பிரண்டை (Cissus quadrangularis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும்.
இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும். நீர்ப்பற்றான இதன் தண்டு (கொடி) நான்கு பக்க விளிம்பு கொண்டது. இதனை உணவில் சேர்த்துவர மூலநோய், மலச்சிக்கல், வயிற்றெரிவு, குடற்புண் என்பன நீங்கும். செரியாமை, சுவையின்மை நீங்கிப் பசியுண்டாகும். வஜ்ஜிரவல்லிச் சூரணம் செய்யப் பயன்படுகிறது.
முறிந்த எலும்பு விரைவில் சேர்வதற்குப் பிரண்டையை இடித்துப் பிழிந்தசாற்றுடன் புளியையும் உப்பையும் கூட்டிக் காய்ச்சி, குழம்பு பதத்தில் இறக்கிப் பற்றிட்டு வந்தால் சுளுக்கு, கீழே விழுந்து அடிபடுதல், சதை பிரளுதல், வீக்கங்கள் குணமடைந்து நல்ல பலன் கிடைக்கும். ஆஸ்துமா நோய்க்குப் பிரண்டை சிறந்த நிவாரணி.
No comments:
Post a Comment