Thursday, June 23, 2011

பலமான சொல் அடி


நந்தினி,கற்பகம் வெளியே கிளம்பப் பார்த்து குறுக்க வந்ததை பார்த்த கற்பகத்திற்கு,கோபம் பொத்திக்கொண்டு வந்தது.'

ச்சே ,எப்பப்பாரு இது ஒரு தொல்லையாகப் போச்சு '

இதைப் பார்த்துக் கொண்டே இருந்த  மாலாவிற்கு கற்பகத்தின் மேல் வெறுப்ப்பு வந்தது, ரொம்ப நாளாகவே மனதில் இருந்ததை கொட்டியே தீர்ப்பது என்று எழுந்து , 'அம்மா, நீ பண்றது உனக்கே நல்லா இருக்கா?'

'என்னடி, என்னையே குறை சொல்றே, நந்தினியைப் பாரு,எத்தனை தரம் சொல்லி இருக்கேன் குறுக்க நடுக்க போகாதேன்னு 'கேக்கறாளா?'

அம்மா உனக்கு எத்தனை தரம் சொன்னாலும் புரியமாட்டேன்கறது ', 

அண்ணியோட இந்த நிலைக்கு யாரு காரணம், கொஞ்சம் யோசி பார்க்கலாம் . அண்ணனுக்கு  உன்னோட கிட்னியை கொடுக்க நீ மறுத்ததனாலே தானே அண்ணனை புழைக்க வைக்க முடியலை?

 நீ மட்டும் அண்ணனுக்கு கிட்னி கொடுத்திருந்தால் ,அண்ணிக்கு இந்த நிலைமை வந்திருக்குமா சொல்லு?அவங்க விதவையா போனால் அவங்க என்ன பாவம் செஞ்சாங்க?

நீயே அண்ணனுக்கு, நந்தினி அண்ணியைப் பார்த்து கட்டிக் கொடுத்தே,இப்ப அண்ணன் உயிரோடில்லைன்னதும் அவங்களை கரிச்சு கொட்டரையே?

சொல்றேன்னு தப்பாக நினைக்காதே , அப்பா போயி இரண்டு வருஷம் தான் ஆகிறது , அண்ணன் போயி அஞ்சு வருஷம் ஆயாச்சு, இன்னும்  கூட நீ அவங்கள் மேல இவ்வளவு வெறுப்பு வச்சிருக்கிறது நல்லா இல்ல , என்னோட நிலைமையை யோசித்துப் பார்த்தாயா, அண்ணி வீட்டு சீதனதிலேருந்து தானே எனக்கு நிறைய செஞ்சு கட்டி கொடுத்தாய்? அதை மறந்துட்டயா? அண்ணி இல்லைன்னால் உன்னாலே என்ன செஞ்சிருக்க முடியும் ?

நீ உன்னோட சுயநலத்திற்காக அண்ணியை அவங்க பிறந்த வீட்டுக்காரங்க வச்சி வாழ வைக்கிறேன்னு சொன்னப் ப கூட அவங்க போனால் எங்கே நமக்கு சொத்து வராதோன்னு தானே நீயே அவங்க இங்கே இருக்கட்டுன்ம்னு சொன்னே?

நானு ஒரு பொண்ணா  இருந்துண்டு சொல்லக் கூடாது தான், இருந்தாலும் சொல்றேன் நல்லாக் கேட்டுக்கோ , நீயும் ஒரு விதவை தான் , நீயே இப்படி அண்ணியைக் கரிச்சுக் கொட்டினாயானால் வெளி மனுஷங்க சொல்றதை நம்மளாலே தடுக்கமுடியுமா? 

எதோ நம்மளால் ஆன வரைக்கும் அவங்கள் மனது புண் படாமல் , மனசு கோணாமல் நடந்துக்கறது  தான் உனக்கும் ,அவங்களுக்கும். எனக்கும் நல்லது, அவங்க ஒரு வாயில்லாப் பூச்சி , அவங்க நினைச்சால் உன்னை விட்டுட்டு போக முடியும் அவங்களுக்கு, அம்மா ,அப்பா இருக்கிறாங்க , பணம் இருக்கு , வசதி எல்லாம் இருக்கு, இரண்டும் புருஷ பசங்க , ஆனால் உன் நிலைமையை யோசித்து பார்த்தாயா ? 

கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் இனிமே நடந்துக்காதே அவ்வளவு தான் சொல்வேன் !, நீ உன் குணத்தை மாத்திக்கொள்ள பாரு , இல்லையா நானே அண்ணியை அவங்க வீட்டிலே சொல்லி கூட்டிக் கொண்டு போக சொல்லிடுவேன்.

அதே மாதிரி நீ மாறலைன்னால் , நான் இங்கே வரதையே நிறுத்தி விடுவேன் , அண்ணியையும் பசங்களையும் கோவிலிலே வச்சி பார்த்துக்கிறேன் அவ்வளவு தான்.

கற்பகத்திற்கு மாலா சொன்னதைக் கேட்டதுக்குப் பிறகு  உடம்பு ஆட்டம் காணஆரம்பிசசிடுத்து , 'நம்ம நந்தினியை கைக்குள்ளே நசுக்கி வச்சிக்கலாம்னு நினைச்சோமே , இப்ப அதுக்கு வழியே இல்லையே, ஒரு வேளை மாலா சொல்றா மாதிரி நந்தினி அவங்க வீட்டுக்கு போயிட்டால் நம்ம கதி என்ன ஆறது?கற்பகத்தின் மனதில் ஒரு பயம் வந்து மிரட்டிட்டுப் போச்சு .

சரி மாலா சொல்றா மாதிரியே கொஞ்சம் விட்டு தான் பிடிக்கலாமே, ஒரேயடியா , மாற வேண்டாம்,கொஞ்ச நாளைக்கு ஒதுங்கி இருப்பது தான் நல்லது. சரி , செஞ்சு தான் பார்ப்போமே?


மாலாவிற்கு  அம்மா மனதில் என்ன ஓடுகிறதுன்னு நல்லாவே தெரியும் , பார்க்கலாம் , எவ்வளவு தூரத்திற்கு நம்ம சொன்னதுக்கு பலன் இருக்குன்னு !

 ஒரே ஒரு திருப்தி ரொம்ப நாளாகவே மனசிலே இருந்ததை  கொட்டி தீர்த்தாகிவிட்டது ,இனிமே ஆண்டவன் விட்ட வழி! 




பி .கு 
கற்பகம் மாதிரி நிறைய பேர் இந்த உலகில் இருக்க தான் செய்கிறார்கள் , அவர்களுக்கு தாங்கள் செய்யும் தவறுகளோ, நிலைமையோ தனக்காகவே தெரிய வராது, அவர்களுக்கேலாம் ஒரு மாலா போல் ஒருத்தர் வந்து ஒரு பலமான , வார்த்தைகளால் அடி கொடுத்தால் தான் புத்திவரும் !.

2 comments:

  1. Posted by: gsaikripa
    On: 22nd June 2011 11:35 PM

    mathangi madam,
    chinna pennaga irunthallum mala,than ammavukku kodutha advice.. nice advice ..

    nandri..

    ************


    Posted by: prana
    On: 23rd June 2011 02:30 AM

    unmaidhan mathangi madam......silarukku sonnaaldhan puriyum..innum sila perukku evvalavu sonnaalum puriyaadhu...:rant
    ************

    Posted by: swarna1388
    On: 23rd June 2011 03:44 AM

    Nice story.......
    ************
    Re: பலமான சொல் அடி
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138798-2986%3B-2994%3B-2990%3B-3006%3B-2985%3B.html#post1852503
    Posted by: Padhmu
    On: 23rd June 2011 02:46 PM

    still some people are like that. unless they rectify themselves nobody can make them alright. nice stiry.
    ************


    Posted by: sipanneer
    On: 23rd June 2011 03:24 PM

    Hi Mathangi,

    Than enna nilamayil irrukom endru theriyamaleya..adthuvargalai kurai koorubavargalukku ithu oru nalla paadam..
    great Advice..

    ReplyDelete
  2. arumaiyana kadhai...malavin amma pola silar inum irukathan seikirarkal...avargal epadi irukirarkal endru yosikamal aduthavargalai patri kurai sollikondu...



    Uma

    ReplyDelete