இப்போஎல்லாம் ரெடி மிக்ஸ் காலம், இன்னும் சொல்லப் போனால் பெண்களுக்கு அரைக்க இடிக்க சந்தர்பமே கிடையாது. ( தமிழ் சீரியலில் வருவது போல் கணவனையும் மாமியாரையும் இடித்துக் காட்டுவதைத் தவிர!), நாங்கள் உரலில் அரைத்து, அம்மியில் அரைத்து ,இடித்து எந்திரத்தில் அரைத்து எல்லாவற்றையும் ஒரு கைப் பார்த்தவர்கள்.
அரைப்பது அதுவும் இரண்டு மூன்று பேராக சேர்ந்து மாற்றி மாற்றி, பேசிக்கொண்டே, நடுநடுவில் அந்தக் குழவிக்கு சுத்தி இருக்கும் சின்ன ரிப்பன் போன்ற துணியை எடுத்து திரும்ப இழுத்துக் கட்டி அரைப்பதில் அவ்வளவு ஆனந்தம்? உலக்கையை மாற்றி மாற்றி போட்டு குத்தி எடுப்பது, இதெல்லாம் இந்தக் காலத்துப் பசங்க டிவியில் பார்ப்பதோட சரி.
இப்ப என்னாடான்னா, இருக்கற கிரைண்டர் ,புட் ப்ராசசர் ,மிக்ஸியை வைத்துக் கொண்டும் சமைக்க முடிவதில்லை , வேலைக்காரிகள் இல்லாவிட்டால் போச்சு.இன்னும் சிறிது வருடங்களுக்குப் பிறகு வேலைக்காரிகளேக் கிடைக்க மாட்டார்கள், ஏனேன்றால் எல்லா வேலைக்காரிகளும் தங்கள் பெண்களை கஷ்டப் பட்டு படிக்க வைக்கிறார்கள். அவர்கள் எங்கே பத்துப் பாத்திரம் தேக்க வரப் போகிறார்கள்! அப்போது தான் தெரியும் இரண்டாவது தலை முறைக்கு தானாகவே எப்படி எல்லா வேலைகளையும் செய்வது என்று!
க் கிடைக்க மாட்டார்கள், ஏனேன்றால்
எவ்வளவுக்கெவ்வளவு அட்வான்ஸாக ஆனாலும், உழைப்பவர்கள் உழைத்துக் கொண்டு தான் இருப்பார்கள் என்பது சரியான நிஜம் !
முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறது' ரெடி மேட் ரெடி டு ஈட் 'இன்னும் கொஞ்ச நாள் போனால் இரண்டாவது தலை முறைக்கு உப்பு புலி, பருப்பே என்னவென்று தெரியாமல் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடியில் கேட்பது போல வந்துவிடுமோ என்று பயமாக இருக்கிறது.
இந்தத் தலை முறை பொண் ஆணைப் பார்க்கும் போது, பரிதாபமாக இருக்கிறது, இங்கேயும் இல்லை அங்கேயும் இல்லை , அவர்களுக்கே அவர்கள் என்ன செய்கிறார்கள், எதற்காக செய்கிறார்கள் என்று தெரிவதும் இல்லை, புரிவதும் இல்லை. பாதி மனது இதைச்செய் என்றும் பாதி மனது அதைசெய் என்றும் பிக்கறது.
நாங்கள் பழைய சாதத்தை சாப்பிடும் வீட்டு வேலைகளை செய்து, விளையாடி, மனசுக்கும் உடலுக்கும் தெம்பை வரவழைத்துக் கொண்டு வளர்க்கப் பட்டோம். 'கக்கப் போட்டு நிக்க வாங்கணும்' என்ற பழமொழிக்கேட்ப வயராற சாப்பாடும் உடல் அசர வேலையும் செய்தோம். இன்றும் இரவு எத்தனை மணி நேரமானாலும் கண் விழித்திருக்க முடியும், அதே சமயம் காலங்கார்தாளையும் சீக்கிரமே அதாவது 3,5 மணிக்கு எழுந்திருக்கவும் முடியும் அது இன்று வரை உண்மை.
எவ்வளவு வேலையாக இருந்தாலும் மனசு தளராமல், முகம் கோணாமல் ,எத்தனை பேருக்கு வேணுமானாலும் சமைக்கவும் முடியும்.
கணவன் மார்கள் இந்தக் காலம் போலே பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்ண வந்ததில்லை, அவர்களுக்கே அவர்களுடைய பொண்டாட்டியின் கேபபிளிடி தெரியும்.நம்பிக்கை இருந்தது. வளர்ந்த விதமும் தெரியும்.
எங்கள் வர்கத்திற்கு எங்கள் பெற்றோர்களின் அளவிற்கு தெம்பும் சக்தியும் இல்லை, சுமார் ஒரு அறுபது பெர்சென்ட் இருக்கு என்று வைத்துக் கொண்டாலும்சரியே. ஆனால் இப்போ இருக்கும் தலைமுறைக்கு எங்களில் முப்பது பெர்சென்ட் கூட சக்தியோ சுறுசுறுப்போ கிடையவே கிடையாது.
முதலில் சீக்கிரமே எழுந்திருப்பது, மத்யானத்திற்குள் குளிப்பது, நேரத்தில் வெளியே போவது, ராத்திரி டின்னர் டைமுக்குள் சாப்பிட வருவது..... ம் ம் ஹூகும் நோ சான்ஸ் . மனத்தளவிலேயே பிளானிங் சிஸ்டமே கிடையாது, ரூமு போட்டு யோசிப்பதுங்கர கான்சப்டே தான் இந்த தலைமுறைக்கு.
ரெண்டு நாள் சீக்கிரம் எழுந்தால் ஒருவாரம் அந்த அசதி போக, ஏதாவது அவசரம் என்றால் உடனே மனசு வேலை செய்யாது, நோ லாஸ்ட் மினிட் ரன்னிங் இது மற்றவர்களைப் பொருத்த வரை, அவர்களுடைய வேலையில் எல்லாமே லாஸ்ட் மினிட் வேலை தான், நம்மளைப் போல சுறுசுறுப்போ ... கொஞ்சம் வேலை செய்தால் சீக்கிரமே களைப்பு, சுரத்தை, விழிப்புணர்வு எல்லாமே போய் விடுகிறது, கடைசியில் அட்ஜஸ்ட்மென்ட் ரொம்ப கஷ்டம்.
ஒரு சமயத்தில் ஒரே காரியம் தான் செய்ய முடியும், மறதி இப்பவே தொண்டு கிழம் மாதிரி.
தீபாவளிக்கு விடிகாலை எழுந்து, எண்ணைத் தேய்த்துக் குளித்து வீட்டு வேலையில் உதவி செய்து, எவ்வளவோ செய்திருக்கிறோம் நாங்கள், இப்போ எண்ணைக் குளியலும் இல்லை, சீக்கிரம் எழுந்திருப்பதும் இல்லை, சூரிய உதயத்தை லீவ் போட்டு, பணம் செலவழித்து, ஸ்பெஸல் பிக்னிக்காக போய்ப் பார்க்க வேண்டியிருக்கிறது!
எங்களால் படி ஏறி இறங்கி பிசிகல் வேலைகள் செய்ய அளவு இந்த ஜெனரேசன் பெண்களால் முடிவதில்லை, இரண்டு நாள் பயணமோ, கொஞ்சம் விஷேச நாட்களில் அலைந்தாலோ கால் வலி, கை வலி தலை வலி என்று மூன்று நாள் உற்சவம் கொண்டாட வேண்டியது, கை மருத்துவதிற்கு ஒரு' தடா'
நான் பிரசவித்தபோது, பிரசவம் ஆனதும், சைக்கிள் ரிக்க்ஷாவில் குழந்தையுடன் வீடு வந்தேன் ,இப்போ இருப்பவர்களால் இதை நினைத்துக் கூடப் பார்க்கமுடியவில்லை. கார், கால் டாக்ஸி என்ற வசதிகள் இப்ப ஒரு போன் காலிலேயே முடிந்து விடுகிறது.
பணம் புழக்கம், சுதந்திரம், நிறைய வசதிகள் கிடைக்க வாய்ப்புகள் இருப்பதால், அவர்கள் சொகுசாகவே இருக்கப் பழகிக் கொள்கிறார்கள். உன்னைச் சொல்லிக் குற்றம் இல்லை என்னைசொல்லி குற்றம் இல்லை, கால் செய்தக் கோலமடி, கடவுள் செய்தக் குற்றமடி.
No comments:
Post a Comment