Friday, April 29, 2011

எது சிறந்த வழி?

 சகுந்தலாவுக்கு   தெரியாம  போச்சு , இப்டி  ஆகும்னு , என்ன  பண்றது  இப்ப ? சரியான சமயத்திலே  டாக்டர் லலிதா நர்சிங் ஹோமுக்குப்போறதைதவிர வேற வழி இல்லை.டாக்டர் லலிதா பார்த்துட்டு சொன்னாள் , "நீ இப்போ மாசமா இருக்கே! "
'டாக்டர் எனக்கு  என்ன பண்றதுன்னு தெரியலை என் முதல் குழந்தைக்கு பத்துமாசம் தான் ஆகறது ,ஆனா இப்ப நான் பிரக்னன்ட் எனக்கு இந்த குழந்தை வேண்டாம் .ஏதாவது செஞ்சி இந்த கர்பத்தை கலைத்து விடுங்களேன்'' 
''நல்லது மா,உனக்கு  இந்த குழந்தை வேண்டாம்,அவ்வளவுதானே! அதுக்கு ஒரே வழி உன்னோட பத்து மாச குழந்தையை யாருக்காவது தத்து கொடுத்துடு. அப்ப நீ இந்த கர்பத்தை கலைக்க வேண்டாம்!''
'என்ன சொல்றீங்க டாக்டர்', அது எப்படி தத்து கொடுப்பது? நான் இந்த குழந்தை வேண்டாம்னு எப்ப சொன்னேன்? ''
'நீ சொல்லலைமா ஆனா, இதுவும் உன்  குழந்தை தானே அப்டி இருக்கப் போ எப்டி நீ கர்பத்தை கலைக்கச் சொல்றாய்? இல்லேன்னா கையில் இருக்கும் குழந்தையை கொன்று விடு, அப்போ உனக்கு ஒரு ப்ராப்ளமும் இருக்காது''. ''உனக்கு ரெண்டு குழந்தையும் பாத்துக்க முடியாதுன்னு தானே கர்பத்தைக் கலைக்க சொல்றாய்?''  ''எப்டி பார்த்தாலும் ஒரு உயிரை கொள்ளத்தானே போகிறாய்?'
அடப் பாவமே, இது என்னடா கிணறு வெட்ட பூதம் வந்தாமாதிரி ஆச்சே !
சரி நான் இப்ப என்ன தான் பண்றது டாக்டர்?
'ஒன்னும் இல்லமா, பேசாம கர்பத்தை கலைக்காமல் முழு குழந்தையா பெத்து நல்ல அம்மாவா இருக்கப் பாரு.எத்தனையோ பேரு குழந்தைக்காக கோவிலு ,குளம்,ஆஸ்பத்திரி டாக்டருன்னு படி ஏறி இறங்கறா ,அப்டி இருக்கப்போ ,கடவுளாப் பார்த்து கொடுத்த வரப் பிரசாதத்தை வேண்டாம்னு தட்டாதே , போயி நல்ல காய்கறிகளை சாப்பிட்டு உடம்பையும் மனசையும் தேத்திக்கோ!''

2 comments:

  1. Re: எது சிறந்த வழி?
    http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/135432-a.html#post1852541
    Posted by: sipanneer
    On: 23rd June 2011 03:28 PM

    Hi Mathangi,

    Nice story!!!

    ReplyDelete
  2. Hi,

    A good message through yr story. All yr posts useful and thought provoking.

    Regards,
    sublakshmi

    ------------------------
    hi mathangi,
    good story with good moral.

    Yours,
    Usha.

    ReplyDelete