Thursday, July 11, 2013

தேவராஜ ரகசியம்..! ----பெரியவா

பெரியவா தேனம்பாக்கத்தில் தங்கியிருந்த சமயம். ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் சீமா பட்டாசாரியாரை அழைத்து வரும்படி சொன்னார். அவரும் வந்து வந்தனம் செய்தார்.

“இன்னிக்கு என்ன் திதி?”

பட்டர் மெதுவாக “ஏகாத்சி” என்றார்.

“உபவாசம் நமக்கு மட்டும் தானா? இல்லே, வரதனுக்கும் தானா?”

பட்டர் திகைத்துப் போய் நின்றார்.

“பெருமாளுக்கு இன்னிக்கு நைவ்வேத்யம் ஏன் செய்யல்லே?”

அதிர்ச்சியடைந்த பட்டர் நாக்குழற “தெரியல்லே.. விசாரிச்சிண்டு வரேன்” என்று கலவரத்துடன் கோயிலுக்குச் சென்றார்.

விசாரணையில் உள்கட்டில் ஏதோ தவறு நடந்துள்ளது என்ற உண்மை தெரிய வந்தது. அதை சரி செய்து, தக்க பிராயச்சித்தம் செய்து, பெருமாளுக்கு திருவமுது படைத்து, பிராசதத்தை பெரியவாளுக்கு திருவமுது படைத்து, ப்ரஸாதத்தை கொண்டுவந்து சமர்ப்பித்தார் பட்டர்.

வரதராஜ பெருமாளுக்கு நைவ்வேத்தியம் நடக்கவில்லை என்பது பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது? தெரிந்திருந்தாலும், அதைப்பற்றி அவர்கள் கவலைப் படுவானேன்?

தேவரகசியம் என்கிறார்களே? அது இதுதானோ? இல்லை, இது தேவராஜ ரகசியம்..! (வரதராஜருக்கு, தேவராஜன் என்ற திருநாமம் உண்டு.)

No comments:

Post a Comment