ஆனால் உண்மை என்ன என்று நீயே அறிவாய்! .
மனவருத்தம் ஏன் வருகிறது,எதனால் வருகிறது என்று , பார்த்தால்,அதற்கு காரணம் நம்மிடமே இருக்கும்.
நம்முடைய ஆசா பாசங்களினாலேயே சந்தோசமும் வருத்தமும் வருகிறது.சந்தோசத்தை கொண்டாடுகிற நாம் வருத்தத்தை மட்டும் மனசுக்குள்ளேயே பூட்டி வைக்கப் பார்க்கிறோம்.
சில சமயம் நம்முடைய அதிக எதிர் பார்ப்புகளே கூட நம்முடைய இயலாமைக்கு காரணமாக இருக்கும்.
ஒன்றை நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் அது என்னவென்றால், நாம் இழுத்து பிடித்து வைக்கும் ஒவ்வொன்றுக்கும் , சிலதை விட்டுக் கொடுக்க நேரிடும் . அப்படி கொடுக்கும் போது நமக்குள் இருக்க வேண்டியது புரிந்து கொள்ளக் கூடிய மனோபாவமே தவிர மனதிடம் இல்லை !
தெரிந்தோ , தெரியாமலோ , நாம் எல்லோருமே ஒரு விதத்தில் யாருக்காவது தேவதைப்போல் இருந்திருப்போம்.
எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் தனிமையில் யோசித்தால் ஒரு மூலையில் மன சந்தோசம் நம்முள் இருக்கு ,அந்த சந்தோசத்தை யாராவது வந்து தரனும் என்றுநினைக்கக் கூடாது . எதிர் பார்க்கவும் கூடாது. அதைத் தேடிபோனால் விடை கிடைக்கும்.
அந்த சந்தோசம் என்பதுகெட்டதிலும் நல்லதை நினைக்க சொல்லும்.
அப்பொழுதெல்லாம் நமக்கு கிடைத்த சின்ன சின்ன சந்தோசங்களைக் கொண்டு வாழ்க்கை எனும் புஸ்தகத்தை புரட்டிப் பார்க்கணுமே தவிர,கடைசி பக்கத்தை புரட்டக் கூடாது.
நல்லது கிடைக்க சில சமயம் நல்லதையும் கெட்டதையும் இழக்க நேரிடும் .அப்பொழுதேல்லாம் நமக்கு தேவை நம்முள் ஒரு சக்தி .
நம்முடைய குறைவுகளை நம்முடைய நிறைவுகளாக மாற்றப் பார்க்கணுமே தவிர சும்மா குறை சொல்வதில் ஒருஅர்த்தமும் இல்லை..
Re: பெருஞ்சுமை
ReplyDeletehttp://www.indusladies.com/forums/showthread.php?t=143299#post1913719
Posted by: Sannjay
On: 15th August 2011 01:21 AM
குறை கூறியே நிறைகளை மறைத்துவிடுகிறோம்
************
Re: பெருஞ்சுமை
http://www.indusladies.com/forums/showthread.php?t=143299#post1913751
Posted by: Padhmu
On: 15th August 2011 02:51 AM
சிந்திக்க வேண்டியது. சந்தோஷம்,துக்கம் எல்லாம் நம் கையில் தான் உள்ளது.வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு விட்டால் ஓடிக் கொண்டேயிருக்கும். பாராட்டுக்கள் மாதாங்கி.