கொண்டை கடலை வடை செய்வது எப்படி?
ஊறவைத்து வடிகட்டிய கடலை 200 கிராம்
3 வத்த மிளகாய்
கறிவேப்பிலை 2 தழை
2 கழக் கோடி இஞ்சி
மஞ்சள் பொடி 1 ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
பொரித்து எடுக்க எண்ணெய்
மிக்ஸியில் ,கொண்டைக் கடலை,உப்பு, இஞ்சி, மிளகாயைப் போட்டு சிறிது தண்ணீர் தெளித்து நைசாக கெட்டியாக வடை தட்டும் பதத்திற்கு அரைத்து எடுக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை ,மஞ்சள் பொடி போட்டு நன்றாக கலந்து ,உருண்டை செய்து தட்டி எண்ணையில் போட்டு எடுக்கவும்.
வெங்காயம் . முட்டை கோஸ் , வாழைப்பூ போட்டும் வடை செய்யலாம் .
No comments:
Post a Comment