பெற்றோர்கள் பெண்களைப் பெற்று விட்டு கேட்கும் கேள்விகள் தான் எத்தனை? பெற்றோர்கள் ஆகட்டும், பெண்கள் ஆகட்டும் பையனுடன் பேசும்போது, கேட்பது அவனுடைய சம்பளம், எந்தக் கம்பெனி , இதெல்லாம் இல்லை, உன் வீட்டில் எத்தனைக் குப்பை தொட்டி ( dustbin ), எவ்வளவு லக்கேஜ், அக்கம் பக்கம் எத்தனை பேக்கேஜ் ( baggage ) .இது தான் கேள்விகள்!
இன்னும் புரியலையா? அம்மா, அப்பா, தங்கை, தம்பி, பாட்டி தாத்தா இவர்கள் தான் இந்த தினுசு குப்பை தொட்டி, லக்கேஜ்,பேக்கேஜ் பேர்கள் ..
இப்படிக் கேள்விக் கேப்பவர்கள் வீட்டில் இவர்களே மற்றவர்களுக்கு குப்பை தொட்டி, லக்கேஜ்,பேக்கேஜ் தான், அதை மறந்து விட்டு எப்படி இவர்களால் இப்படிப் பேசத் தோணுகிறது?
நாளைக்கு கல்யாணம் பண்ணிக்கொள்ளும் பையன் பெண்களுக்கே இந்தக் கதி வராதென்று என்ன நிச்சயம்?
இப்போ என்னிடம் நிறைய பேர் பையனுக்கு இடம் பார்க்க சொல்லுகிறார்கள்,
ஏழைப் பெண்ணாக இருந்தாலும் சரி, அதிகம் படிக்காவிட்டாலும் சரி, நல்ல பெண்ணா பார் என்று சொல்கிறார்கள் .
எனக்கு தெரிந்தவரை பெண்கள் இப்போ கம்மி, பையன்கள் ஜாஸ்தி. மேலும் பெண்களும் இப்போது குறைவாகப் படிப்பதில்லை, நல்லாப் படித்து நல்ல வேளையில் சேர்ந்து நாலு காசு சம்பாதித்து முன்னுக்கு வருகிறார்கள். சொந்தக் காலில் நிற்கும் அளவிற்கு ஒரு தகுதியை ஏற்படுத்திக் கொள்ளுகிறார்கள். அவர்கள் முன்னிலையில் நிறைய 'பிக் அண்ட் சூஸ்' ஆப்ஷன் இருக்கு! இது தவறு என்று நிச்சயமாக நான் சொல்ல மாட்டேன்.
ஆனால் ஓரளவுக்கு கொஞ்சம் தழைஞ்சு வந்து, ரியாலிடி என்ன என்பதையும் தெரிந்துக் கொள்ளணும் .
இதற்குபெற்றவர்கள்தான்கண்ணைத்திறக்கணும்தெரியாதவர்களுக்கும் விளக்கிசொல்லணும் குப்பைதொட்டி,லக்கேஜ்,பேக்கேஜ் எல்லாம் ஒரு அவசியமே!
குப்பைதொட்டி இல்லாவிட்டால் குப்பையை எங்கேப் போடுவீர்களாம் ? உங்கள் அப்பா அம்மாவும் ஒரு குப்பைத் தொட்டியே, உன் அண்ணன் தம்பி மனைவிக்கு!
எத்தனையோ பேர் பையனுக்கு வீடு சொந்தமா, ஜாயிண்ட் ப்ராபர்டியா , கல்யாணம் ஆனால், கூட்டுக் குடித்தனமா/ ...என்றெல்லாம் கேள்வி ஜாதகம் பறிமாரும்போதேக் கேட்கிறார்கள் .
போறாதக குறைக்கு பொண்ணுங்களே, 'எம்சி'யே என்னப் படிப்பு, வெறும் 'சியே' தானா ன்னு பாத்து நீக்கிவிடுகிறார்கள்.
நிறைய பணம் இருந்தால், வீட்டோட மாப்பிள்ளையாக இருப்பயான்னு கேள்விகள்.
பொண்ணுங்களில் எத்தனைப் பேருக்கு சமைக்கத்தெரியும்?
ஒரு முறை 'விஜய்' டிவி 'நீயா நானா'வில் கூட அம்மாக்கள் பெருமையாக ஏன் பெண்களுக்கு சமைக்கத்தெரியாது என்று சொன்னார்கள்.
மேலும் சில பெண்கள் கல்யாணம் நிச்சயம் செய்யும் போதே மேலும் படிக்க விரும்புவதாகவும் அதனாலேயே வெளிநாட்டில் இருப்பவரைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பதாகவும் சொல்கிறார்கள்.அடுத்தவன் தலையில் கை வை, ஒரே கல்லில் இரண்டு மாங்காய். படிப்புக்கு படிப்பாச்சு, கல்யாணமும் ஆச்சு.
ஆமாம் போடாத பையன்களாக இருப்பின் பெண்ணைப் பெற்றவர்கள் கொஞ்சமும் கவலைப் படுவதில்லை, பொன்முட்டை இடும் வாத்து இருக்கும் வரை, இப்போப் பார்த்தால் முப்பத்து ஐந்து வயதிற்குக் கூட பெண்களும் பையன்களும் இருக்கிறார்கள்.காரணம் எங்கேயாவது அட்ஜஸ்ட் பண்ணிப் போகாததினால்!
சிலப் பெண்களோ, மேலும் படிக்கணும், சம்பாதிக்கணும், இல்லை மனதில் வேறொருவன் இருப்பதாலும் பெற்றோர்கள் சம்மதிக்காததினாலும் நிச்சயதார்த்தம் வரை போய் கல்யாணத்தை நிறுத்திவிடுகிறார்கள்.
பையன்களோ, சீக்கிரம் வாழ்க்கையில் செட்டில் ஆகணும் என்பதற்காகவே அதிகம் மேல் படிப்பு படிப்பதில்லை .கொஞ்சம் வேலை செய்த பிறகு படிக்கலாம்னு இருப்பார்கள் அதுவே அவர்களுக்கு எதிராக போய் விடும்.
கூடப் பிறந்த தங்கை, அக்கா விற்குக் கல்யாணம் செய்யும் பொறுப்பும் இவர்களைச் சார்ந்து இருக்கும் பட்சத்தில் ரொம்பவேக் கஷ்டம்.
பெண்ணும் பையனும் யாருக்கு, என்னென்ன கடமை பாக்கி இருக்கு, திருமணம் ஆனப் பின்னாடி இருவருமே ஒருத்தர் ஒருத்தர் குடும்பத்திற்கு என்னென்ன செய்ய வேண்டியது பாக்கியிருக்கு, எப்படி செய்வது என்று ஒரு அக்ரிமேன்டிற்கு வந்து செயல் படுத்த வேணும்.
இதற்கு, இரண்டு பேருமே உட்கார்ந்து, சில விஷயங்களை நேருக்கு நேர் தெளிவாகப் பேசி முடிவெடுக்கணும், அதற்கு பெரியவர்கள் ஒத்துழைப் பது நல்லது, அட்லீஸ்ட் தங்களுடைய வாரிசுகளுக்காக!
No comments:
Post a Comment