Wednesday, October 16, 2013

கடி ஜோக்ஸ் 28

என் கணவருக்கு டெம்பரேச்சர் பார்க்கறதுக்கும், நா வெளில போறதுக்கும் என்ன சம்பந்தம் டாக்டர்..? அப்பத்தானே தர்மாமீட்டர் வைக்கறதுக்கு அவர் வாயைத் திறப்பாரு ...
.............................

ஒரு நாள் என் friend அவன் wife-யும் கூட்டிக்கிட்டு என் வீட்டுக்கு வந்து இருந்தான். அப்ப நாங்க நாலு பேரும் பேசிக்கிட்டு இருக்கும் போது நான் சொன்னேன்.........

"எங்களை மாதிரி எல்லாம் ஒரு புருஷன் கிடைக்க நீங்க கொடுத்து வச்சுருக்கணும். எப்படி நாங்க பயந்துக்கிட்டு இருக்கோம் தெரியுமா?"

அதுக்கு என் நண்பனின் மனைவி

"ஆமாம் பயந்துட்டாலும்..............."

"என்னம்மா இப்படி சொல்லிட்ட...........நாங்க சாப்பிடறது கூட தனியா உக்காந்துதான் சாப்பிடுவோம் தெரியுமா?"

"ஏன்?"

"ஏன்னா உங்களுக்கு முன்னாடி சாப்பாட்டுக்கு வாயைத் திறக்கக் கூட எங்களுக்கு பயம்"

"அண்ணா முடியல அண்ணா..........நல்லா சமைச்சுப் போட்டு உங்களை வளர்த்து வச்சுருக்கா பாருங்க இவளைச் சொல்லணும்...."

"என்ன இப்படிச் சொல்ற.........எங்களுக்கு தற்பெருமை அடிச்சுக்கறது பிடிக்காது......"

"அப்படினா..புரியலயே....."

"இல்ல நாங்கதான வீட்டுல சமைக்கிறோம். அதைச் சொன்னேன். ஹி ஹி ஹி......"
___________________________________________________________________________

டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்....

பவர் ஸ்டார் : இல்லை 500நாள் ஓடணும்...

டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார் !!
பவர் : ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?..
____________________________________
நேத்து நைட் என் friends எல்லாம் என்னைக் கூப்பிட்டு ..........

"ஏய் சாரிப்பா....போன வாரம் உன் birthday-வைக் கொண்டாட முடியல."

"அதனாலென்ன பரவாயில்ல........."

"இல்ல இன்னிக்கு நாங்க கேக் வாங்கிட்டு வந்துருக்கோம்.........நீ கட் பண்ணு"

"அதெல்லாம் முடியாதுப்பா........"

"ஏன்?"

"இல்ல இன்னிக்கு கொண்டாடினா ஒரே வாரத்துல எனக்கு இன்னும் ஒரு வயசு ஜாஸ்தி ஆயிடும்......ஹி ஹி ஹி......"

"ஓ இல்லாட்டி மட்டும் இப்ப உனக்கு என்ன 25 வயசுனு நினைப்பா........"

"ஏய் என்ன நீ வயச அதிகப்படுத்தற............இப்பதான் just 20 முடிஞ்சு 18 வருஷம் ஆயிருக்கு........."

"த்தூ.........அரைக்கிழவன் ஆயிட்டு பேச்சப் பாரு............"

"அது ஏன் அரைக்கிழவன்னு தான் சொல்லணுமா...........'ரெட்டைக் காளை'-னு சொல்லலாமுல்ல..........." 
"???????????"

"அது ஒண்ணும் இல்ல பிள்ளைத் தமிழ்ல ஆண்களின் பருவத்துல 20 வயசு இருக்கறவன 'காளை'னு சொல்லும் போது 40 வயச நெருங்கற நம்மள ஏன் ரெட்டைக் காளைனு சொல்லக் கூடாது...ஹி ஹி ஹி......"

".....யப்பா நீ கேக்கை வெட்டறதுக்கு பதிலா பேசாம எங்களை வெட்டிடு......நிம்மதியா போய்ச் சேருவோம்............"
..............................................................................................

மேடையில் ஒரு பாடகர் தனது பேவரைட் பாடலை ரொம்ப சின்சியரா பாடிக் கொண்டிருந்தார்.

முன் வரிசையில் ஒரு பையன் தலையாட்டி ரசித்தவன் திடீரென்று அழத் தொடங்கிவிட்டான்.

அவரும் அவனைப் பார்த்துக் கொண்டே சத்தமாகப் பாடிக் கொண்டிருக்கிறார்.

அவரைப் பார்த்து பார்த்து அவன் அழுகை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

ஒரு நிலையில் மனம் நொந்த அவர் கீழிறங்கி வந்து அவனிடம் ஏம்பா அழுதிட்டே இருக்க? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டார்.

அதற்கு அந்தப் பையன்..

நான் ஒரு ஆடு வளர்த்தேன் , அது எனக்கு ரொம்ப செல்லம்.

ஒரு நாள் அந்த ஆட்டுக்கு முடியாம போயிடுச்சி. அது சாவதற்கு முன்னால் இப்போ நீங்க கத்துனது போல கத்திக்கொண்டே இருந்தது ,

அது நியாபகம் வந்துடுச்சி அதான் ,னான்.


....................................................................................................................................
ஒரு ஆசிரியர், கையில் ஒரு கப் மதுவுடன் வகுப்பறைக்குள் நுழைந்து மாணவர்களிடம் கேட்டார்,
"இது என்ன?""மது சார்... " என்றனர் அனைவரும் கோரசாக.
"எப்படி உங்களுக்கு தெரியும்?"
"அதான் தெருவுக்கு தெரு விக்கிறாங்களே சார்"
இப்பொழுது ஒரு புழுவை எடுத்த ஆசிரியர், அந்த மதுக்கிண்ணத்தில் போட, புழு துடி துடித்து இறந்தது.
இப்பொழுது மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்,
"இதைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?"
ஒரு மாணவன் எழுந்தான்,
"சார் ... இவ்வளவு நாளும் தெரியாம இருந்த உண்மை இப்பதான் சார் தெரிஞ்சது"
"என்ன?" ஆர்வத்தோடு கேட்டார் ஆசிரியர்.
"வயித்துல இருக்குற புழு எல்லாம் செத்து போகணும்னா மது குடிக்கனும்னு"

 டேய்.. டேய்.. டேய்...
.......................................................................................................................................

வர வர என் புருஷன் ரொம்ப மோசமாகிட்டே இருக்காருடீ..
ஏன்.. குடிச்சிட்டு வந்து ரொம்ப சண்டை போடறாரா..?
இல்லே.. டாக்டர் கொடுத்த டானிக்கைக் கூட ஊறுகாய் இருந்தாதான் குடிப்பேன்னு அடம் பிடிக்கிறாருடி..!
___________________________________________________________

நண்பன் 1: டேய் மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன் , அதுக்கு உங்க அப்பா "அந்த மாடு எங்கயாச்சும் மேய போய் இருக்கும்னு சொன்னாரு " எனக்கு ரொம்ப கஸ்டமா போச்சு டா.... 
நண்பன் 2: அது கூட பரவாயில்லை மாப்பிள.... நான் திரும்பி போனதும் உன்னைத் தேடி ஒரு "எருமை" வந்துச்சுனு சொன்னாருடா.... 

...............................................................................................................

கணவன், இரவில் அவரது மனைவிக்கு ஒரு sms அனுப்பினார் 

ஹாய் எனக்கு நேரமாகிறது, நான் திரும்ப வர்றதுக்கு முன்னாடி கொஞ்சம் என் அழுக்கு துணிகளை துவச்சு வச்சிடு. எனக்கு பிடித்த உணவு தயார் செஞ்சுவை!

மனைவியிடம் இருந்து பதில் இல்லை...

கணவன் மற்றொரு அனுப்பினார், "நான் சொல்ல மறந்துட்டேன், எனக்கு சம்பளத்தை அதிகரிச்சிருக்காங்க. உனக்கு மாத இறுதியில், ஒரு புது கார் வருகிறது!"

மனைவி உடனடியாக "வாவ், உண்மையாகவா?" என்று sms அனுப்பினார்

கணவன், "இல்லை, நான் என் முதல் மெசேஜ் கிடைத்தை உறுதி செய்ய அனுப்பினேன்"!
.......................................................................................................

நபர் 1 - ப்ச் ! வர வர காய்கறி கடையில் நாம் தேடுவது கிடைக்க மாட்டேன் என்கிறது. டாக்டருங்க எதையாவது சொல்லி நம்ம உயிரை வாங்குறாங்க...

நபர் 2 - ஏன் என்ன ஆச்சு?

நபர் 1- காரட்டை பச்சையா சாப்பிட்டால் கண்ணுக்கு நல்லது என்று சொல்லிட்டார்ந்க. நானும் கடை கடையா ஏறி இறங்குறேன். ஒரு கடையில கூட கிடைக்கல...

நபர் 2 - !!!!?????!!!! 
.......................................................................................................................................
என் பையனுக்கு Quarterly Exams Start
ஆயிடிச்சி..

எனக்கு தலைவலி Start ஆயிடிச்சி..

Book-ஐ எடுத்து வெச்சு..,
" வாடா படிக்கலாம்னு " சொன்னா போதும்..

கையில சிக்கவே மாட்டான்.
சிட்டா பறந்துடுவான்..
எங்கே இருக்கான்னே தெரியாது..

அப்புறம்.., Searching Starts..,

பக்கத்து வீட்ல இருக்கானா..?
எதிர் வீட்ல இருக்கானான்னு
தேடி பிடிச்சி இழுத்துட்டு வரணும்..

அப்பல்லாம் நான் அவனை கொடுமை படுத்த
கூட்டிட்டு போற மாதிரியே சோகமா வருவான்..

பார்கறவங்க எல்லாம் மனசுக்குள்ள என்னை
திட்டிப்பாங்க..

இந்த சின்ன வயசுல இப்படி படிப்பு மேல
Interest இல்லாம இருக்கானேன்னு நான்
ஃபிலீங் ஆகறது அவங்களுக்கு எங்கே
தெரிய போகுது..?!!

இப்படி ஓடி., தேடி., பிடிச்சி அவனை
படிக்க உக்கார வெக்கிறதுக்குள்ளயே
போதும் போதும்னு ஆயிடும்....!!

அதே மாதிரி என்னதான் தாஜா பண்ணி
படிக்க உக்கார வெச்சாலும்...

" அப்பா..! தண்ணி வேணும்..! "

" அப்பா..! பசிக்குது..! "

" அப்பா..! ஒண்ணுக்கு வருது..! "

இப்படி ஏதாச்சும் சொல்லுவான்..

இது கூட பரவாயில்ல..

" அப்பா.. தூக்கம் வருதுன்னு..! " சொல்லுவான்
Evening 6 மணிக்கு..

நான் பொறுமையா Advise பண்ணுவேன்..

"கண்ணா.., நல்லா படிச்சா தான் பெரியவனாகி
Doctor, Engineer, Auditor இப்படி எதாவது ஒரு
நல்ல வேலைக்கு போக முடியும்..!!

இது போட்டி நிறைஞ்ச உலகம்டா..!!
நாம " தீயா " வேலை செய்யணும்ன்னு "
சொல்லிட்டு இருந்தா..

நான் யாருக்கோ சொல்ற மாதிரி.., அவன்
எங்கேயோ பராக்கு பாத்துட்டு இருப்பான்..

எனக்கு Tension ஆகும்.. - ஆனா கோவப்பட்டா
காரியம் கெட்டு போயிடுமே...!!

அதனால சிரிச்சிட்டே அவனை பக்கத்தில
உக்கார வெச்சி சொல்லி குடுக்க ஆரம்பிப்பேன்..

" A., B., C., D.... "

பின்ன., என் சின்ன பையன் கோகுல்
Pre-KG Quarterly Exam-ல நல்ல மார்க்
வாங்க வேண்டாமா..?!!
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
அப்பா ; ஏண்டா நான் பாங்குக்கு போகசொன்னேன்
கைல கிளவ்ஸ் மாட்டிகிட்டு இருக்கியே
என்ன விஷயம்
;

;
; நீங்க தானே கரன்ட் அக்கவுண்ட்ல பணம்
எடுக்க சொன்னீங்க
.................................................................................................
நபர் 1 - நா கோவிலுக்குள்ள போனா மட்டும் அதிகமா ‘பொய்' பேசுவேன்...

நபர் 2 - ஏன் அப்படி..?

நபர் 1 - சன்னிதானத்துல நிக்கும் போது ‘மெய்' மறந்துடுவேன்... அதான் !!! ...
..............................................................................................................................................................

No comments:

Post a Comment