Thursday, April 21, 2011

36 Mami

வாசவிக்கு கார்த்தாலை வேளையில் தலை பிச்சுண்டு போற மாதிரி இருக்கும். இன்னிக்குன்னு பார்த்து இப்படியாகி போச்சு .சரி பக்கதாத்தில் போயி கேட்கலாம்ன்னு படி இறங்கி போனாள்.

அங்கே மாமா சிவாசைலம் ரொம்ப மும்முரமாக shave பண்ணிண்டு இருந்தவர் வாசவி காலிங் பெல்லை அமுக்கினதும் வந்து கதவை திறந்தார்.

'ருக்கு , 36 மாமி வந்துருக்கா'.

'அப்படியா இதோ வரேன்'

'உள்ளே வாங்கோ, உங்களை பார்த்திருக்கேன் ,பேசினதில்லை'

sorry.உங்களை காலங்கார்த்தாலே டிஸ்டர்ப் செய்யரதற்கு, நான் கொஞ்சம் உஷாரா இருந்திருக்கணும் , என்ன பண்றது 25 நாளிலேயே ஆயிடுத்து. பையனுக்கு இன்னிக்கு GRE எக்ஸாம் இருக்கு , இவருக்கு ஆடிட் நடந்துண்டு இருக்கு, எதிர்பாராம இப்படி ஆயிடும் ன்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கலை'

'ருக்கு சித்த இங்கே கொஞ்சம் வரயா.'

'உங்காத்து மாமாக்கு லேட் ஆயிடுத்து',ஒன்னும் இல்லை கொஞ்சம் இன்டேன் காஸ் சிலின்டர் கொடுத்தா நாளைக்கு ரிடன் பண்ணிடறேன்.திடு திப்புன்னு 25 நாளிலேயே ஆயிடுத்து.

அப்பா, ருக்குக்கு கொஞ்சம் ரிலீப் ஆச்சு , என்னமோ, எதோ இந்த காலத்திலும் இப்படியானு நினைச்சுண்டு இருந்தவளுக்கு நல்ல வெயில் காலத்திலே கொழாயிலே தண்ணி காத்து வந்தா மாதிரி இருந்தது .
சிவ சைலம் இப்படியும் சில கேசுங்க இருக்கத்தான் செய்யறதுன்னு சிலிண்டரை கொண்டு வந்து வெளியிலே வச்சார் .

' ரொம்ப தேங்க்ஸ் மாமா பாவம் உங்களுக்குத்தான் சிரமம் ,நாளைக்கே திருப்பி தந்து விடுகிறேன்'

நல்லதா போச்சு ,ப்ளாக்குக்கு ஒரு மேட்டர் கிடச்சுது மனசுக்குள் சிரிச்சுண்டார் .


1 comment:

  1. kandippa block ku semma comedy news thaan anda maami pechu naale.....hahhahaa
    aana 36 mami vandrukka nu solrele,apdinna enna???...
    nice post
    swaran
    ------------------
    அப்படீன்னா 36 வது நம்பர் வீட்டு மாமி அதோட ஒரு attraksanukku figure size
    mathangikkumar

    ReplyDelete