Saturday, February 22, 2020

குழந்தையர் மருத்துவம்*


அனைத்து நோய்களும் குழந்தைகளைத் தாக்கவல்லன என்றாலும் அவற்றுள் சிலவும் அவற்றிற்கான மருந்துகளையும் கீழே காணலாம்.
*1. வயிற்றுப்போக்கு* - வசம்பை உரசிக் காலை மாலை கொடுத்து வரக் கட்டுப்படும்.
*2. சளி* - துளசிஇலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.
*3. கக்குவான்* - பனங்கற்கண்டுடன் சிறிதளவு மிளகைச் சேர்த்துக் கொடுத்து வந்தால் விலகும்.
*4. சாதாரணக் காய்ச்சல்* - தாய்ப்பாலை ஒரு துணியில் நனைத்துக் குழந்தையின் நெற்றியைச் சுற்றி ஒத்தடம் கொடுத்து வரத் தீரும்.
*5. உடம்பு வலி* - சிறிய வெங்காயத்தைத் தட்டி இதன் சாற்றைக் கைகால்களில் தேய்த்துவிட வலி குறையும்

No comments:

Post a Comment