What an IDEA Sirji?
ராமநாதன் பங்கஜம் தம்பதிகளுக்கு மூன்று பெண்கள் இரண்டு பிள்ளைகள் . அனைவருமே சென்னையிலேயே வசிப்பவர்கள் . ராமநாதனுக்கு தொண்ணுறு வயதாகியும் கண் ஒன்று மட்டுமே சரியாக தெரியாது மற்ற எல்லாம் நன்றாகவே வேலை செய்வதால் அவருடைய பெண், பிள்ளைகளுக்கு அவரால் ஒரு உபத்ரவமும் கிடையாது.
பெரிய பையன் ரகுவிற்கே எழுபது வயதாகிறது ,ஆனால் அவன் அப்பாவைபோல் இல்லை, பி.பி , சுகர் இருக்கு,அவனால் வாயையும் வயிற்றையும் கட்ட முடியாது.
முதல் பெண் வசுந்தராவிற்கு அறுபத்தி எட்டாகிறது அவள் அம்மாவைபோலே நிறம் ,உடல் வாகு அம்மாவின் குரல் கொண்டவள் .
ராமநாதன் தம்பதியினர் தங்களுடைய கடைசி பையன் பிரசன்னாவின் வீட்டில் இருக்கும் போது , வசுந்தரா கால் தடுக்கி டைனிங் சேரின் மீது விழுந்து மார்பில் நல்ல அடி பட்டதால் உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்து விட்டார்கள் .
கண்டிஷன் டேஞ்சர் தான் . ஒன்னும் சொல்வதற்கு இல்லை , மார்பில் அடி பட்டதால் லங்க்ஸ் ரொம்பவே மோசமாக போய் விட்டது .
ராமநாதனுக்கு கண் பார்க்க முடியாவிட்டாலும் , காது கேட்பதால் பங்கஜமுக்கு ஏதோ ஆகி விட்டது என்று தெரிந்தது .தினமும் பசங்களை போட்டு நொச்சு நொச்சுநு கேள்வி மேலே கேள்வி கேட்டு பதில் சரியாக வராததால் சிவனேன்னு நடமாடிண்டு இருக்கார்..போயி பார்க்கவும் முடியாது .
விளையாட்டுபோல் நான்கு நாள் ஆகியும் டாக்டர்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை என்று சொல்லியாச்சு.
அவருடைய பசங்களே டாக்டர் சொன்னபடி கொண்டிருக்கிறார்கள் என்ன முடிவெடுக்கலாம் என்று கலந்து பேசிக். கொண்டிருக்கிறார்கள் .பங்கஜமும் லைப் சப்போர்ட்டில் தான் இருக்கிறாள்
இதன் நடுவில் ராமநாதனுக்கு பொறுக்க முடியாமல் பசங்களிடம் கேட்டு தெரிந்ததில் , பங்கஜம் ரொம்ப நாள் இருக்க மாட்டாள் என்று மட்டும் நன்றாகவே தெரிந்தது . அதனால் அவர் ரொம்பவே டவுன் .
பசங்கள் எல்லாம் ஒன்று கூடி ,வசுந்தரா குரல் அம்மாவின் குரலைப்போல் இருப்பதால் , அம்மா பேசுவது போல் பேசி தன்னுடைய கடைசி நாள் வந்துவிட்டதால் , எதுவும் எதிர்பார்க்க வேண்டாம் என்று சொல்லி விடசெய்யலாம் என்று முடிவு எடுத்தார்கள் .
அதே போல் வசுந்தரா அப்பாவுடன் அம்மா பேசுவதுபோல் பேசி ரொம்ப எதிர்பார்க்க வேண்டாம் என்று அழுதுண்டே சொல்லி முடித்தாள் .
அதிலிருந்து ராமநாதன் செல் போனை யாருக்கும் கொடுக்காமல் தானே பயமுடன் வைத்திருந்தார் . எங்கே , பங்கஜம் விட்டு போய்விடுவாளோ என்று வேறு வருத்தம் .
சொன்ன மாதிரி இரண்டே நாளில் , பங்கஜம் மூச்சை விட்டாள் . எப்படி ராமநாதனுக்கு சொல்வது என்று யோசித்து , மீண்டும் வசுந்தராவே செல் போனில் பேசிக்கொண்டிருக்கும் போது பங்கஜம் போய் விடுகிற மாதிரி பேசிண்டே இருக்கும் போது ராமநாதன் கையிலிருந்து செல் போன் கீழே விழுந்து விடுகிறது .
வாண்டு வெங்கட் ,'தாத்தா ,தாத்தா' னு கத்திண்டே அவரை எழுப்ப பார்க்கிறான் , அவர் எழுந்தா தானே , அவர் தான் அப்பா வே மூச்சை விட்டு விட்டாரே .!.
3 comments: