Sunday, February 6, 2011

உன் எதிரி என் எதிரி


’அந்த ரெட்டை மண்டையன் இப்பல்லாம் ரொம்பவே ஆடறான் . அவனுக்கு இருக்கு பாரு ’’
நீ யாரை சொல்றே ?


அதான் தினமும் நம்ம எஜமானன் வீட்டுக்கு வாக்கிங் போறதுக்கு முன்னாடி வந்து டீ குடிச்சுட்டு போவானே அவனைத்தான் ’

‘நானு அந்த போண்டா வாயனாக்கும் நினைச்சேன் ’

ஆமா , ஆமா ரெண்டு பேருக்கும் இருக்கு நன்னா ஒருநாளு .’

‘’ என்ன எப்பபாத்தாலும் எட்டி உதைசிண்டே இருப்பான் .நான் தப்பி தவறி அவன் மேலே பட்டுட்டா அவ்ளோ தான் .’’

அதுவாவது பரவாயில்லே , இந்த ரெட்டை மண்டையன் இருக்கானே அவன் என்னை மதிக்கறதே இல்லை , என்னை பார்த்தாலே ‘ஷ்ஷ்ஷ்ஷ் ’ நு சத்தம் போடுவான் .

‘ரெண்டு பேருமே நன்னா கொட்டிண்டு போகற தோட சரி , நம்ம எஜமானும் போனால் போறதுன்னு டீ , பிஸ்கட் கொடுத்தா , இவங்கள் ரெண்டு பேரோட ஆட்டம் நாளுக்கு நாள் அதிகமா போயிண்டே இருக்கு ’

இதுக்கெல்லாம் ஒரே வழி நம்ம ரெண்டு பெயரும் எஜமானர் இல்லாத சமயமா பாத்து , ஓட , ஓட விரட்டி அப்படியே ஒரேடியா காலை பிடிச்சு ஒரு கடி கடி கடிச்சு விட்டுடனும் ‘

‘ ஆமா , அப்பதான் இவனுங்களுக்கு புத்தி வரும் ’.

என்ன வாசகர்களே புரிஞ்சுதா ?

இது ஒண்ணும் இல்லை , ரெண்டு நாய்கள் தங்களுக்குள் பேசிக்கற டயலாக் தான் .

1 comment:

  1. devapriya

    சில மனிதர்கள் பேசுவதைக் கேட்கையில் நாய்களே பரவாயில்லையோ என்று தோன்றுகிறது...அருமை...
    ----------------------------
    good imagination. nice one.

    Usha.

    ReplyDelete