Sunday, March 9, 2014

கடி ஜோக்ஸ் 63

1.''மாப்பிள்ளை ஃபேர் மாநிறம்னு எப்படி இருந்தாலும் ஓ.கே. . ! ஆனா
பணக்கார மாப்பிள்ளை வேண்டவே வேண்டாம். . ! அன்பு காட்டுறதுல
பணக்காரங்களா இருந்தா போதும். . !

2.அப்புறம் ஒரு சின்ன ஆசை உண்டு. . !அவர் ஒரு 'யமஹா ஆர் 120’ வண்டி வெச்சுருக்கணும் அல்லது வாங்கணும். . !இதுவரைக்கும் யார் கூடவும் நான் பைக்ல போனதில்ல. . !பைக்ல பின்னாடி உட்கார்ந்து போற த்ரில்லை அவர் எனக்குக் காட்டணும். . !

3.குழந்தைகள்னா ரொம்பப் பிடிக்கும். . ! குவார்டர்லி, ஹாஃப் இயர்லி,
சம்மர் லீவுக்கு அவரோட சொந்தக்காரங்க பசங்க, என்னோட சொந்தக்காரங்க பசங்கனு எல்லா குழந்தைகளையும் வீட்டுக்கு கூப்பிட்டு, அமர்களம் பண்ணணும். . !

4.ஸ்நாக்ஸ் வாங்கிட்டு வர்றது, தீம் பார்க் டிக்கெட் எடுத்துக் கொடுக்கிறது, டிராவல் அரேஞ்மென்ட் பண்றதுனு எல்லாம் அவர் சப்போர்ட்டிவ்வா இருக்கணும். . !

5.அப்புறம் அடிக்கடி அவர் வேஷ்டி கட்டணும். . ! ஆனா, புடவை கட்டச் சொல்லி என்னை கம்பல் பண்ணக்கூடாது. . !

6.அவங்க அம்மா பேசுறதைக் காதால கேட்கலாம். . ! ஆனா ஃபாலோ பண்ணக் கூடாது. . !

7.மீனாட்சி ஆட்சிதான் இருக்கணும் வீட்டுல. . !

லீலாவதி, எம்.காம் சென்னைப் பல்கலைக்கழகம்:
*******************************************

1.''மாமனார், மாமியார் கூட இருக்கறதுல பிரச்னை இல்ல. . ! ஆனா மொத்தமா பெரிய கூட்டுக்குடும்பம் வேண்டவே வேண்டாம். . !

2.மாமியாரையும் மாமனாரையும் முடிஞ்சளவு அட்ஜஸ்ட் பண்ணிப்பேன். . !

3.மாசம் ஒருமுறை ஜாலியா வெளிய கூட்டிட்டுப் போவேன். . !

4.மாமியாரை சுடிதாரும், மாமனாரை ஜீன்ஸும் போட வெச்சு
சந்தோஷப்படுத்துவேன். . !

5.கணவரைப் பொறுத்தவரைக்கும், கலகல டைப்பா இருக்கணும். . !

6.மீசை கண்டிப்பா இருக்கணும்ங்கிறதை, அண்டர்லைன் பண்ணிடுங்க. 

7.கிச்சன்ல இருந்து ஹால் வரைக்கும்
பாட்டு பாடி, டான்ஸ் ஆடிக்கிட்டு வர்ற பழக்கம் எல்லாம் எனக்கு உண்டு. அதை எல்லாம் ரசிக்கணும். . !

8.வாரம் ஒருமுறை பீச், தியேட்டர்னு அவுட்டிங் கூட்டிட்டுப் போகணும். . !
9.கொஞ்சம் அதிகமா பேசுவேன். . !அதனால அவர் அமைதியானவரா
இருக்கணும். . !

10.சண்டை போடுறப்போ, அவர்தான் 'ஸாரி’ கேட்கணும். . ! 

கொஞ்சமாவது மனசாட்சின்கிறது இருக்கா? இந்த பொண்ணுங்களுக்கு!!!
..........................................

..அப்பாவும் வேலைக்காரியும்! -

சின்னப் பையன் அப்பாவிடம் கேட்டான்.'' அப்பா...அரசியல் என்றால் என்ன...?''

அப்பா யோசித்துவிட்டுச் சொன்னார்.

''நல்லது. உனக்கு நான் அதனை இப்படி விளங்கப்படுத்துகிறேன். நமது இந்தக் குடும்பத்தில் அதிகாரமுள்ளவன் நான். ஆகவே நான் அரசாங்கம். எனக்கு ஆலோசனை சொல்பவள் அம்மா. ஆகவே அவள் அமைச்சர். வேலைக்காரி நமது தயவில் வாழ்கிறாள். எனவே அவள் மக்கள். நீ அடிக்கடி கேள்வி கேட்பவன். ஆகவே நீ ஊடகம். உனது சின்னத் தம்பிப் பாப்பாதான் நாட்டின் எதிர்காலம்.''

பையனுக்குக் கொஞ்சம் புரிந்தது, மீதி புரியவில்லை. யோசித்துக் கொண்டே அவன் படுக்கைக்குப் போய் விட்டான்.

சிறிது நேரத்திற்குள் தம்பி அழும் சத்தம் கேட்டது. பையன் எழுந்து சென்று பார்த்தான். தம்பி சிறுநீர் கழித்துவிட்டு, ஈரத்தில் படுக்க முடியாமல் அழுது கொண்டிருந்தான். அவனுக்கு உடை மாற்ற வேண்டும்.

அம்மாவின் அறைக்குள் போனான் சிறுவன். அம்மா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.

வேலைக்காரியின் அறைக்குள் போகுமுன், சாவித் துவாரத்தால் பார்த்தான். அங்கே வேலைக்காரியை அப்பா அடித்து துன்புறுத்தி கொண்டிருந்தார்.

பையன் பேசாமல் வந்து படுத்துக் கொண்டான்.
காலையில் எழுந்ததும் அப்பாவிடம் சொன்னான்.''அப்பா..அரசியல் என்பதன் அர்த்தம் எனக்கு நன்றாகவே புரிந்து விட்டது...!''

''கெட்டிக்காரன்...சரி, சொல் பார்க்கலாம்..'' என்றார் அப்பா.

மகன் சொன்னான்:

''அரசாங்கத்தால் மக்கள் கொடுமைக்குள்ளாகும் போது அமைச்சர்கள் குறட்டை விட்டுத் தூங்குவார்கள். ஊடகங்கள் எதுவும் பேசாமல் மௌனமாகிவிடும். நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்க யாருமே இருக்க மாட்டார்கள்!''

எந்த நாட்டுக்கு இது பொருந்தும் என்பதை நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்!

.................................

மிருகங்கள் ஃபேஸ்புக் அக்கவுன்ட்
வைத்திருந்தால்
அவர்கள் ஸ்டேட்டஸ் எவ்வாறு இருந்திருக்கும்- டாப் 5

கோழி - நாளை என்னுடைய வழக்கமான போஸ்ட் இல்லாதிருந்தால்- நான் கே எஃப் சியில் யாருக்காவது விருந்தாகியிருப்பேன்.!

ஆடு - நண்பர்களே வெளியில் போவதை தவிர்க்கவும் - ரம்ஜான் பண்டிகை அருகில் வருகிறது.!

கொசு - தவறான உறிஞ்சுதலால் - எனக்கு ஹெச் ஐ வி வந்துவிட்டது நண்பா.!

பூனை - என்னுடைய ஏழாவது குட்டி கேட்கிறது யார் அப்பா என்று, என்ன சொல்வது
எனக்கு நினைவே இல்லை.!

கரப்பான் பூச்சி - ஜஸ்ட் ஒரு அடிதான் மிஸ்ஸு
இல்லைனா எனக்கு இன்னைக்கே பால் என்ன வாழ்கைடா.!

...................ஒரு பணக்கார பெண்மணி.

அவள் தன் பகட்டை அனைவருக்கும் காட்டுவதற்கு, தன்னிடம் உள்ள நகைகளையெல்லாம் தினமும் வீட்டிலிருக்கும்போது கூட அணிந்து கொள்வாள்.

தினமும் இரவு படுக்கப்போகும் முன் அவற்றை கழட்டி ஒரு மேஜையின் மேல் வைத்து விட்டு, அதனருகில் ஒரு துண்டி சீட்டில்,

"இந்த நகைகளெல்லாம் போலி நகைகள். கவரிங் நகைகள். என்னுடைய உண்மையான நகைகள் என் வங்கி லாக்கரில் உள்ளன" என எழுதி வைத்து விடுவாள்.

அப்படி செய்ததில் அந்த நகைகள் திருட்டுப்போகாமல் ரொம்ப நாள் இருந்தது.

ஒரு நாள், அவள் காலையில் எழுந்து பார்த்த போது அத்துனை நகைகளும் களவு போயிருந்தது.

அருகில் இருந்த ஒரு துண்டு சீட்டில் எழுதியிருந்தது,

"உங்கள் போலி நகைகளை நான் எடுத்துக்கொண்டேன். காரணம் நான் ஒரு போலித்திருடன். உண்மையான திருடன் ஜெயிலில் இருக்கிறான்" 

...........................

A man has six children and is very proud of his achievement. 

He is so proud of himself, that he starts calling his 

Wife,' Mother of Six' in spite of her objections.

One night, they go to a party. The man decides that it is time to go home

And wants to find out if his wife is ready to leave as well. He shouts

At the top of his voice, 'Shall we go home Mother of Six?'

His wife, irritated by her husband's lack of discretion,

Shouts right back, 'Any time you're ready, Father of Five.'

(Mavane ini ippadi koopiduva?)

......................

ப்ளேன் ஓட்டறவனை பைலட்னு சொல்றாங்க!
சும்மா ராக்கெட்டுல தானா போறவனை அஸ்ட்டிரானட்னு சொல்றாங்க!
டிரெயின் ஓட்டுறவனை லோகோமோட்டிவ் இஞ்சினியர்னு சொல்றாங்க!
யூனிபார்ம் போட்டு கார் ஓட்டுனா ஷாஃப்பியுவர்னு சொல்றாங்க!
வேட்டியை மடிச்சு கட்டிக்கிட்டு ஓட்டுனா டிரைவர்னு சொல்றாங்க!
அது கிடக்கட்டும்!
ஏதேனும் ஃபிகரை ஓட்டிகிட்டு போனா மட்டும் .....
.
.
.
.
.
.
.
ஏன் 'பொறுக்கி'னு சொல்றாங்க?!!

...............

.பெண்கள் அருகில் இருந்தால் "Hotel Bill"
பெண்கள் தூரமாக இருந்தால் "Phone Bill"
பெண் தூரமாகவே பொய் விட்டால் "Bar Bill"
கொய்யல இவளுங்க எங்க இருந்தல்லும் செலவுதான்
..............

மகனை கோபத்தில் திட்டினார் அப்பா,

"டேய்.. நீ நினைக்கற மாதிரியெல்லாம் வாழனும்னா ... நீ அம்பானி வீட்ல தான் பிறந்திருக்கனும்"

மகன் பொறுமையா பதில் சொன்னான்,

"அப்போ ... நீங்க அம்பானி ஆன பிறகு என்னை பெத்திருக்கனும்"

# வில்லங்கம் வேறெங்கும் இல்லை !!!!!!வீட்டுலயே ...

...................................................


,
1."கடன்காரன் " ஆவதை விட" பிழைக்கத் தெரியாதவன் "எவ்வளவோ மேல் .

2."டை" கட்டிய பணக்காரனை விட "கை" கட்டாத ஏழை எவ்வளவோ மேல் .

3."கெட்டவன்" ஆவதைவிட "கையாலாகாதவன்" எவ்வளவோ மேல் .

4."வல்லவன்" ஆவதைவிட " நல்லவன்" எவ்வளவோ மேல் .

5.குற்றம் புரியும் "அதிபுத்திசாலி"யை விட ஒன்றுமறியாத "முட்டாள்" எவ்வளவோ மேல் .

6."காதலி" க்காக உயிரை விடுபவனை விட "கட்டியவளை " காதலிப்பவன் எவ்வளவோ மேல் .

7.புறத்தில் அழகாய் அகத்தில் அழுக்காய் இருக்கும் "ஹீரோ"வை விட புறத்தில் அழுக்கும் அகத்தில் அழகும் நிறைந்த "காமெடியன்" எவ்வளவோ மேல் .

8.மாதர்தம்மை இழிவு செய்யும்" மதயானைகளை"விட நெறி தவறாத "எறும்பு" எவ்வளவோ மேல் .

9.வெற்றிகளி ன் "கர்வங்களை" விட தோல்வியிலும் "நம்பிக்கை" எவ்வளவோ மேல் .

10.பொய்யான "புரட்சி" களைவிட அமைதியான "அன்பு" எவ்வளவோ மேல் .
...................................

No comments:

Post a Comment