
" 49 இட்லி"
" அடப்பாவி. கூட ஒரு இட்லி சாப்பிட்டு 50 ஆக ஆக்கியிருக்கக் கூடாதா?"
"கூட ஒரு இட்லி கேக்க கூச்சமாயிருந்தது"
..............
மூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன. அப்பொழுது, திடீரென்று ஒரு கரப்பான்,
"வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்.." என்று பாட துவங்கியது. உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன.
ஏன் தெரியுமா?
..
..

..
..
ஏன்னா, அது "HIT" ஸாங்!!!
.....................................................................................................................................
முதல் முறையாக நம்ம தல (பேர சொல்லாமலேயே புரிஞ்சிப்பீங்க ) சைனாவுக்கு விமானத்தில் பயணம் செய்கிறான். விமானம் புறப்பட்ட சில நொடிகளில் நம்ம தலைக்கு காது ரெண்டும் அடைத்துக் கொள்கிறது. உடனே பணிப் பெண்ணை கூப்பிடுறான் நம்ம தல .
சரவணன் :அலோ எச்குச்மி....எனக்கு காது அடைக்குது...
பணிப் பெண்: பயப்படாதீங்க சார். முதல் முறை எல்லாருக்கும் வர்றது தான். இந்தாங்க சுவிங் கம். இனிமேல் காது அடைக்காது, பயம் வராது....
சரவணன் :ரொம்ப நன்றிங்க ..நீங்க கொடுத்த சுவிங் கம் போட்டதால தான் காது அடைக்கல, பயம் போயிருச்சி.. ஆனா சுயிங் கம் காதுக்குள்ள இருந்து வர மாட்டேங்குது. எப்பிடி வெளியே எடுக்கறது?
,,,,,,,,,,,,,,,

1.Sun டிவி ல சொர்க்கம் பார்க்கலாம் , ஆனா,சொர்கத்துல Sun TV பார்க்க முடியுமா ?
2. Chairman chair மேலே உட்காரலாம், ஆனா watchman watch மேலே உட்கார முடியுமா ?
3.Tool box-la tool-sa பார்க்க முடியும் , ஆனா match box-la match -a பார்க்க முடியுமா?
4.புயலால கரைய கடக்க முடியும் , ஆனா கரையால புயல கடக்க முடியுமா?
வாழ்க்கைல நம்மால முடியாதது எவ்வளவோ இருக்கு. சிந்திங்க மக்களே ! 
.....................................

நீதிபதி : சாகறதுக்கு முன்னாடி கடைசி ஆசை ஏதாவது இருந்தா சொல்லு.
குற்றவாளி : என்னை தலைகீழா தூக்குல போடணும் எசமான்!
...............................................................................

மருத்துவமனைக்கு ஒருவரைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறார்கள். அவர்களுடன் கூலாக நம்ம தல சரவணன் ....
டாக்டர்: என்னய்யா ஆச்சு...இந்தாளுக்கு வாயில நுரை தள்ளியிருக்கு?
சரவணன் : நான் வேலை செய்யிற ஹோட்டல்ல சாப்பிட வந்தாரு. சாப்பாட்டுல பூச்சி இருந்துருக்கு, அத தெரியாம உயிரோட முழுங்கிட்டாரு...
டாக்டர்: அவ்வளவு தானே... அதுக்கு ஏன் வாய்ல நோர தள்ளிருக்கு ?
சரவணன் : பூச்சிய உயிரோட முழுங்கிட்டாருல்ல... அது வயித்துல போய் ஏதாவது பண்ணிடுச்சின்னா? அதான் வாய்குள்ள ஹிட் அடிச்சி பூச்சிய சாகடிச்சிட்டேன்!
டாக்டர் : ......, ....., ......, ......, ......., ........, ......, ......, ....., ......, ......, ......., ........, ......, ......, ....., ......, ......, ......., ........, ......,
((இங்கேயும் டாக்டர் திட்டிய கேட்ட கேட்ட வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டுள்ளது...))
.............................................................................
தன் மகனை அழைத்த தந்தை, “நாம் இருவருமே இனிமேல் தவறு செய்யக் கூடாது. யார் எந்தத் தவறு செய்தாலும் அதற்கு அபராதமாக இந்த உண்டியலில் ஒரு ரூபாய் போட வேண்டும். அப்படிச் சேரும் தொகையைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட வேண்டும்” என்றார்.
மகனும் இதற்கு ஒப்புக் கொண்டான்.
அவரின் திட்டம் அப்படியே நடந்தது. திடீரென்று அவர் உடல்நிலை மோசம் ஆயிற்று. உண்டியலில் இருந்த பணத்தை எல்லாம் பிள்ளையார் கோயிலுக்குத் தந்துவிட்டு மருத்துவ மனைவில் சேர்ந்தார்.
மகனைப் பார்த்து, “நான் இல்லாத போதும் இந்தப் பழக்கத்தை விட்டு விடாதே. ஒரு தவறுக்கு ஒரு ரூபாய் உண்டியலில் போட்டுவிடு” என்றார்.
மருத்துவ மனையில் மூன்று மாதம் தங்கிய அவர் வீடு திரும்பினார். உண்டியலைத் திறந்து பார்த்தார். அதில் ஒரே ஒரு ரூபாய் தான் இருந்தது.
மகிழ்ச்சி அடைந்த அவர் தன் மகனை அழைத்தார்.
“இந்த மூன்று மாதத்தில் ஒரே ஒரு தவறு தான் செய்தாயா?” என்று கேட்டார்.
“இல்லை அப்பா! உண்டியலில் முந்நூறு ரூபாய் பணம் சேர்ந்தது” என்றான் அவன்.
“அந்தப் பணத்தைப் பிள்ளையார் கோயிலுக்குத் தந்து விட்டாயா?” என்று கேட்டார் அவர்.
“அப்பா! உண்டியலைத் திறந்து அந்தப் பணத்தை நானே எடுத்துக் கொண்டேன். அந்தத் தவறுக்காக நீங்கள் சொன்னபடி ஒரு ரூபாயை உண்டியலில் போட்டு விட்டேன்” என்றான் அந்த கெட்டிக்கார மகன்
,,,,,,,,,,,,,,,,,,,,,,.,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

டாக்டர் : சிஸ்டர், அந்த 2ம் நம்பர் பேஷன்டோட டெம்பரேச்சர் எடுத்தீங்களா....?

நர்ஸ்: அய்யய்யோ டாக்டர், நான் எடுக்கலியே...எப்போ காணாம போச்சி டாக்டர்....?!!!
.......................................................................
முழு ஆண்டுத் தேர்வை கான்வென்டில் முடித்து விட்டு விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருந்த மூன்றாம் வகுப்பு படிக்கும் தங்களது ஒரே மகனை விழுந்து விழுந்து கவனித்தனர் அவனின் பெற்றோர்கள். மகனின் மீது அதிக அன்பு வைத்திருப்பது யார் என அவர்களுக்குள் சர்ச்சை எழுந்தது. கணவன் சொன்னான்.
"பிறந்தது முதல் மார்பிலும் தோளிலும் போட்டு அவனை வளர்த்தவன் நான். அவன் ஒரு பொருளைக் கேட்டு நான் வாங்கித் தராமல் போனதில்லை. அதனால் அவனுக்கு என் மீது தான் பாசம் அதிகமாக இருக்கும்."
வரிந்து கட்டிக் கொண்டு சண்டைக்கு வந்தாள் மனைவி.
"அதெப்படி நீங்க சொல்லலாம்? அவனக்கு வாய்க்கு ருசியா சமைச்சுப் போட்டு அவனுக்கு என்னென்ன பிடிக்கும்னு பக்கத்துல இருந்து பார்த்து பார்த்து செய்திருக்கேன். கண்டிப்பா அவனுக்கு என் மேல தான் அதிக பாசம் இருக்கும்."
சர்ச்சை அவர்களுக்குள் நீண்டு கொண்டு போகவே அவர்களாக சமாதானம் செய்து அவர்களுக்குள் ஒரு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு ஒரு முடிவிற்கு வந்தார்கள். அந்த ஒப்பந்தத்தின்படி இருவரும் எதாவது ஒரு சோதனை நடத்தி அதன் மூலம் மகனுக்கு யார் மீது அதிகம் பாசமிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
கணவன் சொன்னான்.
"நாம் குழந்தை மீது மறைந்திருந்து கல்லைக் கொண்டு எறிய வேண்டும். கல் குழந்தை மீது பட்டதும் வலி தாங்காமல் அவன் "அப்பா!" என கத்தினால் அவனுக்கு என் மீது பாசம் அதிகம். பதிலாக "அம்மா!" என கத்தினால் உன் மீது பாசம் அதிகம். இதன் மூலம் ஒரு முடிவிற்கு வருவோம்."
மனைவியும் கணவனின் யோசனையை ஏற்றுக் கொண்டாள். இருவரும் மறைந்திருந்து மகனின் மீது கல்லை எறிந்தார்கள். அவர்களின் திட்டப்படி கல் கன கச்சிதமாக மகனின் மீது பட்டது. அவன் யார் பெயரைச் சொல்லி கத்தப்போகிறான் என்பதைக் காண ஆவலாய் இருந்தார்கள்.
மகன் கத்தினான்.
"எந்தப் பன்னாடை என் மேல கல்லை எறிஞ்சது? அந்த எருமை என் கையில கிடைச்சதுன்னா இன்னைக்கு டர்ர்ர்ர்ரு தான்,,,,!"
.....................................................................
யாராவது உன்னை "லூசுன்னு " சொன்ன ....... கூல் லா இருங்கள்,
" குரங்கு " அப்படின்னு சொன்னால் குமுறாமல் அமைதியாக இருங்கள்,
" கழுதை " அப்படின்னு சொன்னால் கதறாம கமுக்கமா இருங்கள்,
ஆனால்
" நீங்க ரொம்ப அழகு " அப்படின்னு யாராவது சொன்னால்...... தூக்கி போட்டு மிதிங்கள்
ராஸ்கல்..... தமாசு எல்லாம் ஒரு லிமிட்டோட இருக்கனும்
,,,,,,,,,,,,,

,,"சார்! எனக்கு முன்பெஞ்சுலே உக்கார்ந்து பரீட்சை எழுதினவனைப் பார்த்து.. அப்படியே வரிக்கு வரி காப்பியடிச்சு எழுதினேன்..
இருந்தாலும் அவன் பாசாயிட்டான்.. நான் ·பெயிலாயிட்டேன் !"
" அது எப்படி?"
" அப்புறம் தான் சார் தெரிஞ்சது. விஷயம்.. அவன் படிக்கிறது ஆறாவது.. நான் படிக்கிறது ஏழாவது!"

No comments:

Post a Comment