Tuesday, August 16, 2011

"கொஞ்ச" நாள் விருந்தாளி


"என்னடி அலமு , இது கூத்து , எப்பப்பாரு அந்த சனியன் பிடிச்ச   அலெக்ஸை மடியிலே  போட்டு ,கட்டிண்டு  கொஞ்சறதும் ,முத்தம்கொடுக்கிறதும்
ம் .......ம்..........ம்   பார்க்க  சகிக்கலை "


"என்னதான்  செல்லம்  கொடுத்தாலும்  அடுத்த  வாரம்  கல்யாணம்  பண்ணிண்டு  போறவ  இப்படியா  எல்லார் முன்னாலேயும்  கொஞ்சுவா?" . 
"எனக்கு  கொஞ்சம்  கூட  பிடிக்கலை , நீயும்  மாப்பிளையும்  சேந்து  இந்த  மஞ்சுவை குட்டிசுவரா  ஆக்கிட்டீங்க !"
   
"ஏம்மா இப்டி  புலம்பறே , இப்ப  என்ன  ஆச்சு?" "மஞ்சு  கல்யாணம் ஆகி சிங்கப்பூர்  போனா இதெல்லாம்  எப்படி  அவாத்துல முடியும் , எதோ  இங்க  இருக்கிற  வரைக்கும்  பகிங்கரமா கொஞ்சரா , போனா போறது  சிறுசுன்னு  விடாம , ஏன் இப்டி பதட்டம்  ஆகிறே?

"என்னவோ போ அலமு நீயாச்சு, உன் பொண்ணாச்சு, சிவா,சிவா ராம, ராமா."

"அம்மாநீ ஒன்னும் கவலைப் படாதே ,எல்லாம் கொஞ்ச நாளிலே சரியாகி விடும், என்ன பண்றது, மஞ்சுவோட மாமியாருக்கும் ,மாமனாருக்கும் நாய்னாலேபிடிக்காது, அதான் அவ இருக்கிற வரைக்கும் கொஞ்சட்டுமேன்னு சும்மா இருக்கோம்.
*                                     *                                                 *                           *

1 comment:

  1. Re: "கொஞ்ச" நாள் விருந்தாளி
    http://www.indusladies.com/forums
    natpudan
    On: 17th August 2011 02:04 PM

    இதென்ன கூத்துன்னு சொல்லியே நல்ல
    நகைச்சுவைக் கூத்தை அரங்கேற்றி விட்டீர்கள்.

    நல்லாருக்கு மாதங்கி.

    ReplyDelete