அபார்ஷன்- நல்லதா , இல்லையா?
என்ன இந்தப் பைத்தியம் என்னச் சொல்லப் போறதுன்னு நினைக்கிறீர்களா?
இப்ப சமீபத்துல விஜய் டிவில இந்தத் தலைப்புல ஒரு கருத்தரங்கம் வச்சாங்க .அதப் பாத்தப்ரம் தான் ப்ளாகுல எழுதணும்னு தோணித்து .
இப்ப மொதல் கேள்வியே ஏன் அபார்ஷன்வேண்டாம்?
எதனால என்கிறதெல்லாம் எல்லாருக்குமே தெரியும் .இருந்தாலும் ஒரு சிலர் ரொம்ப சீக்கிரம்னுட்டும் ,சிலர் குடும்பத்துல செட்டில் ஆகணும்னும் , சிலர் கவனக்குறைவாலவும் ,முன்ஜாக்கிரதையா இல்லாததாலும் , பண வசதி இல்லாததாலும் ,சிலர் பொறக்கப் போற கொழந்தைக்கு உடல் கோளாறு ஏற்பட வாய்ப்பிருப்பதாலும் ,தாயின்உயிருக்கு ஆபத்து வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாலும் , சிலர் அடுத்தடுத்து ஒரே பாலினம் கொண்ட குழந்தைகள் பிறப்பதாலும் ,அபார்ஷன்செய்ய முனைகிறார்கள். ( MTP )
மருத்துவர்கள் சொல்படி ஆறாவது வாரத்திலேயே இதயத்துடிப்பு அந்த சிசுக்கு இருப்பதால் அது அபார்ஷன் செய்யும் போது நழுவப் பார்க்குமாம் .
இதை சிலர் சிசு ஹத்தி என்றும் ஒரு உயிரைக் கொல்ல அதிகாரம் இல்லை என்றும் சொல்கின்றனர்.
ஒரு தாய் தந்தையருக்கு இல்லாத அதிகாரம் எப்படி மற்றவருக்கு கிடைக்கும். நாளைக்கு குழந்தைப் பிறந்தால் வளர்ப்பது இந்தத் தாய் தந்தையே .இவர்களுடைய விருப்பு வெறுப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கணுமே ஒழிய அவன்சொன்னான் இவன்சொன்னான்னு போகமுடியாது.
பிடிக்காம, வேண்டாம ,அந்தக் கொழந்தையை சொமந்து அதனால அந்தக் கொழந்தைப் பொறந்தப்பரம் அதுப் படரக் கஷ்டத்த யாருப் பார்க்கிறது?
ஒரு குடும்பத்தோட பினான்சியல் ஸ்டேடசையும் பார்க்கணுமே?
இதுல சில பேர் பொறக்கப் போற கொழந்தை அங்க ஹீனம், மூளை குன்றிய வளர்ச்சி ,மாற்றுத் திறனாளி இவை எல்லாம் இருக்கிற சந்தர்பம் இருக்கு என்று தெரிஞ்சும் தைரியமாக பெற்றுக்கொள்ளதயார் என்று சொல்லலாம்.
இவர்கள் உயிரோடிருக்கும் வரை, இவர்கள் கைகால்கள் நன்றாக இருக்கும் வரை, பணப் பற்றாக்குறை இல்லாதவரைக்கும் ,இவர்களைசுற்றி இருப்பவர்களும் இவர்களைப் போன்ற மனோதிடம் இருக்கும் வரை இந்தப் பேச்செல்லாம் செல்லுபடியாகும்.
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் வயதான தந்தை இறந்ததும் தாயாரால் நாப்பது வயதான ஆண் பிள்ளையை கவனிக்கமுடியாமல் போயிற்று. ஏன் என்றால் அவரே தன பிள்ளை மருமகள் பேரன் பேத்திகளை சார்ந்து இருக்கக் கூடிய நிலை ,அப்படி இருக்கையில் தன்னால் கவனிக்க முடியவில்லையே என்கிற ஆதங்கத்திலேயே , படுத்த படுக்கை தான். பார்த்தான் மகன் , தாயாரிடம் சொல்லாமல் ஒரு ஆதரவற்ற மன நிலைக் குன்றியவர்களுக்கான இல்லத்தில் பணம் கட்டி சேர்த்துவிட்டான்.
இன்னுமொரு பெண்மணி மனவளர்ச்சி குன்றிய மகன் பிறந்து சில நாட்கள் வரை கணவன் உடன் இருந்தான் , பிறகு மனைவி மகன்களுடன் கூடி வாழ்வதை விட்டு விட்டு தனியாக வாழ்கிறான். ஏன் என்றால் மனைவி மனவளர்ச்சி குன்றிய மகனை அதற்கான இல்லத்தில் சேர்க்க மறுத்ததால்.
இது தேவை தானா?
கூடப் பிறந்த அண்ணன்,அக்கா, தங்கை, தம்பி காலம் முழுக்கக்காப்பாற்றுவார்கள் என்று என்ன நிச்சயம்? நீ பெத்ததற்கு அவர்கள் ஏன் கஷடப் படனும்? உனக்கு நீ பெற்ற குழந்தை, அவர்களும் உன்னைப் போல் இருக்கவேண்டும் என்று நினைக்கவும் கூடாது, எதிர் பார்ப்பதுவும் தப்பு. அவரவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கை, விருப்பு வெறுப்பு என்று இருக்கிறது.
இதை எல்லாம் மனதில் வைத்துப் பார்க்கப் போனால் அவர்களை கருவிலேயே கஷடப் படாமல் இருக்க முடிவு செய்யலாம்.
ஏன் எத்தனையோ பேர் முதலிலேயேத் தெரிந்திருந்தால் கலைத்திருக்கலாமேன்னு கூட நினைத்ததுண்டு.
இதிலும் சிலர் அந்தக் குழந்தைக்கு எவ்ளோவோ கனவுகள் இருக்கும், ஓடி விளையாட ஆசை இருக்கும்னு நினைக்கலாம். சிலக் குழந்தைகள் தாங்களாகவே ஒன்றும் செய்துக்கொள்ள முடியாத நிலையில் இந்த மாதிரி குடும்பத்தில் இருக்கும் போது எததனையோ கணவன் மனைவிகள் நாள் கிழமைகளில் ஒருவரே வீடு விஷேசங்களில் பங்கேற்க நேர்கிறது.
குழந்தைகளை யாருடைய மேர்பார்வைகளும் இல்லாமல் தனியாக விட முடியாத நிலை, கூட அழைத்துக்கொண்டும் போக முடியாத நிலை .இந்த மாதிரிஇருதலைக்கொள்ளிஎறும்பாகவாழ்க்கைவாழவேண்டியிருக்கிறது.எங்குமே ஒரு தாய் , பெற்ற கடமைக்காக போற்றி பேணி வளர்க்க முன்வருவாள். கடவுள் அவளை ஒரு ஆரோக்கியமங்கையாகப் படைத்திருந்தாலே ஒழிய!
இதிலும் ஒரு பெண் குழந்தையாக இருந்து விட்டால் கஷ்டங்கள் கொஞ்சநஞ்சம் இல்லை.இப்ப உலகமிருக்கும்சூழ்நிலையில் ,நன்றாக கைகால்கள் இருந்து, நல்ல படித்த, படிக்காத பெண்மணிகளே வக்கிர புத்திகொண்ட நயவஞ்சகர்களால் பாதிக்கப் படும்போது,இந்தமாதிரிப் பெண்களைக் கடவுள் தான் காப்பாற்றவேண்டும்.சிலர் பெண்களுக்கு மென்சஸ் வரமுடியாமல் இருக்க சிகிச்சை செய்து விடுகிறார்கள், சிலர் கர்பப்பையை எடுத்து விடுகிறார்கள். புத்தி சுவாதீனம் இல்லாதவர்களை என்ன செய்தாலும் துன்பப் படுவது சுற்றி இருக்கும் குடும்பத்தவர்கள் தான்.
சமீபத்தில் ஒரு மனநோய் இல்லத்தில் இருந்த நடுத்தரவயதுப் பெண்மணியை களங்கப் படுத்தி, புதைத்தும் விட்டான் அந்த இல்லத்தின் காவலாளியே, இதற்கு என்ன சொல்வது?பெண்களுக்கு எவ்வளவோ அசௌகரியங்கள் இது அத்தனையும் அந்தக் குடும்பத்தவர்கள் புரிந்து அனுசரித்து செல்லனும். இது எப்போதும் முடியுமா?
என்னுடைய காலத்தில் அதாவது லேட் சிக்டீஸ் எர்லி செவன்டீஸ் அண்ட் லேட் செவெண்டீஸ்ல மூளை வளர்ச்சி குன்றிய பிறப்புகள் குறைவு என்று தான் எனக்கு சொல்லத் தோணுகிறது ,இல்லை என்னுடைய அறியாமையா?பிறக்கும் முன்பே எடுத்துவிட்டார்களோ? இல்லை பிறந்ததும் மாய்த்து விட்டார்களோ?
நம் நாட்டில் வெளிநாடுகள் போல அவ்வளவாக இந்த மாறுபட்டுப் பிறக்கும் குழந்தைகளின் வளர்ச்சிக்காகவும், சவுகரியத்திற்காகவும்,வசதிகள் இல்லாததாலும்,பொது மக்களிடையே ' அவேர்நஸ்' இல்லாததாலும் இவர்களை சமூகம் ஒருக்குறையுடனேப் பார்க்கிறது.
இதில் வேடிக்கை என்ன வென்றால், கர்ப்பமாக இருக்கும் பெண்மணிக்கு குறைப் பிரசவமோ, அல்லது பிரசவக் காலத்தில் ஆபத்து என்று வரும் சமயத்தில் மருத்துவர்கள் 'ஏதாவது ஒருவரைத் தான் காப்பாற்ற முடியும்" என்கிறபோது , உறவினர்கள் உடனே, பெரிய உசிரைக் காப்பாத்திடுங்க ' என்று சொல்லிவிடுகிறார்கள். இது ஏன்? முதலிலேயேக்கருக் கலைப்பிற்கு ஒவ்வாதவர்கள் இப்பொழுது ஒத்துப் போவது ஏன்?
தற்போது விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி இருக்கின்றது , அதனால் மருத்துவத் துறையில் நல்ல கண்டுபிடிப்புகளும் வந்துள்ளன. காற்றுள்ள போதே ஏன் தூற்றிக்கொள்ளக்கூடாது? 'ப்ரிவென்சன் இஸ் பெட்டர் தேன் கூயர் ' (prevention is better than cure )ஒன் மேன்ஸ் பூட் இஸ் அனதர் மேன்ஸ் பாய்சன்'. (one man 's food is another man 's poison )அவரவர்கள் தங்களுக்கு எது நல்லதோ அதைச் செய்வதே நல்லது. ஊரான் பேச்சைக் கேட்காமல் இருந்தாலே சரி.
Shambavi Chandru
ReplyDeleteDate: 2012/7/19
Subject: Re: [karaimodumalaigal] அபார்ஷன்- 'எ
நெசசரி ஈவில்'
To: mathangi
மிகவும் வாஸ்தவமான பேச்சு.உணர்ச்சி பூர்வமாக இல்லாமல் அறிவு பூர்வமான அலசல்.
பல பேர் ஒரு விதமாய் வாதம் செய்கிறார்கள்-நல்ல விதமாய் பிறந்து சில வருடங்கள் கழித்து எதாவது விபத்து நேர்ந்து அதனால் அந்த குழந்தைக்கு கை, கால், புத்தி சுவாதீனம் இல்லாமல் போனால் அப்போ நாம் லட்சம் லட்சம் ஆனாலும் செலவு பண்ணி வைத்யம் பார்க்க மாட்டோமா என்று.விதியை நொந்தாலும் இப்போ நிலைமையை சமாளிக்க முயல்பவர்கள் ஏன் அதே போல் எப்போ எப்படிப்பட்ட குழந்தை பிறந்தாலும் சமாளிக்கக் கூடாது என்று...
இப்படி விதியை துணைக்கு அழைப்பவர்கள் விதிப்படி குழந்தை எப்படியோ பிறந்தாயிற்று, அது தன் விதிப்படி எப்படியோ வளர்ந்து விட்டு போகட்டும் என்று விட்டு விடுவார்களா? அது டாக்டர் ஆக வேண்டும், engineer ஆக வேண்டும்,டான்ஸ் ஆடணும், கிரிக்கெட் ஆடணும் என்று ஓடி ஓடி tuition கிளாஸ் , ஹாபி கிளாஸ் என்று ஏன் அலைகிறார்கள்? உடம்புக்கு சுகம் இல்லை என்றால் தெய்வ சங்கல்பம் என்று விட வேண்டியதுதானே , ஏன் டாக்டரிடம் ஓடுகிறார்கள்? விதியை மதியால் வெல்லலாம் என்று தானே? அதே மதியை ஆரம்பத்திலேயே உபயோகித்தால் என்ன பிழை?
நீங்கள் சொன்னது போல் உயிரிலே சின்ன உயிரென்ன பெரிய உயிரென்ன-அப்பொழுது எந்த நீதி சாஸ்திரம் இது உயிர்கொலை இல்லை என்கின்றது?
அதுவும் இந்தியா போன்ற ஆணாதிக்கம் நிறைந்த நாட்டில் MTP யை legalize செய்தது ஒரு வரப்ரசாதம் பல பெண்களுக்கு-கரு உருவாவதற்கு அன்றி வேறு எந்த ஒரு விஷயத்திற்கும் ஆதாரமாகவோ ஆதரவாகவோ இருக்க ஆண் மகன் முன் வராத குடும்பங்களில் ஒரு பெண், குழந்தையை சுமப்பதற்கும் அதை பெற்றெடுத்து வளர்ப்பதற்கும் படும் இன்னல்கள் பாரத்தால் தெரியாது, அனுபவித்தால் தான் தெரியும்.
One should aim at bringing forth a member of the society, not just a number in the society.
Viji / Shambavi
DeleteYour views are really practical and there is reason in your response. As you rightly said, ours is a male dominated society and it's always the women who have to bear the brunt.Your signing off,
"One should aim at bringing forth a member of the society, not just a number in the society."
really touched my heart. Thanks for your prompt response.
Thanks. The society which cries fowl at MTP- how supportive is it if the family suffers economic, social, medical,educational or occupational hurdles- what is the society's contribution towards providing education to dyslexic or autistic children, towards making buses, trains, buildings accessible to wheelchair ridden citizens, towards accepting and rehabilitating the differently abled- one can go on..It's one thing to mouth 'holier than thou' sermons and it's another to actually step out and offer succor or fight for changes..
ReplyDeleteRupa Dore rupa.dore@gmail.com
ReplyDelete7:05 AM (1 hour ago)
to me
Your last line said it all.
It is a woman's choice , not any one else's . You cannot have "One size fits all. " Every one of the cases is unique and different .
Not decided by any number of laws, in a court of law or individuals or legal acts.
Actually the whole subject is totally redundant.
No one who decides for herself will come and tell YOU about it . She will just go ahead and do it ! You have no clue !
The Govt of India pern mits and promotes MTP ( Medically terminated pregnancy) .