நான் கடவுளுடன் வாழ்ந்தேன்.
பகுதி---5
நான் உடனே என் தந்தையிடம் நடந்ததைச் சொல்லுவதற்குச் சின்ன காஞ்சீபுரம் விரைந்தேன். பெரியவா, நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் படிக்க வேண்டும் என்று சொல்வதைக் கேட்டு, என்னைவிட, அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார். எனக்குப் பெரியவாளிடம் நம்பிக்கை இருந்தால், அவர் சொல்படி கேட்க வேண்டும் என்றார். மேலும், “ஆனா, மடம் உன்னுடைய ஸஹாயத்துக்கு வரும் என்று எதிர்பார்த்து, எதிலும் இறங்காதே. பெரியவா வேறு மடம் வேறு என்பதை எப்பொழுதும் ஞாபகம் வெச்சுக்கோ. நான் ஒனக்கு ஒரு உதவியும் பண்ணமுடியலைன்னு எனக்கும் வருத்தமா இருக்கு; இப்போ நீ எனக்கு உதவியா இருக்க முடியலையேன்னு ஸங்கடப்படாதே. என்னோட விதியை உன்னாலே மாத்தமுடியாது” என்று சொல்லிவிட்டு, தன் ‘கைங்கர்ய’த்திற்குபபோய் விட்டார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து ‘அப்ளிகேஷன் ஃஃபார்ம்’ வாங்கி வந்தேன். அதைப் பூர்த்தி செய்து அனுப்ப, சில தினங்களே இருந்தன. இதில் ஒரு சிறிய சங்கடம் இருந்தது; என்னுடைய SSLC மதிப்பெண்களின் ‘லிஸ்டி’ல் ஒரு GAZETTED OFFICER’இன் கையெழுத்து வாங்க வேண்டும். GAZETTED OFFICER என்றால் யார் என்றே எனக்குத் தெரியாது.. சென்னையிலிருந்து ஒரு பக்தர்,----வயதானவராகவும், பழையகால மனிதராகவும் தோன்றினார்-----வந்திரந்தார்; ஒரு ‘ஹிந்து’ நாளிதழைப் படித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தா. அவரிடம் சென்று ‘அப்ளிகேஷனை’க்காட்ட, அவருக்கு யாராவது GAZETTED OFFICER’ ஐத் தெரியுமா என்று கேட்டேன். அவரே அதில் கையெழுத்திட்டுத் தருவதாகச் சொன்னார். அவரிடமிருந்து அதை வேகமாக திருப்பி வாங்கியபடி, “ஒரு உண்மையான GAZETTED OFFICER தான் அதில் கையெழுத்திட வேண்டும்” எனக் கூறினேன்! அவர் பெரிதாகச் சிரித்து, “என்னைப் பார்த்தால் GAZETTED OFFICER மாதிரி தெரியலையா?” என்றார்.
பிறகு தான் மெட்ராஸ் யுனிவெர்சிடியில் ஒரு CHIEF PROFESSOR என அறிமுகப்படுத்திக் கொண்டார் . அதைக்கேட்டு நான் மிக வெட்கப்பட்டு அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அவர் எனக்கு வாழ்த்துக்கூறிவிட் டு, அதில் கையெழுத்திட்டுக் கொடுத்தார். இந்நிகழ்ச்சி எனக்கு ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக்கொடுத்தது. அன்று முதல், யாரையும் அவருடைய தோற்றத்தை வைத்து எடைபோடும் பழக்கத்தை நிறுத்தினேன். அந்த நல்ல மனிதரின் பெயரை நினைவு வைத்துக்கொள்ளவில்லை வரத ஐயர் என்ற மாதிரி சிறிய ஞாபகம்.
சில நாட்கள் கழித்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து, அனுமதிக் கடிதம் (ADMISSION LETTER) வந்தது. பிறகுதான் அறிந்தேன் முந்நிலையில் இருந்த சில மாணவர்களில் நானும் ஒருவனென்று. பெரியவாளிடம் சொல்வதற்கு ஓடினேன். அப்பொழுது, சென்னையிலிருந்து வந்திருந்த சில நிபுணர்களிடம் அவர் முக்கியமாக ஏதோ ஒன்றைப்பற்றி பேசிக்கொண்டிருந்தார். அவர் அருகில் போகத் தயக்கமாக இருந்தது. கையில் ஒரு கடிதத்துடன் என்னைப் பார்த்த அவர், பேச்சை அப்படியே நிறுத்தி விட்டு, என்னைக் கேட்டார், “ ‘அட்மிஷன்’ லெட்டெர்’ கிடைச்சுடுத்து இல்லே?” நான் ஆம் என்று தலையை ஆட்டினேன். அவர் முகம், மகனுக்கு யுனிவெர்சிடி அட்மிஷன் கிடைத்த சந்தோஷச் செய்தியைக் கேட்ட ஒரு தந்தையின் முகத்தைப் போல் இருந்தது. ( ஒரு ஜகத்குருவை ஸாதாரண மனிதர்களின் உறவுமுறையைக் கூறி, கீழ் மட்டத்திற்கு நான் இழுப்பதை, வாசகர்கள் மன்னிக்க வேண்டும். உண்மை என்னவென்றால் அவர் என்னுடைய ஒவ்வொரு மட்டத்திலும் இருந்த சூன்யத்தை நிரப்பினார்).
கூட்டத்தில் இருந்த ஒருவரைப் பெரியவா கூப்பிட்டார். “சிதம்பரத்தில தங்க நகை வியாபாரி ரத்னசாமி செட்டியார்கிட்ட வேலை பார்க்கிற மேனேஜர்தானே நீ?” என்று கேட்டார். அவர் ஆம் என்றார்.
“உங்க செட்டியார் நான் ஏதாவது கேட்டா செய்வாரா?”--- என்று பெரியவா அவரைக் கேட்டார்.
“செட்டியார் பெரியவாளோட பெரிய பக்தர். அதனால, பெரியவா என்ன சொன்னாலும் அவர் நிச்சயமாகச் செய்வார்.”------என்றார் அவர்.
“எனக்குப் பெரிசா ஒண்ணும் வேண்டாம். இங்க நிக்கற இந்த நல்ல பையனிடம் எனக்கு அக்கறை இருக்கு. இந்தப் பையன் யுனிவெர்சிடியில சேரணும்; அதுக்கு வேண்டியதைச் செட்டியாரிடம் செய்யணும்னு சொல்லு”--- என்றார் பெரியவா.
“அந்தக் காரியம் செய்யப்படும்”------என்றார் அந்த மேனேஜர்.
பெரியவா என் பக்கம் திரும்பி, ‘ஒன்னோட ‘ப்ராப்ளம்’ தீந்துது. போய் நன்னாப் படி”----என்று சொல்லிவிட்டு, அந்த நிபுணர்களுடன் தன் ஸம்பாஷணையைத் தொடர்ந்தார்.
கொஞ்ச நேரம் கழித்து, நான் அந்த மேனேஜரைப் பார்த்து, என்னுடைய முதல் ‘டெர்ம்’ கட்டணமான 110 ரூபாயைச் செட்டியார் எனக்குத் தரவேண்டும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினேன். அவர், அதில் கஷ்டமே இருக்காது என்றும், சிதம்பரம் வந்தவுடன், என்னைச் செட்டியாரைப் போய் சந்திக்கவும் சொன்னார்.
இப்படியாக என் ‘ட்யூஷன் ஃஃபீஸ்’ ஏற்பாடு செய்யப்பட்டவுடன், நான், சிதம்பரத்தில் தங்குவதற்கும், சாப்பாட்டுக்கும் என்ன செய்வது என்று யோசிக்கத் தொடங்கினேன். அண்ணாமலை யுனிவெர்சிடியில் படிக்கப்போகிறேன் என்று எதிர்பார்க்காததாலும், என்னுடைய அப்பா ஆபரேஷன் செய்யப்பட்டதாலும், என் தாயார், குடும்பத்தை, சிதம்பரத்திலிருந்து சின்னகாஞ்சீபுரத்திற்கு மாற்றி விட்டார். அந்த சமயத்தில், குறிப்பாக இதைப்பற்றி பெரியவாளிடம் நான் கேட்க விரும்பவில்லை. ‘உங்கள்மேல் நம்பிக்கை இருக்கு’ என்று அவரிடம் முன்னாலேயே சொல்லிவிட்டதால், வேறொன்றும் எனக்கு செய்யமுடியவில்லை. என்னுடைய இரண்டாவது அக்கா மீனாக்ஷியும் அவள் குடும்பமும் சிதம்பரத்தில் வசித்து வந்தனர். பெரியவா ஏதேனும் ஏற்பாடு செய்யும் வரை சில தினங்களுக்கு அவள் வீட்டில் தங்கலாம் என்று முடிவு செய்தேன்.
சிதம்பரத்திற்கு சென்று ரத்னசாமி செட்டியாரின் பெரிய தங்க நகைக் கடைக்குச் சென்றேன். அவருடைய மேனேஜர் இதைப்பற்றி சொன்னதாகச் சொன்னவர், நான் என்ன எதிர்பார்க்கிறேன் என்று கேட்டார். ட்யூஷன் ஃஃபீஸ் 110 ரூபாய் வேண்டும் என்றேன்.
அதற்கு அவர், “நீ என்னுடைய மேனேஜரைத் தப்பாகப் புரிந்து கொண்டிருக்கிறாய். நான் எப்படி உனக்கு 110 ரூபாய் அப்படிக் கொடுக்க முடியும்? உங்கிட்ட ஏதானும் வீடோ, நிலமோ, நகையோ அடகு வைக்க இருக்கா? இருந்தா அதை வைத்துக்கொண்டு ஒரு கடனாக் கொடுக்க முடியும்.”
“என்னிடம் அவைகளில் எதுவும் இல்லை” என்றேன்..
“என்னோட ஸ்வாதீனத்தின் மூலம் உனக்கு அட்மிஷன் வாங்கித்தரமுடியும என்று நினைத்தேன். உனக்கோ அட்மிஷன் கிடைத்து விட்டது என்கிறாய்.. நீ கேட்கும் பணம் என்னால் கொடுக்க முடியாது.”--- என்றார் செட்டியார்.
அவருடைய மேனேஜரை எங்கும் காணவில்லை!.
இதுதான் நான் கேவலப்படுத்தப்பட்ட முதல் அனுபவம்.. பெரியவா என்னைக் கைவிட்டு விட்டதாக நினைத்தேன். பெரியவாளின் மேலிருந்த என்னுடைய நம்பிக்கை க்ஷணகாலத்துக்கு தவிடு பொடியாயிற்று. ஏன் பெரியவா என்னை இத்தகைய ஒரு கேவலமான அனுபவத்துக்கு ஆளாக்கினார்? இந்த சிறு தொகையை மடத்திலிருந்தே கொடுத்திருக்கலாமே? என்னுடைய தந்தை மடத்தில் ஒரு உண்மையான, கடும் உழைப்பாளி இல்லையா? இதைவிடத் தகுதி குறைந்தவர்களெல்லாம் மடத்தின் பணத்தை சாப்பிடுகிறார்கள். இப்படி பலவிதமான எண்ணங்கள் மனத்தில் முட்டிமோதிக்கொண்டே வந்தன.
போஸ்டாஃஃபீசுக்கு போய் மடத்தின் மேனேஜருக்கு ஒரு தந்தி கொடுத்தேன், “எனக்குப் பணம் கொடுக்க செட்டியாருக்கு விருப்பமில்லை என்று பெரியவாளிடம் தெரிவிக்கவும். மேற்கொண்டு என்ன செய்வதென்று பெரியவாளுடைய வார்த்தைக்குக் காத்திருக்கிறேன்.”
மோசமாகக் கைவிடப்பட்ட நிலையில், இந்த மேல்படிப்புக்கு ஆசைப்பட்டதே ஒரு பெரிய முட்டாள்தனமாகப் பட்டது. அக்காவின் வீட்டுக்குத் திரும்பிச் சென்றேன். போகும் வழியில் நடராஜா கோயிலின் மேற்கு மற்றும் வடக்கு கோபுரங்கள் தெரிந்தன. அவைகள் என்னைப் பார்த்து சிரிப்பது போல் எனக்குத் தோன்றியது.
அன்று காலை மடத்திலிருந்த பெரியவர் ராமகிருஷ்ண சாஸ்திரிகள் என்னுடைய அக்காவின் வீட்டுக்கு வந்திருந்தார். நான் வீட்டுக்குத் திரும்பியவுடன் அவர் என்னை வரவேற்றார். நான் அவரை மதிக்காமலே, உள்ளே சென்று,, குப்புறப்படுத்துவி ட்டேன். என் அக்கா கேட்ட கேள்விகளுக்கும் பதிலே சொல்லவில்லை. எனக்கு வெட்கமாயிருந்ததால அவரை முன்னால் வைத்துக்கொண்டு, செட்டியார் கடையில் நடந்ததைச் சொல்ல விரும்பவில்லை
ராமகிருஷ்ண சாஸ்திரிகள் என் முதுகைத் தட்டிக் கொடுத்து, “ஒன்ன எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.” என்றார்.
“பெரியவா என் பேரிலே அன்பா இருக்கார்னுதான் மடத்துல உங்க எல்லோருக்கும் என்னைப் பிடிச்சிருக்கு. இப்போ அந்தப் பெரியவாளே என்னைக் கைவிட்டுட்டார். எனக்கு ரொம்ப கேவலமாப் போயிடுத்து” என்று வேகமாகப் பதில் சொன்னேன்.
‘பெரியவாளைப் பத்தி அப்படியெல்லாம் சொல்லாதேப்பா! நீ கைவிடப்பட்டதாக எண்ணுவதை அவர் விரும்ப மாட்டார். என்னைப் பார்! அவர்தான் உனக்கு வேண்டிய இந்தப் பணத்துடன் என்னை இங்கே அனுப்பி வெச்சார்.”
இதைக்கேட்ட நானும் என் சஹோதரியும் அவரைக் கோபமாகப் பார்த்தோம்.
“நீ எம்மேலே கோபப்படலாம்; ஆனா, அந்தக் கருணாமூர்த்திக்கு எதிராக ஒரு வார்த்தை கூட சொல்லாதே! நீ அங்கிருந்து புறப்பட்டதுமே, பூஜையை முடித்துவிட்டு, என்னைக் கூப்பிட்டார்.. “எனக்கு அவனைப்பத்திக் கவலையா இருக்கு; அந்த செட்டியார் அவனுக்குப் பணத்தைக் குடுப்பாரான்னு ஸந்தேஹமா இருக்கு. நீ மடத்துக் காஷியர் கிட்ட போய், என்ன காரணம்னு சொல்லாம 110 ரூபா வங்கிண்டு வா” என்றார். தயக்கத்தோட காஷியர் குடுத்த பணத்தை எடுத்துண்டு பெரியவா கிட்ட போனேன், “அடுத்த ரயிலிலேயே சிதம்பரம் போயி, அங்கே என்ன நடக்கறதுன்னு கவனி! செட்டியார் அவனுக்குப் பணம் குடுக்கல்லேன்னா மட்டும் இதை அவன் கிட்ட குடு!”ன்னு சொல்லி அனுப்பிச்சார். பெரியவா சொன்ன பிரகாரமே நான் செஞ்சேன். நீ பெரியவாளோட பூர்ண அனுக்ரஹம் பெற்றவன்.” என்று சொன்ன ஸ்ரீ ராமகிருஷ்ண சாஸ்திரிகள், “என்னோட வேலை முடிஞ்சுது; நான் கிளம்பறேன்” என்று கூறிவிட்டு, காஞ்சீபுரம் கிளம்பிச் சென்று விட்டார்.
நானும் என் அக்காவும் பேசவே முடியாமல் நின்றோம். க்ஷண காலத்திற்கு நான் விட்டுவிட்ட, பெரியவா மேலே உள்ள என் நம்பிக்கை என்னிடம் திரும்பி வந்தது. இது அவருடைய, காரணம் கண்டுபிடிக்க முடியாத செயல்களில் ஒன்றோ அல்லது அவர் நிகழ்த்தும் அற்புதங்களில் ஒன்றோ என்று நினைத்தேன்.
தொடரும்…….

No comments:
Post a Comment