Saturday, August 27, 2016

ஆலய அதிசயங்கள்!!


1. திருவண்ணாமலை சுவாமி எப்போதுமே ராஜகோபுரம் வழியாக வராமல் பக்கத்து வாசல் வழியாகத்தான் வெளியே வருவார்.
2. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் மொத்தம் 14 கோபுரங்கள் உள்ளன. வேறு எந்த கோவிலிலும் இவ்வளவு அதிகமான கோபுரங்கள் இல்லை.
3. கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவிலில் தயாராகும் எந்த நைவேத்தியப் பண்டங்களுக்கும் உப்பு சேர்ப்பதில்லை.
4. ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பெருமாள் கோவில்களில் கொடுப்பதுபோல் தீர்த்தம் கொடுக்கிறார்கள். வேறு எந்த சிவன் கோவிலிலும் இது போன்று தீர்த்தம் கொடுப்பது கிடையாது.
5. மூலவரே வீதிவலம் வருவது, சிதம்பரம் நடராஜர் மட்டுமே.
6. மதுரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தில் மீன்கள் வளராது.
7. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகிலுள்ள கேரளபுரத்தில் சிவபெருமானுக்கு கோயில் உள்ளது. இங்கு அரச மரத்தடியில் நிறம் மாறும் அதிசய விநாயகர் இருக்கிறார். ஆவணி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் வெள்ளை நிறமாகவும், மாசி மாதத்திலிருந்து ஆறு மாதங்கள் கறுப்பாகவும் மாறி விடுகிறார். சந்திர காந்தக் கல்லால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலைக்கு இப்படி ஒரு சக்தி இருக்கிறது.
8. சிதம்பரம் ஆலயத்தில் ஒரே இடத்தில் நின்றபடி, ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளையும், ஸ்ரீ நடராஜரையும் தரிசிக்கலாம்.
9. சைவர்களுக்குரிய திருவாதிரையும், வைணவர்களுக்குரிய வைகுண்ட ஏகாதசியும் ஒரே மாதத்தில் ஒரே திருக்கோயிலில் நடைபெறுவது சிதம்பரத்தில்.
10. எல்லாத் திருத்தலங்களிலும் பெருமாளின் இடது கையில் தான் சங்கு காணப்பெறும், திருக்கோவிலூரில் மட்டும் வலது கையில் சங்கு வைத்துள்ளார்.
11. இமயமலைச் சாரலில் இருக்கும் திருத்தலங்களில் ஒன்று பத்ரிநாத். மே மாதம் முதல் வாரம் நடைதிறப்பார்கள். நவம்பர் மாதம் முதல் வாரத்தில் மூடுவார்கள். நவம்பரில் கோயிலை மூடும் போது ஒரு தீபம் ஏற்றுவார்கள். அந்த தீபம் மீண்டும் கோயில் திறக்கப்படும்வரை அதாவது, ஆறுமாதம் எரிந்துகொண்டே இருக்கும்.
12. காசியில் பல்லிகள் இருந்தாலும் ஒலிப்பதில்லை.
13. காசி நகரைச் சுற்றி 45 கல் எல்லை வரை கருடன் பறப்பதில்லை.
14. குளித்தலை, மணப்பாறை வழியில் இருப்பது ஐவர் மலை என்ற ரத்தினகிரி மலை உள்ளது. இம்மலை மேல் காகங்கள் பறப்பதில்லை.
15. நவக்கிரகப் பிரதிஷ்டை கோவிலில் வடகிழக்குப் பகுதியில்தான் அமைய வேண்டும் என்று சிற்ப சாஸ்திரம் கூறுகிறது.
16. ஆழ்வார்குறிச்சியில் நடராஜர் சிலை ஒரே கல்லினால் ஆனது. தட்டினால் வெண்கல ஓசை வரும்.
17. சமயபுரம் ஸ்ரீமாரியம்மன் உட்கார்ந்த கோலத்தில் மிகப் பெரிய திருமேனி. இவ்வளவு பெரிய ரூபமுள்ள அம்பிகை வேறு எந்த கர்பகிரகத்திலும் இல்லை. இத்திருமேனி சில மூலிகைகளால் ஆக்கப்பட்டது.
18. தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள சுருளிமலையில் குகையில் விபூதி அள்ள அள்ள வந்து கொண்டே இருக்கும். இந்தக் குகைக்குப் பெயர் திருநீர்குகை. திருநீறு தானாகவே விளையும் மற்ற திருத்தலங்கள், கதிர்காமம், மருதமலை, திருநீற்று மலை, கங்கை கரையில் உள்ள திருவருணை.
19. ரத்னகிரி மலையில் உள்ள முருகனுக்கு அபிஷேகம் செய்யும் பால் சிறிது நேரத்தில் தயிராக மாறும் அதிசயம் நடக்கிறது.
20. சென்னிமலை முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை.
21.தேனி மாவட்டம் தெப்பம்பட்டியில் உள்ள வேலப்பர் கோவிலில் உள்ள மூலவர் சுயம்பு மூர்த்தி. இந்தக் கோவில் அருகில் உள்ள மாமரத்தின் அடியில் இருந்து ஊற்று நீர் பொங்கி வந்து கொண்டேயிருக்கிறது.

22. அம்மன் சந்நிதி இல்லாத கோயில் காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்.​

சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்பது ஏன்?

சனி பகவானை நேருக்கு நேர் வணங்க கூடாது என்பது ஏன்?
கோயிலில் ஸ்தாபிக்கப்பட்ட எந்த ஒருதெய்வத்தையும் வணங்கும்போது,
நேருக்கு நேர் நின்று தரிசிக்கக் கூடாது.அந்த தெய்வத்தின் பார்வையை
சக்தியை நம்மால் தாங்கிக்கொள்ளஇயலாது. சன்னிதியின் இருபக்க
வாட்டிலும் நின்று தரிசிக்க வேண்டும்.தெய்வ சக்தியை நேருக்கு நேர்
எதிர் கொள்ளும் சக்தியை உடையநந்தி, கருடாழ்வார், சிம்மம் போன்ற
அந்த தெய்வ வாகனங்கள் மட்டும் நேருக்கு நேர் அமைக்கப்பட்டிருப்பதை
 கோயில்களில் காணலாம்.
நவக்கிரகங்களில் ஒவ்வொருகிரகத்துக்கும் அதன் இருப்பிடம், சேர்க்கை, பார்வை ஆகியவற்றைப்பொறுத்து ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. இதற்குஸ்தான பலம், ஸம்யோக பலம்,த்ருஷ்டி பலம் என்று சொல்வார்கள்.
இயற்கையிலேயே அசுபகிரஹமான சனி கிரஹத்தின் 3, 7, 10ஆம் பார்வை
பொதுவாக அசுப பலனையேஏற்படுத்தும். ஆகவே, சனியின் பார்வை
பொதுவாக அசுபத்தையே ஏற்படுத்தும் என்பதால், கோயில்களிலும்
சனீஸ்வரன் சன்னிதியில் (சனியின்பார்வை நம் மீது விழக்கூடாதுஎன்பதால்) நேருக்கு நேர் நின்று அமர்ந்து சனியை தரிசிப்பதைத் தவிர்க்கிறார்கள். இது ஏற்றுக் கொள்ளக் கூடியதுதான்.
நவக்கிரகங்களை, தன் கட்டுப்பாட்டில்வேலைக்காரர்களாக வைத்து
கொடுமைப்படுத்தி வந்த இலங்கைவேந்தன் இராவணன், சூரியன்,
சந்திரன், செவ்வாய் முதலானஒன்பது கிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் கீழேஅமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுகளில்
படுக்க வைத்து, தான் அரியணையில்ஏறும்போதும் இறங்கும்போதும் அவர்களின் மார்பின் மீது தனது கால்களை வைத்து அவர்களை மிதித்துக் கொண்டே அரியணை ஏறும் வழக்கத்தைக் கொண்டிருந்தான்.
இதற்காக நவக்கிரகங்கள் ஒன்பதும்ஒவ்வொரு படிகளிலும்
ஒவ்வொன்றாக வரிசையாகமேல்நோக்கி படுத்துக்
கொண்டிருக்கும். ஆனால்,நவக்கிரகங்களில் சனி கிரகம் மட்டும்
(தனது பார்வை பட்டால் கெடுதல்விளையும் என்பதால்), மேல் நோக்கிப்
படுக்காமல் கீழ் (தரையை) நோக்கிகுப்புறப்படுத்திருந்தது.
இதை கவனித்த நாரதர்,இராவணனின் கொடுமைக்குமுடிவு கட்ட வேண்டும் என்பதற்காக,இராவணன்சபைக்குவந்து,ராவணன்நவக்கிரஹங்களைகாலால் மிதித்து அரியணை ஏறுவதை கவனித்தார். அப்போது ராவணனிடம்நாரதர், ராவணா! உனதுகட்டளையை அனைவரும் மதித்து, மேல் நோக்கி படிகளில் படித்திருக்கிறார்கள். ஆனால், இந்த சனி கிரகம் மட்டும் உனது கட்டளையை அவமதிக்கும் வகையில்கீழ் (தரை) நோக்கி படுத்திருக்கிறது
பார்த்தாயா! என்று கூற,ராவணனும் சனியை மேல் நோக்கி படுக்கச் சொன்னான்.தனது பார்வையால் கெடுதல விளையும் என்பதை சனி கிரகம் எடுத்துச் சொல்லியும் ராவணன்பிடிவாதமாக இருக்கனே, சனியும்
படிக்கட்டில் மேல் நோக்கியவாறு திரும்பிப் படுத்தது. ராவணன் தனது
காலால் சனியை மார்பில்மிதிக்கும்போது சனி கிரகத்தின் குரூரமான பார்வை, இராவணனின்மீது விழுந்தது.
அது முதல் ராவணனுக்கு அனர்த்தம்ஆரம்பமாயிற்று. நாரதரும் வந்த
வேலை முடிந்ததை எண்ணி மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். புராணத்தில் காணப்படும் இந்த நிகழ்வின் மூலம் சனியின் பார்வை நம் மீது விழாமல் இருப்பது சிறப்பானது என்பது தெரிகிறது.

​ குலதெய்வங்கள் என்றால் என்ன ..?


குலதெய்வங்கள் என்றால் என்ன ..?
அவர்களின் பெருமை என்ன...?
குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...?
நம் குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம்
குலதெய்வம் ஆகும்.
குலதெய்வமே நமக்கு எளிதில் அருளினை தரும்.
மேலும் மற்ற தெய்வ வழிபாடுகளின் பலன்களையும்
பெற்று தரும்.
குலதெய்வம் பெரும்பாலும் சிறு
தெய்வமாகவே காணப்படும். சிறு தெய்வம் என்று
அலட்சியப் படுத்தக்கூடாது.
அதன் சக்தியை அளவிடமுடியாது...
எமன் கூட ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று
தான் உயிரை எடுக்கமுடியும்.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்
தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள்
ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின் குலத்தினை சார்ந்தவர்களை
கண்ணும் கருத்துமாக பேணிக் காக்கும் வல்லமை படைத்தவை.
எனவே தான் அந்த தெய்வங்கள் *குலதெய்வங்கள்*
என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்கள் கர்மவினைகளை நீக்க வல்லவை.
இன்று நம் வாழ்க்கைப்போக்கு, அதிகபட்சம் இரு பாட்டன், பாட்டி
பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா உள்ளது?
நம் முன்னோர்கள்...
அதாவது நம் தந்தை வழி பாட்டன், பாட்டிமார்கள் வணங்கி
வந்த தெய்வம் தான் நம் குல தெய்வமாகும்.
இந்த தந்தை வழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய
ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம்.
அது ஒரு ரிஷியின் வழி வழிப் பாதை...
இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில்
சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய்
நிற்கிறோம்.
இந்த வழி வழி போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாக புண்ணியத்தை
கட்டியிருக்கலாம்...
இன்னொருவர் பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!
நாம் அங்கே போய் நின்று...
அங்கு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த சக்தியை
தொழும் போது, நம் முன்னோர்கள் பித்ருக்களாக இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.
இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்!...
விஞ்ஞான முறையில் யோசித்தால்...
ஒரு குழந்தை ஆணா, பெண்ணா என்பதை முடிவு
செய்வது ஆணே...
ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23
க்ரொமொசோம்கள் உள்ளன என்பதை அறிவோம்.
இது தாய் மூலம் 23, மற்றும் தந்தை மூலம் 23 என்பதையும்
அறிவோம்.
இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத்
தந்தையின் குரோமோ சோமே முடிவு
செய்கிறது.
தாயிடம் xx க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.
தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட க்ரோமோசோம்கள்
உள்ளன.
ஆணின் y யுடன் பெண்ணின் x சேர்ந்தால் ஆண்
குழந்தையும்...
இருவரின் x+x சேர்ந்தால் பெண் குழந்தையும்... பிறக்கின்றது.
என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டு கூறி உள்ளது.
ஆண் குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் ஆணிடம் மட்டும்
தான் உள்ளது. பெண்ணிற்கு, y க்ரோமோசோம்கள் தந்தை வழி
வருவதில்லை.
ஆனால், அதே ஆண் குழந்தைக்கு தந்தையிடம் இருந்து y குரோமோசோம்கள் வருகின்றன. அதனால் அவன் மூலம் வம்சம்
மீண்டும் வழி வழியாக வளர்கிறது...
வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க வேண்டும்,
முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன்,
கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன்
எனத்தொடர்ந்து...
இது ஒவ்வொருவரிடமும் விதைக்கப்பட்டு...
தொடர்ந்து காப்பாற்றப்பட்டு வருகின்றது.
இதன் முக்கியத்துவம் குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளை வாரிசுகளாக்கினார்கள்...
பெண் குழந்தைகளை
குல விளக்காக காத்தனர்...
பொதுவாக, 13 தலைமுறைக்கு மேல் ஆண் வாரிசு ஏற்பட
வாய்ப்பு இல்லை...
ஏனெனில், ஆணின் y க்ரோமோசோம்கள் ரொம்பவே
பலவீனமான ஒன்று.
மேலும், தொடர்ந்து காலம் காலமாக இந்த y
க்ரோமோசோம்கள் அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்கு சென்று
கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக்
கொண்டிருக்கிறதாம்.
எனவே, 13 தலைமுறைக்கு மேல் அது வலுவிழந்து பயனற்று போய்விடும்...
அதனால் ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள்
மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும், பரம்பரை நோய்கள்
தொடர கூடாது என்பதாலுமே சொந்த ரத்த
உறவுகளுக்கிடையே திருமணம் தவிர்க்கப்படுகிறது...
பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல
தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன்
படைத்திருக்கிறான்.
பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்...
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்...
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின் குலதெய்வத்தை
வணங்குபவர்கள் திருமணம் முடிந்தவுடன் கணவனின் வீட்டில்
உள்ள குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.
பெண்கள் திருமணமாகி விட்டால் பிறந்த வீட்டின்
குலதெய்வத்தை வணங்குவது கிடையாது...
அப்படி இல்லாமல், பிறந்த வீட்டின் குலதெய்வத்தை
வழிபடுவது, அவர்களை புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும்
இல்லாமல் வாழ வழிவகுக்கும்.
இதுவரை யாரும் பிறந்த வீட்டின் குலதெய்வத்திற்கு
வழிபாடு செய்யாமல் இருந்தால், பிறந்த வீட்டின்
குலதெய்வத்திற்கு திருவிழாகாலங்களில் வழிப்பாட்டை
மேற்கொள்ளுங்கள்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து, அருகுபோல வேரூன்ற
வேண்டுமனால் குலதெய்வ வழிபாடு மிக, மிக முக்கியம்...
குலதெய்வதோஷம் இருந்தால், மற்ற தெய்வங்களின்
அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம் இல்லை
என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த ஹோமம்,
யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன்
தருமா என்பது சந்தேகம்தான்.
எனவே உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு அடிக்கடி
(குறைந்தது வருடம் ஒரு முறையாவது) செல்லுங்கள்.
அபிஷேக ஆராதனைகள் செய்யுங்கள்.
அக்கோவிலுக்கு உதவுங்கள்.
வாழ்க வளமுடன்...
வளா்க நலமுடன்
ஓம் சிவாய நம...

அது வேணும் இது வேணும் ......... !! யாரிடம் யார் கேட்பது. ....

​அது வேணும் இது வேணும் ......... !! யாரிடம் யார் கேட்பது. ..........

ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி ஒரு குரு பெயர்ச்சி அன்னிக்கு என்  மாமாவிடம் பேசிக்கொண்டு இருந்தேன்.

அவன் ஒரு பெரியவா பக்தன் அவரிடம் உனக்கு என்ன வேணுமோ கேளு என்றாராம். இவர் ஒண்ணுமே கேட்கலை.

ஏன் மாமா என்றேன்.

டேய் ஒருத்தர் நிறைய தங்க காசு கொடுக்க தயாரா இருக்கறப்ப கொஞ்சமே கொஞ்சம் பித்தளை காசு கொடுன்னு கேட்கறாப்பல ஆயிடும். இவாள மாதிரி ஞானிகளுக்கு நமக்கு என்ன வேணும்ன்னு தெரியும் நாம எதுக்கு கேட்க்கணும் என்றார்.

ஒரு சில வருஷங்களாக எனக்கு பிரார்த்தனை செய்யவே வராது. என்னத்தான் பூஜை செய்ய உக்காரும்போது இதை பிரார்த்தனை செஞ்சுக்கணும் அதை செஞ்சுக்கணும்ன்னு நினைச்சுண்டு உக்காந்தாலும் அந்த நேரத்துல ஒண்ணும் வராது.

கடந்த பத்து பதினஞ்சு வருஷமா எவ்வளோ தரம் தனியா பிரார்த்தனை செஞ்சேன்னு நினைச்சுப்பாத்தா  அது ரொம்ப ரொம்ப குறைவுதான்  எந்த சொந்த சமாசாரத்துக்கும் இல்லை.

எப்பவும் என்ன நடக்கணமோ அதான் நடக்கறது; இதுல நாம கேட்க என்ன இருக்குன்னு தோணிப்போச்சு.

இந்த சமயத்துல நாம தினமும்  சொல்கிற இந்த ஸ்லோகம்தான் அப்ளை ஆகிறது.

அனாயாஸேன மரணம்ʼ வினாதைன்யேன ஜீவனம்ʼ

தேஹி மே க்ருபயா ஶம்போ த்வயி பக்திம்ʼ அசஞ்சலாம்


என்ன கேட்கிறோம் அனாயாஸேன மரணம். பிறக்கிறவா எப்படியும் இறந்துதானே ஆகணும் அப்படி மரணம் வரும்போது படுத்தபடுக்கையா இழுத்துண்டு நாமும் கஷ்டப்பட்டு மத்தவங்களையும் கஷ்டப்படுத்திக்கொண்டு ஏன் போகணும்?

சில பேர் மரணத்த பத்தி கேள்விப்பட்டு இருக்கேன்.

ஒருத்தர் சந்தியாவந்தனம் செய்ய உக்காந்தார். ஆசமனம் செய்தார். அச்சுதாய நமஹ, அனந்தாய நமஹ ... கோவிந்தாய வுக்கு அவர் இல்லை சாய்ஞ்சுட்டார்.

இன்னொருத்தர் கோவிலுக்குப்போனார். ஸ்வாமி தரிசனம் எல்லாம் ஆச்சு. வெளியே வரும்போது கீழே விழுந்து நமஸ்காரம் செய்வோமில்லையா செய்தார். எழுந்திருக்கவில்லை. கூட வந்தவங்க எவ்வளோ நேரம் நமஸ்காரம் செய்வீங்கன்னு எழுப்பப்பாத்தா பிராணனை விட்டுவிட்டார்ன்னு தெரிஞ்சது.

மரணம் ங்கறது இந்த மாதிரி கிடைக்க ஒருசிலர் மட்டுமே ப்ராப்தம் கிடைக்கறது.

அது வேணும் இது வேணும்ன்னு ப்ரார்த்தனை செஞ்சுக்கறத விட .......

அனாயாசேன மரணத்தையும் வினாதைத்யேன ஜீவிதத்தை மட்டும் ப்ரார்த்தித்தால் போது, மற்றதை அவன் பார்த்துக்கொள்வான் !!​

நம் குழந்தைகளுக்கு எமாற்றம் தேவை

எவ்வளவோ சொல்லிக் கொடுக்கிறோம் நம் குழந்தைகளுக்கு..
​​
ஆனால் ஏமாற சொல்லிக் கொடுப்பதில்லை...
என்னங்க எதுக்குங்க ஏமாற சொல்லிக் குடுக்கணும்னு கேக்கறீங்களா? ..உண்மைதான்..நம் குழந்தைகளுக்கு எமாற்றம் தேவை..அவர்கள் ஏமாற வேண்டும்..
..முட்டாள் தனமான பேச்சாக தெரிகிறதா?
இல்லை..ஒரு விஷயம் அன்று நடந்ததை விட இன்று அதிகமாக நடக்கிறது ..என்ன ?..தற்கொலைகள்..!
நடக்கும் தற்கொலை சம்பவங்களில் பெரும் சதவீதத்தினர் பள்ளி கல்லூரி வயதில் உள்ள இளையவர்களே..
ஏன்.?.பரீட்சையில் ஃபெயில்..குறைந்த மதிப் பெண்கள்..
அதிக மதிப்பெண் வாங்கியும் மருத்துவம் படிக்க கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை....பருவ வயது காதல் தோல்வி...ராக்கிங் தாக்கு பிடிக்க முடியவில்லை..பெற்றோர் கடுமையாக திட்டினாதால் கூட விஷம் குடித்த இளம் வயதினர் ஏராளம்...இதெற்கெல்லாம் அடிப்படை காரணம் அவர்களுக்கு வரும் ஏமாற்றங்களை எதிர் கொள்ள முடியாமல் போவதே..இல்லையா?..ஆம்..
அதற்காகத் தான் சின்ன வயதிலேர்ந்தே குழந்தைகளுக்கு நாம் ஏமாற சொல்லி தரணும்..சின்ன சின்ன ஏமாற்றங்களுக்கு அவர்களை தயார் படுத்தணும்..
எப்படின்னு கேக்கறீங்களா?
நாம் எல்லாருக்குமே குழந்தைகள் மேல் ஒரு சாஃப்ட் கார்னர் இருக்கும்...நம் சக்திக்கு மீறி கூட சில சம்யங்களில் அவர்கள் கேட்டோ கேட்காமலோ அவர்களுக்கு நிறைய செய்ய ஆசைப் படுவோம்..பரிசு பொருட்கள் வாங்கி தருவதிலோ,சினிமா ,பார்க் ன்னு கூட்டிக் கொண்டு போவதிலோ நம் குழந்தைகள் கேட்கும் போது உடனே செய்ய வில்லை யென்றாலும் கொஞ்சம் தாமதித்து அவர்கள் விரும்பியதை நாம் செய்து கொடுத்து விடுகிறோம் தான்....இங்கே தான் அவர்களுக்கு ஏமாற்றம் தரணும்னு நான் சொல்றேன்..
எல்லா நேரமும் இல்லை..ஒரு சில சமயங்களில் ஏமாற்றத்தை நாமாக தரணும்.உதாரணமாக.
சினிமாவிற்கு போகலாமா என்று கேட்பார்கள்
இல்லை கூட்டிக் கொண்டு போக முடியாது என்று சொல்வதில்லை நான் சொல்ல வருவது... நாம் இல்லை சொன்னால் அவர்களுக்கு வரும் ஏமாற்றத்தின் விளைவு நம் மீது கோவம் ..பின் வெறுப்பு..அந்த மாதிரியான ஏமாற்றம் இல்லை நான் சொல்ல வருவது
அவர்கள் கேட்கும் போது சரின்னு சொல்லணும்.அவர்களோடே குதூ கலமாக நாமும் தயாராகணும்..பரவசத்தோடு அவர்களைக் கூட்டிக்கொண்டு தியேட்டருக்கு செல்லணும்...(டிக்கெட் இல்லை என்று நமக்கு முன்னரே தெரிந்திருக்கும்) இருந்தாலும் கூட்டிக் கொண்டு செல்லணும்....அங்கே ஹவுஸ் ஃபுல் போர்டை பார்த்து அவர்கள் ஏமாறணும்..
பிக்னிக் போகிறோம் என்று ஆசைக் காட்ட வேண்டும்..எங்கே என்பார்கள்..சூப்பர் இடம் ஒண்ணு..சர்ப்ரைஸ் ..நீங்களே வந்து பாருங்கன்னு சொல்லி ஆவலை ஏற்படுத்தி வீட்டுக்கு அருகில் இருக்கும் பார்க்குக்கோ பீச்சுக்கோ கூட்டிட்டு போய்டணும்..
அவர்கள் கேட்ட புத்தகமோ அல்லது பரிசு பொருளோ எல்லா நேரங்களிலும் வாங்கி தரவும் வேண்டாம் ..இல்லை வாங்கி தர முடியாதென்றும் சொல்ல வேண்டாம்..நாம் வாங்கி தர பிரயர்த்தனப் படுவது போலவும், நான்கு இடங்களில் ஏறி இறங்கி அந்த இடங்களில் கிடைக்கவில்லை என்ற பாவ்லாக்களை நாமே உருவாக்கணும்..
இந்த மாதிரியான சின்ன சின்ன விஷயங்களில் நம் குழந்தைகள் ஏமாற வேண்டும்..அப்படி கிடைக்கும் சின்ன சின்ன ஏமாற்றங்கள் அவர்கள் பெரியவர்களாகும் போது சந்திக்கும் எந்த பெரிய ஏமாற்றத்தையும் தாங்கி கொள்ளும் சக்தியை ,மெச்சூரிட்டியை அவர்களுக்கு கண்டிப்பாக கொடுக்கும்..
நினைத்து பாருங்கள்..இம்மாதிரியான சின்ன சின்ன ஏமாற்றங்களை நாம் எவ்வளவு சந்தித்திருப்போம்..காரணம் நம் வீட்டில் மட்டுமல்ல நம்மைச் சுற்றியும் வசதி வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன்.அதனால் ஏமாற நிறைய வாய்ப்புகள் இருந்தன .இப்ப இருக்குற டெக்னாலஜியிலும், சுற்றி இரைந்து கிடக்கும் நவீன வசதி வாய்ப்புகளிலும் அவர்கள் எட்டிய தூரத்தில் விரும்பிய நேரத்தில் அவர்கள் ஆசைப் படுகின்ற சின்ன சின்ன விஷயங்கள் நிறைவேறி விடுகின்றன..
ஆகையால் குழந்தைகளைக் கொஞ்சம் ஏமாற விடுங்கள்.இதான் அவர்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த மாற்றத்தைக் கொண்டு வரும்..
#
கொசுறு ஏமாற்றம் ஒன்றே A மாற்றம் தரும் !

​ *தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறியது*

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

🌺தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலை தான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும்.

🌺இரவில் அதிக நேரம் விழித்திருப்பதால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர்பாடல் ஒன்று.

🌺இரவில் நித்திரை ஞசெய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்] சோர்வு,பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

🌺எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
உத்தமம் கிழக்கு
ஓங்குயிர் தெற்கு
மத்திமம் மேற்கு
மரணம் வடக்கு
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது.

🌺  தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும்.

🌺மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு, அதிர்ச்சி உண்டாகும்.

🌺 வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

🌺இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி
தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன்,
இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.

🌺  மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும்அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன்
(பிராண வாயு) உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும்.

🌺 குப்புறப் படுக்கக் கூடாது,
தூங்கவும் கூடாது.

🌺 இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை
நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்துபடுத்து தூங்க வேண்டும்.
இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம்
வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும்.

🌺இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

🌺வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும்.இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும்.
இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்

🌺சித்தர்கள் கூறியது அனைத்துமே நம் அனைவரின் நன்மைக்கே, இதை நாமும் பின்பற்றி பயன் பெருவோம்.​

​*சிந்தனை துளிகள்*


ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள். 
எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.
நல்லவர்களோடு நட்பாயிருங்கள். நீங்களும் நல்லவராவீர்கள்.
காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை. 
இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்ளுங்கள். 
யார் சொல்வது சரி என்பதை விட, எது சரி என்பதே முக்கியம். 
பலமுறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள். 
பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறியுங்கள்.
நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.
உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.

​-
​----------------
 

கோபத்தின் கதை!
ஒரு இளைஞனுக்கு அதிகமாக கோபம் வந்து கொண்டே இருந்தது.
ஒரு நாள் அவன் அப்பா அவனிடம் சுத்தியலும் நிறைய ஆணிகளையும் கொடுத்தார்.
”இனிமேல் கோபம் வரும் போது எல்லாம் வீட்டின் பின் சுவரில் ஆணி அடிக்குமாறு கூறினார்”.
முதல்நாள் 10 ஆணி,மறுநாள் 7,பின்பு 5,2 என படிப்படியாக ஆணி அடிக்க கோபம் குறைந்தது.
ஒரு நாள் ஒரே ஒரு ஆணி அடித்தான், மொத்தமாக 45 ஆணிகள் அடித்து உள்ளேன்.
இனி கோபம் வராது என அவன் அப்பாவிடம் கூறினான்.
இனிமேல் கோபம் வராத நாளில் ஒவ்வொரு ஆணியாகப் பிடுங்கி விடு என்றார்.
45 நாளில் அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன என பெருமையுடன் அப்பாவை அழைத்து காட்டினான்.
உடனே அப்பா சொன்னார் ஆணிகளை பிடுங்கிவிட்டாய்,சுவற்றில் உள்ள ஒட்டைகளை என்ன செய்வாய்?
உன் கோபம் இது போல பலரை காயப்படுத்தி இருக்கும் அல்லவா?