Friday, December 18, 2020

​மாசி மகத்தன்று செய்ய வேண்டியவை:


மாசி மகத்தில் புண்ணிய தீர்தங்களைத் தரிசிப்பதும் தொடுவதும் பருகுவதும் அதில் நீராடுவதும் புண்ணியத்தைத் தரும்.பாவங்கள் தொலையும்.இத்தினத்தில் தீர்த்தக் கரைகளில் தர்ப்பணம் ,பிதுர்கடன் ஆகியவை செய்தால் ,அவர்கள் பாவங்கள் நீங்கி நற்கதி பெறுவர் என்பது நம்பிக்கை.

இந்த மாசி மக நட்சத்திரத்தன்று புனித நீர்நிலையில் நீராடினால் கிடைக்கும் பலன்கள் ஏராளம்.தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் நீங்கும்.உயர்ந்தவன் -தாழ்ந்தவன்,ஏழை -பணக்காரன் என்ற பாகுபாடின்றி அனைவரும் நீராடலாம் .
*பக்தியில் நனைய 9442705560*
திருமணமானவர்கள் தங்கள் ,மனைவியுடன் நீராட வேண்டும் என்று சாஸ்த்திரம் கூறுகிறது.

அன்றிரவு பௌர்ணமி வேளையில் விழித்திருந்து அம்மன் சன்னதிகளில் நடக்கும்,பூஜைகள் அபிஷேக ஆராதனைகளை தரிசிப்பது மிக்க நன்மை தரும்.

சதுரகி,திருவண்ணாமலை ,திருநீர்மலை உள்ளிட்ட மலை சேஷ்த்திரங்களில் கிரிவலம் செய்வது சாலச் சிறந்தது.


----மாசி மகத்தின் சிறப்புகள் :*


1.மகாவிஷ்ணுவாக  அவதாரம் எடுத்தது மாசி மகத் திருநாளில் தான்.

2.மாசி மதித்து சங்கடகர சதுர்த்தி மிக விசேஷம் அந்நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.

3.மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.

4.சிவபெருமான்  திரு விளையாடல்கள் பல புரிந்தது மாசி மாதத்தில் தான்.

5.மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகக் கருதப் படுகிறது.

6.குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.

7.அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.

8.மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று  தான் முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவா பெருமானுக்கு உபதேசம் செய்தார்.

9.பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.

10.உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசி மக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.

11.அகத்தியர்  தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசி மாதத்தில் தான்.

12.காரடையான் நோன்பு சாவித்திரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள்.மாசி மகத்தன்று காமதகன் விழா நடைபெறுகிறது.

13.மாசி மாதத்தில் வீடு குடிபோனால் வடைகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள்.எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகபிரவேசம் நடத்தலாம்.

14.இம் மாதத்தை மாங்கலய மாதம் என்றும் கூறுவார்.

15.மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வார் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி .இம்மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.

16.மாசி மக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம்.அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.

17.மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்பத் திருவிழா நடத்துவர்.இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.

18.மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தப் பின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால் ,வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.

19.மாசி மக நன்னாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு ,இன்பமும் வெற்றியும் தேடி  வரும்.

20.மாசி சுக்ல பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவியை மனமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால் ,கல்வியில் சிறந்து விளங்கலாம்.

No comments:

Post a Comment