Sunday, March 9, 2014

கடி ஜோக்ஸ் 75


...கணவன்: ஊரெங்கும்ஒரே காய்ச்சலா இருக்கு!குடிக்க வெந்நீர் கொடு!
மனைவி: ஏங்கஇப்படி பயப்படுறீங்க?மூளைக் காய்ச்சல்தான்பரவுது!
அது எப்பிடி உங்களுக்குவரும்?
.....................................................
தாத்தா! இனிமே கம்ப்யூட்டர்படிச்சாதான்வேலை கிடைக்கும்!

அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?
..................................
டேய்! நாளைக்கு ஒரு பெண்பார்க்கப் போறேன்!வந்துவிடு!
கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?
................................................................
டாக்டர்! தினமும்ஒரு பச்சை முட்டை சாப்பிடசொன்னீங்க! ஆனால் எங்கள்கோழி வெள்ளைமுட்டைதான் போடுது! என்ன செய்ய?
...............................................................................
என் பூட்டை உடைத்து 5லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?
......................................................................
படிச்சி முடிச்சப்புறம் என்னசெய்ய போறே?
புக்கை மூடிடுவேன்!
.........................................................................
காலில் என்ன காயம்?
செருப்பு கடித்து விட்டது!
பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா?
..........................................................

குளிச்ச  பிறகு எதுக்கு தலையைதுவட்டுறோம்?
தெரியல!
குளிக்கும் போதே துவட்டமுடியாதே!
..............................

டாக்டர்! இரண்டு இட்லியைக்கூட முழுசா சாப்பிடமுடியல!

என்னாலையும் முழுசா இரண்டு இட்லி mசாப்பிட முடியாது!
புட்டு புட்டுதான் சாப்பிடனும்!
......................................................................
டாக்டர்! நீங்க எழுதிக்கொடுத்தமாத்திரை எங்கேயும்கிடைக்கல!

மன்னிக்கணும்! அது என்னோடகையெழுத்து!மாத்திரை எழுத மறந்து விட்டேன்!
.............................................................
டேய்! ஒரு 10 ருபாய்இருந்தா கொடு!என்னிடம் சுத்தமா இல்ல!

பரவாயில்லை! கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!
...............................................................
இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா?

கிடைக்காது! கூரை வீடு,ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!
......................................................
சர்தார்: தம்பி நீ என்னபடிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து!
அதையும் தலை கீழா படிச்சிருக்கே!
.....................................................................
அப்பா: எத்தனை பதில் தவறாக எழுதி இருந்த?

மகன்: ஒன்னே ஒண்ணுதான்!

அப்பா: ஒன்னே ஒன்னுதானா?

அப்ப மத்த 9 பதிலும் சரியா?

மகன்: மத்த ஒன்பதா? நான்தான் அந்த ஒன்பதுக்கும்பதிலே எழுதலையே!
......................................
அது சரி...இந்த அப்பாவி கணவர்..மிக்க தமிழ் பற்று உள்ளவர் போலும்....(உபரி தகவல் - எனக்கும் தமிழ் பற்று அதிகமே...இருந்தாலும்...அந்த அப்பாவி கணவர் நான் தானோ என யாரும் சந்தேக ப்படக்கூடாது..நான் அவர் இல்லை என்றும் உறுதிப்படுத்தி கொள்ள விரும்புகின்றேன்.....) மனைவிக்கு ஒரு கடிதம்! மரியாதைக்குரிய மனைவி அவர்களுக்கு, வணக்கம். நேற்று நீங்கள் செய்த குழம்பில் உப்பு சற்றே தூக்கல் என்பதைப் பணிவன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். பரவாயில்லை, கரிக்க..... கரிக்கக் கஷ்டப்பட்டு சாப்பிட்டுவிட்டேன். தவிர, சட்டையில் பிய்ந்துபோயிருந்த பட்டனைத் தைத்துத் தரும் படி தங்களிடம் தாழ்மையுடன் விண்ணப்பித்திருந்தேன். ஏதோ மறதியில், அதைச் செய்யாமல் விட்டுவிட்டீர்கள்.

 ஊக்கு மாட்டி அட்ஜஸ்ட் செய்து கொண்டேன். அப்புறம்... நேற்று மழையாக இருந்ததால், உங்கள் உடைகளைத் துவைத்து, உலர்த்த முடியவில்லை. ஆனால் அதற்காக நீங்கள் என் மீது எறிந்த சுடு சொற்கள் என் நெஞ்சை மிகவும் ரணப் படுத்தி விட்டன என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதையெல்லாம் உங்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும் என்ற கடமை எனக்கு இருக்கிறது என்று கருதியே எழுதுகிறேன். மற்றபடி தங்கள் மனதை புண்படுத்தும் நோக்கம் எதுவும் எனக்கு இல்லை என்பதையும் தெளிவுப் படுத்த விரும்புகிறேன். இப்படிக்கு, அன்புள்ளக் கணவன்.  

No comments:

Post a Comment