அது வேணும் இது வேணும் ......... !! யாரிடம் யார் கேட்பது. ..........
ஒரு இருபது வருஷத்துக்கு முன்னாடி ஒரு குரு பெயர்ச்சி அன்னிக்கு என் மாமாவிடம் பேசிக்கொண்டு இருந்தேன்.
அவன் ஒரு பெரியவா பக்தன் அவரிடம் உனக்கு என்ன வேணுமோ கேளு என்றாராம். இவர் ஒண்ணுமே கேட்கலை.
ஏன் மாமா என்றேன்.
டேய் ஒருத்தர் நிறைய தங்க காசு கொடுக்க தயாரா இருக்கறப்ப கொஞ்சமே கொஞ்சம் பித்தளை காசு கொடுன்னு கேட்கறாப்பல ஆயிடும். இவாள மாதிரி ஞானிகளுக்கு நமக்கு என்ன வேணும்ன்னு தெரியும் நாம எதுக்கு கேட்க்கணும் என்றார்.
ஒரு சில வருஷங்களாக எனக்கு பிரார்த்தனை செய்யவே வராது. என்னத்தான் பூஜை செய்ய உக்காரும்போது இதை பிரார்த்தனை செஞ்சுக்கணும் அதை செஞ்சுக்கணும்ன்னு நினைச்சுண்டு உக்காந்தாலும் அந்த நேரத்துல ஒண்ணும் வராது.
கடந்த பத்து பதினஞ்சு வருஷமா எவ்வளோ தரம் தனியா பிரார்த்தனை செஞ்சேன்னு நினைச்சுப்பாத்தா அது ரொம்ப ரொம்ப குறைவுதான் எந்த சொந்த சமாசாரத்துக்கும் இல்லை.
எப்பவும் என்ன நடக்கணமோ அதான் நடக்கறது; இதுல நாம கேட்க என்ன இருக்குன்னு தோணிப்போச்சு.
இந்த சமயத்துல நாம தினமும் சொல்கிற இந்த ஸ்லோகம்தான் அப்ளை ஆகிறது.
அனாயாஸேன மரணம்ʼ வினாதைன்யேன ஜீவனம்ʼ
தேஹி மே க்ருபயா ஶம்போ த்வயி பக்திம்ʼ அசஞ்சலாம்
என்ன கேட்கிறோம் அனாயாஸேன மரணம். பிறக்கிறவா எப்படியும் இறந்துதானே ஆகணும் அப்படி மரணம் வரும்போது படுத்தபடுக்கையா இழுத்துண்டு நாமும் கஷ்டப்பட்டு மத்தவங்களையும் கஷ்டப்படுத்திக்கொண்டு ஏன் போகணும்?
சில பேர் மரணத்த பத்தி கேள்விப்பட்டு இருக்கேன்.
ஒருத்தர் சந்தியாவந்தனம் செய்ய உக்காந்தார். ஆசமனம் செய்தார். அச்சுதாய நமஹ, அனந்தாய நமஹ ... கோவிந்தாய வுக்கு அவர் இல்லை சாய்ஞ்சுட்டார்.
இன்னொருத்தர் கோவிலுக்குப்போனார். ஸ்வாமி தரிசனம் எல்லாம் ஆச்சு. வெளியே வரும்போது கீழே விழுந்து நமஸ்காரம் செய்வோமில்லையா செய்தார். எழுந்திருக்கவில்லை. கூட வந்தவங்க எவ்வளோ நேரம் நமஸ்காரம் செய்வீங்கன்னு எழுப்பப்பாத்தா பிராணனை விட்டுவிட்டார்ன்னு தெரிஞ்சது.
மரணம் ங்கறது இந்த மாதிரி கிடைக்க ஒருசிலர் மட்டுமே ப்ராப்தம் கிடைக்கறது.
அது வேணும் இது வேணும்ன்னு ப்ரார்த்தனை செஞ்சுக்கறத விட .......
அனாயாசேன மரணத்தையும் வினாதைத்யேன ஜீவிதத்தை மட்டும் ப்ரார்த்தித்தால் போது, மற்றதை அவன் பார்த்துக்கொள்வான் !!

No comments:
Post a Comment