Sunday, March 9, 2014

கடி ஜோக்ஸ் 53

மனைவி ;உங்க சின்ன வீட்டு விவகாரத்தை மொதல்ல நிறுத்துங்க.

கணவன்; ’நாம் இருவர், நமக்கு இருவர்’னு கவர்ன்மெண்ட்டே சொல்லுதே!
மனைவி ;அடாடா,எனக்கு இது தோணாம போச்சே!
''''''''''''''''''
''ஒரு குருக்களின் வீட்டு வாசலில் ஒரு கழுதை இறந்து கிடந்தது.

உடனே, அவர் நகராட்சி அலுவலகத்துக்கு போன் செய்தார்,

போனை எடுத்தவர் நாராயணசாமி நக்கலாகச் சொன்னார்,

குருக்களே, இறந்த அந்த கழுதைக்கு இறுதிச் சடங்குகளை முதலில் முடித்துவிட்டு சொல்லுங்கள் நாங்கள் வருகிறோம்"

அதற்கு அந்த குருக்கள் சொன்னார்,
அதற்கென்ன, பேஷாகச் செய்து விடுகிறேன். இருந்தாலும் அந்தக் கழுதையோட உறவினர்களுக்கு முதலில் சொல்ல வேண்டும் இல்லையா? அதுதான் உங்களிடம் சொன்னேன்".
'அவள்: இந்த ஆஸ்பத்திரியிலேதான் என் கணவரைப் பறி கொடுத்தேன்.

மற்றவள்: அடப்பாவமே! என்ன ஆச்சு? ஆபரேஷனில் இறந்து விட்டாரா?
அவள்: இல்லை. ஆஸ்பத்திரி நர்சோடு ஓடிப்போயிட்டார்.
'''''''''''''''''
'வன்முறையால சாதிக்க முடியாததை அன்பால்
சாதிச்சுட்டேன்…!

எப்படி?

எதிர்த்த வீட்டுக்காரன் பல்லை சுத்தியால
உடைக்கணும்னு நினைச்சேன், முடியல…
என் மனைவி செய்த சீடையை அன்போடு
கொடுத்தேன்…காரியம் முடிஞ்சுடுச்சு..! hehe
''''''''''''''''''''''
என் மனைவிக்கு கோவம் வந்தால் 1, 2, 3னு -- 100 வரை எண்ணுவா !

அதுவரைக்கும் நீங்க என்ன பண்ணுவீங்க? 

தோப்புகர்ணம் போட்டுக்குனு இருப்பேன்!


'''''''''''''''''''''''''''''''
மனைவி: என்ன ரொம்பவே சந்தோஷமா இருக்கீங்க?

கணவன்: நீ வெளியே போகறேன்னு சொன்னியே, அதனாலதான் சந்தோஷமா இருக்கேன்.

மனைவி: நான் வெளியே போனா உங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா?

கணவன்: உனக்குத் தெரியாம வெளிய போகணும்னு நினைச்சிட்டிருந்தேன். நீ போனதுக்கப்புறம் நான் வெளியே போனா உனக்குத் தெரியாதில்ல!
,,,,,,,,,,,,
மனைவி: உலகத்துல எங்கே தேடினாலும் என்னை மாதிரி மனைவி உங்களுக்கு கிடைக்கமாட்டா தெரியுமா?

கணவன்: நான் கொஞ்சம் மக்குதான். அதுக்காக, முதல் தடவை செய்த தப்பையே மறுபடியும் செய்வேன்னு நினைச்சியா?!
;;;;;;;;;;
;;மனைவி: ஹூம்... உங்க கையில இருக்கும் மொபைலா பிறந்திருந்தா எப்பவும் உங்க கூடவே இருந்திருப்பேன்.

கணவன்: ஹூம்... அப்படி மட்டும் நடந்திருந்தா, மார்க்கெட்ல புது மாடல்கள் வரும்போது பழசை மாத்திக்கிற வாய்ப்பு எனக்கும் கிடைச்சிருக்குமே!!
,,,,,,,,,,,,
கணவன்: எனக்குன்னு யாருமே எதுவுமே செய்யலை. நான் இன்னைக்கு இந்த நிலைமையில் இருக்கேன்னா அதுக்கு நான் மட்டும்தான் காரணம்.

மனைவி: இதை முன்னாடியே சொல்லியிருக்கக்கூடாது? இவ்வளவு நாளும் அநாவசியமா நான் கடவுளைத் திட்டிட்டிருந்தேன்.
'''''''''''''''''''''''''''
 
பள்ளியில் ஒருமுறை ஆசிரியர் குழந்தைகளை பார்த்து கேட்கிறார் ...

கடவுள் இப்போது உங்கள் முன் தோன்றினால் எனென்ன கேட்பீங்க ??

அதற்க்கு முதல் குழந்தை எனக்கு பைக் வேண்டும் 

இரண்டாம் குழந்தை எனக்கு ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும்

மூன்றாம் குழந்தை ஒரு கோடி பணம் வேண்டும்..

மற்றொரு குழந்தை எனக்கு Vodafone நாய் வேண்டும் என்று ...

இதை கேட்டு கொண்டு இருந்த ஆசிரியர் அட முட்டாள்களே யாருக்காவது நல்ல அறிவு வேண்டும் என்று கேட்டீர்களா..


அதற்கு ஒரு மாணவன் எழுந்து நின்று யார் யாருக்கு என்ன என்ன எல்லையோ அதை தான் கேட்கமுடியும் என்று கூறினான் ... 
''''''''''''''''''''''''''''''''''''''
ஓர் அம்மா டாக்டரைத் தேடி வந்தாங்க.

''டாக்டர்... எங்க வீட்டுக்காரருக்கு திடீர்ன்னு அகோரப்பசி... ஏற்பட்டுப் போச்சு! நிறைய சமைச்சுப் போடறேன்... அவ்வளவையும் சாப்பிட்டுட்டு... கீழே கிடக்கிற குப்பைக் கூளங்களையும் எடுத்துச் சாப்பிட ஆரம்பிச்சடறார்... என்னான்னு பாருங்களேன்... டாக்டர்!''

''சரிம்மா... எவ்வளவு நாளா இப்படி இருக்கு?'''

''ஒரு வாரமா இப்படி இருக்கு!''

''இவ்வளவு நாளா ஏன் சும்மா இருந்தீங்க? ஆரம்பத்துலேயே இங்கே அழைச்சிக்கிட்டு வர வேண்டியதுதானே...?''

''வீடு பூரா சுத்தமாகட்டுமே-ன்னு காத்துக்கிட்டிருந்தேன் டாக்டர்!''


டாக்டர்!'' 
....................

.காக்காவுக்குப் ­ பயங்கரக் கடன் தொல்லை . உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. 
ஏன்?"
.....
....
....
..
..
..
.
.
.
"ஏன் எண்டா?"
"காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சாச்சே...."



//////////////////////////////



1. தம்பி இங்கே எந்த இடத்தில் பங்க்சர் ஒட்டுவாங்க தெரியுமா?

எங்கே பொத்தல் விழுந்து இருக்கோ... அந்த இடத்தில தான்...

அவ்வ்வ்வ்வ் !

****

2. போலீஸ் கார் போலீஸ் கார், ரோட்டில போகலாமா?

வாகனங்கள் போக தான் தடை . நீங்க நடந்து தானே போறேங்க . தாராளமா போகலாம்...

இல்லை... என் பேர் மயில்வாகனம். அதான் உங்களிடம் அனுமதி கேட்கிறேன்.

அவ்வ்வ்வ்வ்...

****

3. உங்க மாமா டெல்லியில் இருக்கிறார் என்று சொன்னாயே? அங்கே என்னவாக இருக்கிறார்?

அங்கேயும் எங்க மாமாவா தான் இருக்கிறார். ஊர் விட்டு ஊர் போனால் உறவு முறை மாறுமா?

அவ்வ்வ்வ்வ்வ்....
.........................

நோயாளி : டாக்டர்.. அந்த ரேசன் கடையில இரண்டு கிலோ சர்க்கரைக்கு அரை கிலோ கம்மியா குடுக்குறாங்க.

டாக்டர் : அதை ஏன் எங்கிட்ட சொல்றிறீங்க?

நோயாளி : நீங்கதானனே டாக்டர், சுகர் கம்ப்ளையண்ட் இருந்தா என்கிட்ட வாங்கன்னிங்க.

==================================

டாக்டர் எனக்குக் கால்லே ஆணி இருக்கு.
ரொம்ப வசதியாப் போச்சு. நல்லதா நாலு காலண்டர் தரேன். மாட்டிக்குங்க.

அப்புறம் டாக்டர், உக்கார்ற எடத்திலே கட்டி இருக்கு.
அப்ப தள்ளி உக்காருங்க.
ஐயோ டாக்டர். கட்டி அங்கே இருக்கு...
கட்டியை அங்கே வச்சுட்டு நீங்க மட்டும் ஏன் வந்தீங்க?
ஐயோ டாக்டர் கட்டி அந்த இடத்திலே இருக்குன்னு சொன்னேன்.
ஓ..அப்படி மொதல்லேயே தெளிவா சொல்லியிருக்கலாமில்லே..

டாக்டர் பொறக்கப் போற குழந்தைக்கு பேரு வைக்கணும். காதிலே நுழையறமாதிரி ஒரு பேர் சொல்லுங்க..

குச்சின்னு வைங்களேன்..வாய்லே நுழையமாதிரி வேணும்ன்னா வாழப்பழம்ன்னு வைங்களேன்.
வீட்டு ஜன்னல்ல கொசு வலை அடிக்கிறதுக்கு ஈரோட்டுல எங்க வீட்டுக்கு ஒரு Sales Reprsentative வந்து இருந்தாரு canvass பண்ண..........எங்க அப்பா வேண்டாமுனு சொன்னதுக்கு அப்புறமும்.......

"இல்ல சார் நான் உங்களுக்கு explain பண்ணிடறேன்.......புடிச்சுருந்தா வாங்குங்க......."னு சொல்லிட்டு அதோட பயன், குவாலிட்டி, Warranty, Rate எல்லாத்தையும் ஒரு அரை மணி நேரம் நல்லா சொன்னாப்புல.........கடைசியா,

"சார் இதை மட்டும் நீங்க வீட்டுல எல்லா ஜன்னலுக்கும் அடிச்சிட்டீங்கனா அப்புறம் உங்க வீட்டுக்குள்ள கொசுவே வராது..........."

அதுக்கு எங்க அப்பா,

"நீங்க சொல்றது எல்லாம் சரி...........வெளியில இருந்து ஒரு கொசுவும் உள்ள வராது. ஆனா உள்ள இருக்கிற கொசு எல்லாம் அப்புறம் எப்படி வெளியில போகும்?"

"சார் உங்க வீட்டுக்கு கொசு வலையே வேண்டாம்......அது வரவே வராது.....ஆனா முதல்ல நான் என் வீட்டுக்குப் போனோன இருக்கிற வலையை எல்லாம் பிச்சு எறியப் போறேன்.......உங்க கடிக்கு கொசுக்கடியே தேவலாம்......."

பயபுள்ள சிங்கத்தோட குகைக்குள்ள வரதா நினைச்சு ஒரு கொசு மண்டிகுள்ள வந்தநொ ந்து போய் போனாரு..
ந‌ம்ம ரமே‌ஷ‌் ஒரு நூறு ரூபாயும் கூட

இல்லாம ரொம்ப கஷ்டப்படறாண்டா..?

ஏ‌ன் உன்கிட்ட கேட்டானா..?

ஊஹும் நான் கேட்டேன்..

இ‌ல்‌ல‌ன்னு சொ‌ல்‌லி‌ட்டா‌ண்டா.
,,,,,,,,,,,,,,,,

அம்மா - முதல் தாய்
அக்கா - இரண்டாம் தாய்
மனைவி - மூன்றாம் தாய்
தங்கை , தம்பி - முதல் குழந்தை
முதல் தாய் இயற்கை .
இரண்டாம் தாய் அமைவது வரம்.
மூன்றாம் தாய் வரமாவதும், சாபமாவதும் நம் கையில்...
மூன்றும் அமைந்தவர்கள் அதிஷ்டசாலிகள்.!
தம்பி தங்கைகளை முதல் குழந்தையாக நினைப்பவர்களை பெற்றவர்கள் கொடுத்து வைத்தவர்கள்......
............
காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் ?

சிரிக்க சிந்திக்க !

ஒரு ஞானியை அணுகிய சீடன், 

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி,

"அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ.

அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா.

ஆனால் ஒரு நிபந்தனை.

நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்.

ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது.

அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன்.

இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன்.

அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே.

வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார்,

"இது தான் காதல்!".

பின்னர் ஞானி,

"சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா.

ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப்

பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான்.

ஞானி கேட்டார்,

"இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன.

ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன்.

நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார்,

"இது தான் திருமணம்!".
 
.......................

."முழுங்க முடியலைன்னு சொல்லி டாக்டர்கிட்டே போனீங்களே.. என்ன ஆச்சு..?" "டாக்டர் அம்பது ரூபாயை முழுங்கிட்டாரு!"

"கல்யாணத்தை ஆயிரங்காலத்துப் பயிர்னுதானே சொல்லுவாங்க.. நீங்க என்ன இரண்டாயிரங் காலத்துப் பயிர்னு சொல்றீங்க?" "ஹி.. ஹி.. நான் சொன்னது இரண்டாங் கல்யாணத்தை!"

"உடம்பு இளைக்கறதுக்காக ஏதாவது முயற்சி செய்யக் கூடாதா?" "அதனால உனக்கென்ன?" "நாலுபேர் மத்தியில தூக்கி வைச்சுப் பேச முடியலையே"

"புத்தகத்துக்கும் கடிதத்துக்கும் என்ன வித்தியாசம்?" "தெரியலையே.." "புத்தகத்தைப் படிச்சுக் கிழிக்கிறோம். கடிதத்தைக் கிழிச்சுப் படிக்கிறோம்"


''''''''''''''''''''''''''''''''''

''கண்ணே! நான் உன்னை என் மனச் சிறையில் வைத்திருந்தேன்,
உன் அப்பா என்னை மத்திய சிறையில் வைத்துவிட்டார்.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


'மனைவி : என்னை மாதிரி ஒரு பொண்டாட்டி கிடைக்க, போன ஜென்மத்தில நீங்க என்ன புண்ணியம் செஞ்சீங்களோ!

கணவன் : சத்தியமாத் தெரியாது. ஆனா, மறுபடியும் அந்தத் தப்பைக் கண்டிப்பாப் பண்ண மாட்டேன்.
........''''''''''''''''''

No comments:

Post a Comment