Tuesday, March 8, 2011

இது எப்படி இருக்கு ?

Monday, November 30, 2009


இது எப்படி இருக்கு ?

ஒரு சில வார்த்தைகள் அடிக்கடி தமிழில் நிறய தடவை சொல்கிறார்கள் , அவை என்ன வென்று பார்ப்போம் !

முதலில் 'ஆமா '' இந்த வார்த்தை எப்ப பாரு ஒரு வாக்கியம் ஆரம்பிக்கும் முன்னாடி சொல்வது,பிறகு வருவது ''தெரியாமத்தான் கேட்கிறேன் . இதற்கு என்ன அர்த்தம் ? தெரிஞ்சா கேட்போமா? தெரியாமல் தானே கேட்போம்?

இரண்டாவதாக ,''என் தலையே போனாலும் ''தலையே போன பிறகு என்ன பண்ண முடியும்?

மூன்றாவதாக , ''என் மூச்சுஇருக்கும் வரை '' மூச்சு இருக்கும் வரை தான் நீ சொல்வது நடக்கும் ,பிறகு என்ன நடந்தால் தான் என்ன .

நான்காவதாக , ''நாக்கை பிடுங்கிண்டு சாகலாம்'' , அப்படி சாகரதாக இருந்தால் எல்லோரும் நாக்கை பிடுங்கிண்டே சாகலாமே!

[ நானும் ஒருமுறை எப்படி தான் இருக்கும் என்று ட்ரை பண்ணேன் ,ஐயோ ஜன்மத்துக்கும் இனிமே ட்ரை பண்ண மாட்டேன் , சாப்பிடவும் முடியாம,பேசவும் முடியாம ரொம்பவே தின்டடிபுட்டேன்].
'நான் உன்னை தொட்டு தாலி கட்டின புருஷன் ' ஏன் சார் ,தொடாம தாலி எப்படி சார் கட்ட முடியும்?
''கோபம் வந்தால் எனக்கே நான் என்ன பண்ணுவேன் என்று தெரியாது'' உனக்கே நீ என்ன பண்ணுவேன்னு தெரியாத போது, மத்தவனுக்கு என்ன சார்போச்சு?

அதே போல சில சமயம் ''நான் செத்த பிறகு தான் இந்த கல்யாணமே நடக்கும்''
நீ செத்த பிறகு கல்யாணம் நடந்தால் என்ன, நடகாட்ட என்ன?

'என் பிணத்தின் மீது தான் இந்த கல்யாணம் நடக்கும்' . நீ பொணமா போன பிறகு யார் எப்டி போனா உனக்கு என்ன?


2 comments:

No comments:

Post a Comment