கண்ணு கிடையாது என்று முன்னோர்கள் சொல்லியிருக்கார்கள் , ஆனால் நான் சொல்வேன் காதலில் விழுந்தவர்களுக்கு , மற்ற எதை பத்தியுமே சிந்திக்கத் தோணாது.
என்னுடைய சுற்று வட்டாரத்தில் இருந்து வந்த அனுபவத்தைப் பத்தி எழுதுகிறேன்.
கூட்டு குடும்பத்தில் வளர்ந்ததாலேயோ என்னவோ காதலை பத்தி எனக்கு ஒண்ணும்தெரியாது.
ஸ்கூலில் படிக்கும் போது அதாவது [பத்து , பதினொன்னு ] திருநெல்வேலி சாரா டக்கர் பள்ளி கூடத்தில் சில கிளாஸ் மேட்ஸ் எப்பப் பாரு பொண்ணுங்க பேரை வச்சு பேசுவா , அப்ப எல்லாம் அவா ' பாய் பிரெண்ட்ஸ்' பத்தி தான் பேசறா என்று தெரியாது , பின்னாடி கேட்ட பிறகு சொன்னா 'ஆம்பிளை பேரை சொன்னா எல்லாருக்கும் தெரிந்திடும்' னு.
இப்போவெல்லாம் காதல் இல்லாம, ஒரு சினிமா ,டிராமா,வாழ்க்கை இல்லை , எழுந்தால் உட்கார்ந்தால் காதல் தான் .
கண்ணில்லாத காதலுக்கு பலியாவது நிறைய பேர் ,அவசர காதல், கல்யாணம், நிமிஷ டிவர்ஸ்.ஏன் என்றால் இருவருமே பணபலம் வாய்ந்தவர்கள் ,சுதந்திர பறவைகள் .
கல்யாணம் எப்பவேண்டுமானாலும் செஞ்சிக்கலாம் , ஆனால் வாழ்க்கை ஒரு முறை தான் வாழலாம்!
நானே என் கல்லூரி ஸ்நேகிதிகளுக்காக வக்காலத்து வாங்கி இருக்கேன் ,தூது போயிருக்கேன், ஆனால் நான் நினைத்து கூட பார்க்கவில்லை என் இரண்டு வாரிசுகளும் காதல் திருமணம் செய்து கொள்ளுவார்கள் என்று!
ஒரு விதத்தில் அவர்களின் தைரியத்திற்கு நின்று ஒரு சல்யுட் அடிக்கிறேன், முழு மனதாக தங்கள் பார்ட்நர்ஸ களை தேர்ந்தெடுத்து அவர்களுடன் தான் வாழ்க்கை என்று முடிவு செய்ததோடல்லாமல் ,அவர்களையே கரம் பிடித்து வாழ்வதற்கு.
நாங்களே பார்த்து இருந்தால் கூட இவ்வளவு நல்ல வரன் வந்து இருக்குமா என்பது சந்தேஹம் தான்!
ஒருத்தர் மனதை ஒருத்தர் புரிந்து கொண்டு விட்டு கொடுக்காமல்வாழ் நாள் பூராக சந்தோஷமாக இருக்க எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.
Re: காதல் என்ன !
ReplyDeletehttp://www.indusladies.com/forums/posts-in-regional-languages/135433-a.html#post1816363
Posted by: yams
On: 27th May 2011 05:46 AM
ஆரம்பத்தில் காதல் தவறென்பதை போல் சொல்லினாலும் இறுதியில் காதலுக்கு ஒரு ஜே போட்டது போல் இருந்தது!
உண்மை தான் எதிலுமே இரண்டு பக்கங்கள் உண்டு! காதலிலும் அப்படியே!
நல்ல காதல் கள்ள காதல் என்றில்லை பக்குவ பட்ட காதல் பக்குபடாத காதல் என்று தான் உண்டு நம் பிள்ளைகளுக்கு முன்னது நேர்ந்தால் சொல்லி புரியவைக்க வேண்டும் பின்னது நேர்ந்தால் வாழ வைக்க வேண்டும் இதுவே ஒரு நல்ல பெற்றோருக்கான செயல்!
தங்கள் இரண்டு குழந்தைகளுக்கும் காதல் திருமணம் செய்து வைத்த தங்களுக்கும் ஒரு பெரிய ஜே!
:thumbsup