திரௌபதி ஐயோ பாவம் ,ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து கணவன் மார்களை வைத்து எப்படித்தான் சமாளித்தாள் என்று வியக்க வேண்டியதாக இருக்கு!
எந்தக் கணவனுடன் இரவைக் கழிப் பது என்று சீட்டு போட்டுப் பார்த்திருப்பாளோ? இல்லை அகர வரிசைப் படி சென்றிருப்பாளோ?
அவளுக்குப் பிடித்தவன் அர்ஜுனன் ஆச்சே?அவனிடம் நிறைய நாள் இருந்திருப் பாளோ? யாருடைய ஆதிக்கம் அதிகமாக இருந்திருக்கும்?
எப்படி எல்லோருடனும் முகம் சுளிக்காமல் சமரசமாக இருந்திருப்பாள்?
யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்?
பாண்டவர்கள் எங்கெல்லாம் பிக்னிக் போயிருப்பார்கள்? ஷாப்பிங்கிற்கு எங்கே சென்றிருப்பார்கள்?பாஞ்சாலிக்கு புடவை நகையைத்தவிர என்ன வெல்லாம் வாங்கித் தந்திருப்பார்கள்? பாஞ்சாலிக்கு தேர் ஓட்டத் தெரியுமோ?
பஞ்சபாண்டவர்களுக்கு வாக்குப் பட்டு, பாய் போட்டு, பஞ்சணையில் படுத்து முந்தானை விரித்து, கடைசியில் கிடைத்தது என்ன?
கணவன் மார்கள் பகடை சூதாட்டத்தில் தங்களை இழக்க, மனைவியையும் பணயம் வைத்து அவளை மான பங்கம் பண்ணும் அளவுக்கு கொண்டு வந்தது தான்.
அவளும் எல்லோரிடமும் கூவிகெஞ்சியும் எல்லோரும் கையை விரித்தும் தலை குனிந்தும் அவர்களுடைய கையாலாகாத்தனத்தை வெளிப்படுத்தவே, ஒரு விஷயம் நன்றாக தெரிந்து கொண்டாள்.
இந்தக் கையாலாகத பஞ்ச பாண்டவர்களை விட ஆபத் பாந்தவன் ,அனாத ரக்க்ஷகன் கண்ணனையே நம்புவது என்று தான்.
அவனும் சளைத்தவன் இல்லை, சும்மா வந்தானா?
அவள் இரண்டு கைகளையும் மனத்தைக் காக்க மார் மேல் வைத்தது எப்படி போதும்? இன்னும் கொஞ்சம் விளையாடிப் பார்க்கலாமேன்னு வரவே இல்லை!
அவளும் தன்னை மறந்து இரண்டு கைகளையும் விட்டு" நீ தான் '"என்று கைகளை கூப்பி அவனை வேண்டவே அவன் வந்து மானபங்கம் ஆகாமல் இருக்க அவள் வஸ்திரத்தை வளர்த்தான்.
அவர்கள் கையை விரித்ததற்கும் கண்ணன் அவன் சக்தியை காட்டியதற்குமாக சேர்ந்து சபதம் எடுத்தாள்.
விரித்த கூந்தலை முடிவதில்லை என்று. !
அன்று ஆரம்பித்த சகாப்தம் தான்.
இன்னும் சில வருடங்களில் நிறைய மகளிர் மார்கள் பாஞ்சாலி போல் கணவனை பங்கேற்கப் போகிறார்கள். அப்போது எந்த கணவனுக்கும் உரைக்காது,பெண்கள் சிசு ஹத்தியினால் எவ்வளவு கஷ்டம் ,நஷ்டமும் என்று!
இங்கே சீட்டு வேண்டாம், அகரவரிசை வேண்டாம்,கம்ப்யுட்டர் கணக்குப் போட்டு கால நிர்ணய செய்து ஸ்வைப் கார்ட் மூலம் ரூமிற்குள் போக அனுமதிக்கும்!
இந்தக் கால பாஞ்சாலிக்குப் பிடிக்கவில்லை என்றால், ஸ்வைப் கார்டை "டி ஆக்டிவேட் "செஞ்சி விடலாம்.
ஆகா பிற்கால பாஞ்சாலிகளே, உலகம் உங்கள் கையில் வரப் போகிறது , விட்டுக் கொடுக்காதீர்கள் உங்கள் பொன்னான ,பெண் வாரிசுகளை !
உங்களுக்கு நேர்ந்தது யாருக்கும் நேர வேண்டாம், செய்வீர்களா தோழிகளே?
Re: கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம்!
ReplyDeletehttp://www.indusladies.com/forums/showthread.php?t=142575#post1907823
Posted by: natpudan
On: 10th August 2011 11:10 AM
நல்ல உதாரணம் இன்று நடக்கும்
பெண் சிசுக் கொலைகளைச் சாடி...