ராகவன் எப்பொழுதுமே மனைவியை பெயர் சொல்லி கூப்பிட்டதில்லை ,அவனுடைய அப்பா அவனிடம் சொன்னதெல்லாம் இதுதான் , 'நீ அவளை பெயர் சொல்லிக் கூப்பிட்டயானால் அவளுக்கு நீ தாசனாகப் போயி விடுவாய்'. இது ராகவன் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.
என்றும் அவன் மனைவி சுபத்ரா அவனை பொறுத்த வரை , 'ஏய்' , 'உன்னைத்தான்' , 'டி' 'இவளே' இது தான் அவளுடைய் ஐடென்டிடி . அவன் அப்பா போயி முப்பது வருடம் ஆனாலும் பொண்டாட்டியை பேர் சொல்லாமலே நாப்பது வருஷம் அவளுடன் குப்பை கொட்டி விட்டான்.
திடீரென்று நேத்திக்கு அவள் மயக்கம் போட்டு விழுந்து விட ,ஹாஸ்பிடலில் அட்மிட் செய்தான். ஹய் பி பி என்றதால் மருத்துவர் கண் காணிப்பில் இருக்கிறாள் .
உதவிக்கு யாரும் இல்லாததால் இவனே அவளை பார்த்துக் கொண்டிருக்கிறான் .
சுபத்ராவிற்கு எப்பொழுதுமே நிறயகுறை , கணவன் தன்னை பெயர் சொல்லி கூப்பிடுவதில்லை என்று. மனதில் அந்த குறையுடனே இத்தனை காலமும் வாழ்ந்து விட்டாள்.
சொல்லாமல் கொள்ளாமல் அவள் இந்த ஊசலாடிகொண்டிருந்த ஆசை நிறை வேறாமலே இந்த உலகத்தை விட்டும் ,ஆணவமும். கர்வமும் நிறைந்த ராகவனை விட்டும் 'போயே போயி' விட்டாள்.
ராகவன், எங்கே, அவள் தன்னை தனியாக பசங்களுடன் மாரடிக்க விட்டு விடுவாளோ என்ற பயத்தில், அவனுடைய கொள்கையிலிருந்து தன்னை அறியாமலே , 'சுபத்ரா','சுபத்ரா','சுபத்ரா' 'சுபத்ரா''', 'சுபத்ரா' என்று கத்தி அவளை எப்பாடு பட்டாவது எழுப்ப பாடு பட்டுக்கொண்டிருக்கிறான் , ,,,,,,
நீங்கள் எல்லோரும் போயி அவனுக்கு சொல்லுங்களேன் , சுபத்ரா உயிரோடிருந்த வரை அவளை மதித்து ஒரு தரம் கூட பெயர் சொல்லாதவன் இப்போ எத்தனை தரம் ஸ்மரணை பண்ணாலும் அவள் வரப் போவதில்லை என்று.
ஒரு தரம் போன உயிரும் , நேரமும், திரும்ப கிடைக்காது !.
************
ReplyDeleteRe: மனதில் விழுந்த கீறல் !
http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138834-a.html#post1851643
Posted by: SUBHAARCHIE
On: 23rd June 2011 03:58 AM
மாதங்கிமா...
நல்லா சொல்லுங்க...அப்படியாவது இந்த மாதிரி ஜென்மங்கள் திருந்தட்டும்...
************
Re: மனதில் விழுந்த கீறல் !
http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138834-a.html#post1852494
Posted by: Padhmu
On: 23rd June 2011 02:38 PM
touching story mathangi.
************
Re: மனதில் விழுந்த கீறல் !
http://www.indusladies.com/forums/stories-in-regional-languages/138834-a.html#post1852514
Posted by: sipanneer
On: 23rd June 2011 02:54 PM
nalla sonnenga Mathangi...
kan ketta piragu surya namaskaram panni yenna seiya!!!!
uma
ReplyDeleteomsrisai
nice story...now how much ever time he calls her name she can't comeback...
Re: மனதில் விழுந்த கீறல் !
ReplyDeletehttp://www.indusladies.com/forums/showthread.php?t=138834#post2064191
Posted by: Viswamitra
On: 1st January 2012 12:00 AM
What a great lesson. That is why it is better to shower our love when someone is alive and instead of preparing Athirasam and Vadai after somebody dies, it is better to give them everything they like when they are alive and happy. In a family that I know, the mother lived Mango fruits so much but no one got her until she died at the age of 48. She had 8 children. After her death, all the children assemble each year to perform anniversary for her death and the house is filled with mango in the name of the mother and everyone eat it remembering the mom.
Viswa