Wednesday, March 27, 2013

மஹா பெரியவாளின் ஹாஸ்யம்

மஹா பெரியவாளின் ஹாஸ்யம்
ரமணி 16/10/2012

எப்போதும் பூஜா உபன்யாசம் கடும்விரதம் 
என்றில்லை துறவிக்கு.
ஹாஸ்ய உணர்வும் அவர்களுக்கு உண்டு.
ஹாஸ்யம் அடிக்கடி தலைதூக்கும் காஞ்சி முனிவர் பேச்சில்.

மஹாராஷ்ட்ர மாநிலம் சிற்றூர் ஒன்றில்
ஒருமுறை சாலையோரம் பெரியவர் முகாம்.
நான்குபேர் யானைமீது அமர்ந்து சாலைவழிப்
போவதைப் பார்த்தார் பெரியவர்.
அவர்களை உடனே ஆளனுப்பிக் கூப்பிட்டு
விசாரித்தார்: யானைமேல் ஏறி எங்குப் போகிறீர்கள்?

"ஸ்வாமீ! நாங்கள் ஒருகாலத்தில் செல்வந்தர்கள்.
எங்கள் தகப்பனார் கடைசிக் காலத்தில்
தன்பொருள் அனைத்தையும் தானம் செய்துவிட்டு
எஞ்சிய இந்த யானை மட்டும்
எங்களுக்குத் தந்து இதன்மூலம் பிழைத்துக்கொள் என்றார்.

அதன்படி நாங்களும் ஊர்*ஊராகச் சென்று
புராணக் கதைகள் சொல்கிறோம்; 
பக்திப் பாடல்கள் பாடுகிறோம்; 
ஏதோ கொஞ்சம்
பொருள் எங்களுக்கும் யானைக்குத் தீனியும் கிடைக்கிறது."

"ஹாஹா!" என்று சிரித்தார் பெரியவர்.
"இங்கேயும் இதுதான் நடைமுறை.
இவர்கள் என்னை யானைபோல் 
ஊர்*ஊராக அழைத்துப்போகும் இடங்களில் 
நானும் உபன்யாசம், பூஜைகள் செய்கிறேன்.

"இவர்களுக்கும் சாப்பாடு பணம்
எனக்கும் பக்தர்கள் கிடைக்கிறது.
நம்ம ரெண்டு பேர்க்கும் ஒரேதொழில்!"

கூடியிருந்த பக்தர்கள் 
பெரியவரின் சிரிப்பில்
ஹாஸ்ய உணர்வும் 
சமபாவ உள்ளமும் 
கண்டு மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர்.

No comments:

Post a Comment