65 ஆண்டுகளுக்கு முன்
நீடாமங்கலம் ஸர்வமான்ய அக்ரஹாரம். சிவன் கோவிலிருந்து சற்று தூரத்தில் மேற்கு பார்த்த வீடு. உள்ளே சீதா மாமி அஷ்டபதி பாடிகொண்டிருகிறாள். என் வயது 12. "விரசித சாடு வசன ரசனம் ". இந்த அடியை மட்டும் திருப்பி திருப்பி பாடுகிறாள். கூடத்தில் அவள் கணவர் சப்பாணிச்சுப்புணி மாமா, சூம்பின கால்களை மடித்து போட்டபடி தூணில் சாய்ந்தபடி இரண்டு கைகளையும் தோளில் மாற்றி கொண்டு உட்கார்ந்து இருந்தார். என்னை பார்த்து வாய் குழற தடுக்கிறார். "அவள் பாட்டுக்கு பாடட்டும் சித்தே பேசாமல் இரு " என்கிறார்.
சாமா நேத்திக்கு மாமி என்னை தூக்கிண்டு அஷ்டபதி பாடிக்கொண்டு நர்த்தனம் ஆட ஆரம்பித்து விட்டாள் . நாலடி பாடுவதற்குள் மூச்சு இறைக்க ஆரம்பித்தது. போதும் னு சொன்னா கேட்டால் தானே.
"த்வமஸி மம ஜீவனம் த்வமஸி மம பூஷணம் த்வமஸி மம பவ ஜலதி ரத்னம் " னு பாடிப்பிட்டு என்னை கட்டி முத்தமிட்டாள்டா" " கண்ணா! இப்பிடியெல்லாம் சொல்லிபுட்டு என்னை பொத்துனு போட்டுட்டு ஓடி விட்டாயே ...." என்று சொல்லி என்னை மெதுவா எறக்கி விட்டா . எனக்கு என்ன் பண்றதுன்னு புரியலேடா சாமா !. நான் சொன்னேன் "சீதே இந்த சப்பாணி கிட்டே இவ்வளவு ப்ரியம். உனக்கு நான் என்ன் பண்ண போறேன் " என்று அவள் காலை பிடிச்சிண்டு கதறிபிட்டேண்டா !. இப்போ அதை நெனசிண்டு அவ பாடறா பாருடா " "விரசித சாடு வசன ரசனம் " எழுந்து அவள் கைகளை பிடிக்க முடியலே. அதான் காலை பிடிச்சுட்டேன்டா. அதிலேயும் ஒண்ணும் தப்பிலேடா. அவ சாக்ஷாத் ராதாதேவி . இந்த சப்பாணிச்சுப்புணிய் கூட கிருஷ்ணனா பார்க்கிறாள்.
இந்த சப்பாணிச்சுப்புணி மாமாவும் சீதா மாமியும் தான் விவேகமறியாத என் பசுமையான மனதிலே ஆழ படிந்தவர்கள். யார் எங்கு அஷ்டபதி பாடினாலும் சீதா மாமியை நினைத்து விம்மாமல் இருக்க முடியாது.
3 வருசங்களுக்கு முன்னர் கொரடாச்சேரி அடுத்த முகுண்டனுரில் என் தகப்பனார் பாகவத ஸ்ப்தாகம். அங்கு சீதா மாமி தகப்பனாரை சந்தித்தேன். அவர் சொன்னார் "சீதா சுப்புணியை தான் கல்யாணம் பண்ணிக்க போவதாக சொல்கிறாள். கேட்டால் தினமும் அஷ்டபதி பாடிப்பிட்டு கிருஷ்ணனிடம் வேண்டிபபாளாம் "கிருஷ்ணா நீ தான் என்னை கல்யாணம் பண்ணிகணும் னு. அவ கனவுல கிருஷ்ணன் வந்தானாம். வந்து "சுப்பிணி அத்தானோட ஒன்னா சேர்ந்து ட்டேன். நானும் அவனும் ஒண்ணு. நீ அவனை கல்யாணம் பண்ணிண்டா என்னையே கல்யாணம் பண்ணிக்கிறாப்போல என்று சொல்லி சுப்பிணி யிடம் கிருஷ்ணன் ஐக்கியமாயிட்டானாம் "
சீதை என்ன சொல்லியும் கேட்கவில்லை. கண்ணன் தான் சுப்புணி அத்தான். சுப்புணி அத்தான் தான் கண்ணன் என்று தீர்மானமாக சொல்லிவிட்டாள்.
சுப்பிணி பிறவியிலேயே சப்பாணியாக இருந்தான். இடுப்புக்கு கீழே சுவாதீனம் இல்லை. எத்தனயோ வைத்தியம் பார்த்தாகி விட்டது. சீதையின் பிடிவாதத்தால் கல்யாணம் நடந்தது. சீதை அவனோடு தைரியமாக குடித்தனம் நடத்துகிறாள். அவள் அவனோடு சந்தோஷமாக இருக்கிறதைப்பார்த்தால் எங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.
15 வருடங்களுக்கு பிறகு புதுகோட்டை நரசிம்ஹ ஜயந்தி க்குப் போய் இருந்தேன். கோபாலக்ருஷ்ண பாகவத சுவாமி, வைகாசி படபடக்கிற வெய்யிலில் நாமாவளி போட்டுகொண்டு உஞ்சவிருத்தி எடுத்து வருகிறார். ஒரு வீட்டு வாசலில் அக்ஷதை போட தாமதமாகிறது. பாகவதர் நாமாவளி யை விஸ்தார படுத்துகிறா

No comments:
Post a Comment