Saturday, October 12, 2013

கடி ஜோக்ஸ் 27


சபாபதி1 ;போய் நாலுஅணாவுக்கு பக்கோடா
நாலுஅணாவுக்கு அல்வா வாங்கிட்டு வாடா..

;சபாபதி 2; ரெண்டு நாலுஅணா கொடுத்து இருக்கீங்க
இதுல எந்த நாலுஅணாவுக்கு பக்கோடா 
எந்த நாலுஅணாவுக்குஅல்வா சொல்லவே இல்லை
_______________________________________________________________________

# வார விடுமுறையில் வீட்டு வேலை எதாவது ஹெல்ப் பண்ணுவிங்களா

@ மனைவி துணி காய போட ஹெல்ப் பண்ணுவேன்

# நீங்க தான் துணி காய போடுவிங்களா

@ அவங்க துணி காய போட நான் துவச்சு கொடுப்பே ன்

# க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
____________________________________________________________________________---

கட்டபொம்மன் திருநேவெலிக்காரன். உங்க எல்லாத்துக்கும் தெரியும்.. அப்படின்னா உன்மையா கட்டபொம்மன் எப்படி வசனம் பேசிருப்பாரு.... (கற்பனதான் - வீரத்தோட கோபத்தோட பேசுற வார்த்தைகள் இது எங்க ஊர்ல இது சாதாரண வார்த்தகள்தான் தப்பா நினைக்காதீங்க))
க.பொ.. : எல அங்க என்ன கூவ மாரி நிக்க.. எவம்ல நீ...
ஜாக்‌ஷன் : நான் ஜாக்‌ஷன் துரை.
க.பொ. : அது என்ன எழவோ.. ஆமா எதுக்குல வந்த.??
ஜாக்‌ஷன் : வரி.. வாங்கறதுக்கு....

க.பொ. : என்னது வரி வாங்க வந்தியா.. எலே சவத்து மூதி, வயக்காட்டுக்கு வந்தியா லே, வெள்ளாம பண்ணியா லே, எரும மாட்டு பயல நாலு மாடாவது மேச்சியால, இல்ல நாத்து நட்டியா லே, கள புடுங்கினாலே, இல்ல இங்கன சாணி பொறுக்கிட்டு அலயற பொண்டு புள்ளயளுக்கு மஞ்ச கிஞ்ச அறச்சி கொடுத்தியா லே,

எல நீ யேன் ஆத்தா வயித்தலயா பொறந்த பொருக்கி பயல, எல நீ யேன் மாமனால, இல்ல மச்சானா எலே மானங்கெட்ட பெயல, நீ யேன் பங்காளியால, செத்த மூதி ராந்த கல்லு கூவ, பிச்சகார பயல யார்டல கேக்க வரி, எதுக்குல கேக்க கிஸ்தி, நான் உங்கிட்ட சிட்ட வட்டிக்கால துட்டு எடுத்துருக்கேன் எங்கிட்ட வந்து வட்டி கேக்க நாரப்பயல. உங்கப்பன்ட போய் கேளுல வட்டி, மரியாதயா இங்கிட்டு இருந்து ஓடிப்பொயிரு இல்ல கதவிடுக்குல வச்சி கோழி தலைய நசுக்குற மாரி நசுக்கிடுவேன் ரஸ்கல்..

ஜாக்‌ஷன் : பின்னங்கால் பெடரில அடிக்க ஓடுறார்..
_____________________________
டீச்சர் : ஒருத்தர் கிட்ட 200 ரூபா இருக்கு...அவரு நாலு பிச்சைகாரர்களுக்கு 100ரூபாயா 
கொடுக்குறாரு...இந்த கணக்கு சரியா?? தப்பா...??

மாணவன் : சரி தான் டீச்சர்...

டீச்சர் : எப்படி ??

மாணவன் :நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல டீச்சர்...

டீச்சர் : ????
________________________________________________________________
மகன்: தந்தை உரையாடல்.....

மகன்: "அப்பா என் புது செருப்பு கடிக்கிது" எனவே நீங்கள் போட்டுக்கொள்ளுகள்
.
அப்பா: என்னை என்ன கொஞ்சுமா ??????????!
_____________________________________________________________________

நான் சின்னப் புள்ளையா இருக்கும் போது வீட்டுக்குக் கல்யாணப் பத்திரிக்கை கொடுக்க யாரோ வந்திருந்தாங்க...'குட்டிம்மா..உன் பேர் சொல்லேன்...என்ன படிக்குற? பாட்டு பாடுவியா பாடு..பாடு'ன்னு என்னைப் பாடாப்படுத்துனாங்க...சரின்னு ஒரு பாட்டு எடுத்துவுட்டேன்...அவிங்க போனப் பெறகு எங்கம்மா மொத்து மொத்துன்னு மொத்திப்புட்டாங்க...

அந்தப் பாட்டு.....

'எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்த என் தலைவன் விட்டுவிட்டுச் சென்றானடி...இன்று வேறுபட்டு நின்றானடி...'

# இதுக்குப் போயி எதுக்கு அடிச்சாங்க?
__________________________
வாடிக்கையாளர்: வாழைப்பழம் எவ்வளவுப்பா?

கடைக்காரர்: ஒரு ரூபாய்.

வாடிக்கையாளர்: 60 பைசாவுக்கு வராதா???

கடைக்காரர்: 60 பைசாவுக்கு தோல் தான் வரும்.

வாடிக்கையாளர்: இந்தா 40 பைசா, தோல வச்சிக்கிட்டு பழத்த கொடு

_______________________________________________
இலங்கையைப் பிரிப்பதில் காங்கிரசுக்கு உடன்பாடில்லை - நாராயணசாமி

# சார் அது வேற நாடு. நாம நம்ம நாட்டை மட்டும்தான் பிரிக்கணும்...

முடியாது என்று சொல்பவன் முட்டாள்...
முடியும் என்று சொல்பவந்தான் புத்திசாலி...

இப்ப சொல்லுங்க...என் “செல்”லுக்கு டாப்-அப் பண்ண முடியுமா...முடியாதா...?
.............................................................................
இன்னிக்கு நம்ம மேடம்கிட்ட

" என்னங்க பண்ணிட்டு இருக்கீங்க..?

"இனிப்பா " சர்க்கரை பொங்கல் செய்வது எப்படினு
ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்கேன்.. "

" வெளங்கிடும்..! "

" அதை பிள்ளையாருக்கு வைக்கலாமா வேண்டாமானு
யோசிச்சிட்டு இருக்கேன்.. "

" சுத்தம்..! "

" இப்ப என்ன பண்றது வெங்கட் சார்... "

" செஞ்சி பாருங்க.. ஆனா பிள்ளையாருக்கு வைக்க
வேண்டாம்... பரமசிவனுக்கு வைச்சிடுங்க...
அவருக்கு தான் ஏற்கனவே எக்ஸ்பீரியன்ஸ்
இருக்கு.. ( விஷத்தை முழுங்கி )... " 


ஒரு ஆசிரியர்,

கையில் ஒரு கப் மதுவுடன் வகுப்பறைக்குள் நுழைந்து மாணவர்களிடம் கேட்டார்,

"இது என்ன?"

"மது சார்... " என்றனர் அனைவரும் கோரசாக.

"எப்படி உங்களுக்கு தெரியும்?"

"அதான் தெருவுக்கு தெரு விக்கிறாங்களே சார்"

இப்பொழுது ஒரு புழுவை எடுத்த ஆசிரியர், அந்த மதுக்கிண்ணத்தில் போட, புழு துடி துடித்து இறந்தது.

இப்பொழுது மாணவர்களைப் பார்த்துக் கேட்டார்,

"இதைப் பார்த்ததும் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?"

ஒரு மாணவன் எழுந்தான்,

"சார் ... இவ்வளவு நாளும் தெரியாம இருந்த உண்மை இப்பதான் சார் தெரிஞ்சது"

"என்ன?" ஆர்வத்தோடு கேட்டார் ஆசிரியர்.

"வயித்துல இருக்குற புழு எல்லாம் செத்து போகணும்னா மது குடிக்கனும்னு"

# டேய்.. டேய்.. டேய்...

_________________________________________________

உறவுகள் பலவிதம் !


அம்மா வெளியூரில் இருக்கும் மகனிடம் நலம் விசாரிக்கிறார் 

அம்மா - எப்படிப்பா இருக்கா?

மகன் - 5n [fine aamaa- interpreted ]

அம்மா- போன வாரம் காய்ச்சல் வந்தது என்று சொன்னாயே?

மகன் - k

அம்மா - ஹாஸ்டல் சாப்பாடு பரவாயில்லையா?

மகன் - s

அம்மா- படிப்பு எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு?

மகன் - gd

அம்மா- அடுத்த மாசம் வரும் உன் பிறந்த நாளுக்கு ஐ பெட் வாங்கலாம் என்று பார்க்கிறேன். என்ன மேக் வேண்டும் என்று சொல்றியா?

மகன்.- மா, உங்களுக்கு அதெல்லாம் தெரியாது. நான் பூஜா ஹாலிதேச்க்கு அடுத்த மாசம் வருவேன் இல்லையா அப்பா நானே செலெக்ட் பண்ணிக்கறேன். நீங்க அவசரபடாதீங்க...
இதை படித்து விட்டு, இது எனக்கும் எஞ்சினியரிங் படிக்கும் என் மகனுக்கும் நடந்த சேட் உரையடல் என்று நினைத்து கொள்ள கூடாது... ஒரு அம்ம்மா - ஒரு பையனுக்கு இடையே நடந்த உரையாடல் 

சரி உறவுகள் பலவிததுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?

வந்து விட்டேன் 

டீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் இருக்கும் இடையே இருக்கும் நெருக்கத்தை 0- 10 அளவுகோலில் அளந்தால் எப்படி இருக்கும்/=?

அப்பா - பையன் - 2 
அக்னி நட்சத்திரம் கார்த்திக் - பிரபு மாதிரி  

அம்மா - பொண்ணு 4 
குடுமி பிடி சண்டை நடந்தாலும் ஓகே  அப்பப்போ கொஞ்சிக்குவங்க 

அம்மா - பையன். 6 
அப்பப்போ அம்மாவை காலை வருவது போல பேசினாலும், கிண்டல் பண்ணினாலும் பாசம் இருக்கும் 

அப்பா - பொண்ணு - 8 
ரொம்ப களோசா இருப்பாங்களோ என்று எனக்கு ஒரு சந்தேகம். எனக்கு அனுபவம் இல்லை. 

___________________________________________________________

நீண்ட நாட்களுக்குப் பின் நண்பனிடமிருந்து அலைபேசி அழைப்பு....

"ஏண்டா மச்சி ... எப்படி இருக்க? ரொம்ப நாளா போன் பண்ணவே இல்லை?" கேட்டேன் நான்.

"ஒண்ணும் இல்லைடா ... பேலன்ஸ் இல்லைடா!"

"அட கூறுகெட்டவனே ...பேலன்ஸ் இல்லைன்னா என்னடா ... தூண்லயோ இல்லை குட்டி சுவத்துலயோ சாய்ஞ்சுகிட்டு பேச வேண்டியதுதானே!"

#"டமார்"னு சத்தம் கேட்டுச்சி ... பாவம், போனையும் உடைச்சிட்டானோ....

....................................................................................................................................

புருஷன் : "நெஞ்சுல லேசா வலிக்கது மாதிரி இருக்கு..
ஹார்ட்ட் ப்ராப்ளமா இருக்குமோ தெரியலையே ?"
ம்னைவி : "ஹார்ட்டுன்னு ஒண்ணு இருக்கிறவங்கதான் அதப்பத்தி
கவலப்படணும் ..உங்களுக்கு அதெல்லாம் வராதுங்க."..?

.................................................

மனோவைத்தியரிடம் பெண்மணி: டாக்டர் என் கணவன் தான் ஒரு கோழி என்று சொல்கிறார் டாக்டர்: எத்தனை நாளாக இப்படி? பெண்மணி: மூன்று வருஷமாக டாக்டர்: ஏன் இவ்வளவு நாட்கள் கழித்து வருகிறீர்கள்? பெண்மணி: இதுவரை எங்களுக்கு முட்டை தினசரி தேவைப்பட்டதே! டாக்டர்: (மனதுக்குள்) இந்தப் பெண்மணிக்குத்தான் முதலில் சிகிச்சை தேவை ................

1 comment:

  1. How come there are no other features ? What about Periyaval's words of wisdom? Good nutrition news? Recipes, Home remedies? You used to have them before ! I love them.Love Rupachitti

    ReplyDelete