Saturday, August 13, 2011

இது உன் பெயரில் சத்தியம்!




என்னவளே , ஒன்றிரண்டு கள்ளி செடிகளுக்கு நடுவில் மலரும் 
 ஒரு அழகிய பூ நீ!என்னுடைய  கஷ்டமான மழைக்காலத்தில்,என் வீட்டு மரணம் என்னை அடிமைப்படுத்தும் போதும்,உயிருடன் உறவுகள் மடிந்து போகும் போதும் , நான் ஆடி மாசக் காற்றில் ஆடும் துணி போல ஆடிவிடுகிறேன்.

ஆனால்   உன்னை நினைத்துப் பார்க்கும் போதும் அதுவும்  நீ   அருகில் இருக்கும் போதும், எனக்கு எங்கிருந்து தான் மனத் தெம்பு வருகிறதோ ,
 நான் உன்னிடத்தில் என்னை தரும் போதும், எல்லாத்தையும் மறந்து சுகமாக உறக்கம் என்னை தழுவும்  போதும்தான் நான் நினைப்பேன் .

  உன்னை எக்காரணம் கொண்டும் யாருடனும் ஒப்பிட்டோ, சேர்த்தோ,சம்பந்தப் படுத்தியோ பேசுவதில்லை என்று. நான் உன்னை   இழக்க விரும்பலை,என்ன ஆனாலும் உன்னை நான்கை விட மாட்டேன். இது உன் பெயரில் சத்தியம்! 

என்று  சொல்லி நம் கதாநாயகன் தன்னுடைய பஞ்சுத் தலையணையை எடுத்து முத்தமிட்டான்!

1 comment:

  1. ************
    Re: கரை மேல் தெறித்த அலைத் துளிகள்10
    http://www.indusladies.com/forums/showthread.php?t=143298#post1913591
    Posted by: devapriya
    On: 14th August 2011 09:48 PM

    Romba build up tharum pothe ipdi thaan yetho irukkumnu nenachen :rotfl

    ReplyDelete