நான்
நிறைய முறை ,கேட்டும் பார்த்தும் இருக்கிறேன் . ஒரு சிலர் எப்பவுமே
முகத்தைதொங்கப்போட்டுக்கொண்டு , என்னவோ இந்த உலகமே அவர்கள் தலையில் தான்
இருப்பதாக தப்பித்தவறி அவர்களை எதாவாது கேட்டு விட்டாலோப் போச்சு அவர்கள்
சொல்லும் பதில் நம்மளை ஏண்டா கேட்டோம்னு ஆக்கிடும் !
அப்டித்தான்ஒருமுறை கோடிவீட்டுக் கோகிலாகிட்ட யதார்த்தமா கேக்கப் போய் வாங்கிக்கட்டிண்டதுதான் சரி .எதனால இப்டின்னு யோசித்துப்
பார்த்தா , இந்தமாதிரி சிலர் மனதுக்குள்ளே போராட்டம் நடத்திண்டு
இருப்பாளோன்னு கூட படும்.ஊருல போறதை மார்லப் போட்டுண்டு
",குடையறதே,குடையறதே "ன்னு இருக்கும் கூட்டத்தை ச்சேர்ந்தவர்களில் இவரும்
ஒருவர்.
இவர்களுக்கு மற்றொருத்தர் நன்றாக இருந்தாலேப் பொறுக்காது,பொறாமையும் பொச்சிளுப்பும் தாண்டவமாடும் இவர்கள் முகத்தில்.
இவர்கள்
பிரச்சினைன்னு ஒன்னு வரணும்னே நினைக்கமாட்டார்கள்,கடந்த பிரச்சினைகளையே
அசைப்போடும் பசுவைப்போல திருப்பி திருப்பி கோழிக் குப்பையைக் கிளருவதுப்
போல கிளறி கிளறி இருக்கிற சந்தோஷம், மன அமைதி எல்லாத்தையும் தூக்கிப்
போட்டுவிடுவார்கள். அமைதியை விரும்பாதவர்கள் , யாரையும் நிம்மதியாக
இருக்கவும் விட மாட்டார்கள் .
.அவர்களுக்கு சந்தோஷமே அவர்கள் மற்றவர்களுக்காக
செய்தவைகளே, மற்றவர்கள் இவருக்காக என்னன்ன செய்தார்களோ அதை எல்லாம்
மறந்துவிடும் ஜன்மங்கள் . பட்டக் கஷ்டங்களையே நினைத்தது உடலையும் மனதையும்
வருத்திக் கொள்பவர்கள் .
தொட்டதுக்கெல்லாம் கோபம் பொத்திக் கொண்டு வரும்
.இவர்களை எப்படியாவது மனசை மாற்றி சிந்திக்கச் செய்தாலும் , நாய்
சகளாத்தைப் போத்திக்கொண்டு படுத்ததைப் போல மனசு திரும்ப முருங்க மரம்
ஏறும். இவர்கள் புதை மணலைப் போல , இவர்களுடைய உக்கிரமான யோசனை அடுத்த
ஆளையும் இழுத்துவிடும் . இவர்களுடன் பழகுபவர்கள் ரொம்ப ஜாக்கிரதையாக
இருக்க வேணும். இவர்கள் அரை டம்ளர் காலி என்று இருப்பவர்கள்.
இவர்களுடைய கோளாறே ,எந்த விதமான ஏக்டிவிடியும் இல்லாமல் மனசைவெறுமையாக வைத்திருப்பவர்கள். இவர்களுக்கு புத்தகங்கள் படிப்பதிலோ பாட்டுக் கேட்பதிலோ ,வீட்டைஒழிப்பதிலோ பேரக்குழந்தைகளுடன் விளையாடுவதோ என்று எதிலும் ஒரு பிடிப்பில்லாமல் சுய பச்சாதாபதிலேயேஇருக்க விருப்பப்படுவார்கள் .
இவர்களை டிவிப் பார்க்க விடவேக் கூடாது ஏற்கனவே நெகடிவ் ஆக இருக்கும் இவர்கள் டிவிப் பார்க்காம இருந்தாலே நல்லது .அப்டிப் பார்த்தாலோ போச்சு அதை விட அனர்த்தம் வேற இல்லவே இல்லை .
இந்த மாதிரி இருப்பவர்களுடைய சகவாசத்தை துண்டிப்பது தான் சரி .
Rupa Dore rupa.dore@gmail.com
ReplyDelete5:38 AM (7 hours ago)
to me
So right !
If you have things to do there won't be time to be negative at all !
Anuradha Ramanan has written a lot about these people !