Saturday, August 6, 2011

சின்னதுளிகள்




முகம்  பார்க்க  போனேன் , ஆனால் தெரிந்ததோ உன்முகம் ,
பெயர் எடுக்கப் போனேன், வந்ததோ  உன் பெயர், 
உன்னை அள்ளி முத்தமிட காத்திருந்தேன் ஒம்பது மாசம்.
இனிமேலும்  முடியாது கண்ணே.
வந்து விடு என்னிடத்தில் .
உன்னை வாரி அணைக்க கைகள் காத்திருக்கின்றன.
வருவாயோ என்செல்ல மகளே!
*                                       *                                          *                 
இருட்டறையில் தான் எத்தனை சுகம், எத்தனை நிம்மதி!
நான் என் எதற்காக வெளியே வரவேண்டும் தாயே சொல்லு?
நன்றி கெட்ட என் அப்பனையும் அவன் சல்லாபத்தையும் காணவா? 
வேண்டாம் தாயே நீபட்ட கொடுமை போதும், 
நான் சுகமாக இங்கேயே இருக்கிறேன்!
என்னை இங்கே வாழ விடு!
 *                                         *                                           *

கேடு கெட்ட மானிடனே எதற்காக இந்த நில அபகரிப்பு?
உனக்கு தெரியாதோ   எல்லாருக்கும் வேண்டியது ஆறடி நிலம் தான்!


No comments:

Post a Comment