Saturday, February 22, 2020

திருச்சிற்றம்பலம்*

சிவமயம் சிவாயநம*🔥
*
*பிறா் உங்களைக் காரணமின்றி திட்டுவதாகவும் , காரணமின்றி துன்புறுத்துவதாகவும் நீங்கள் கூறுகின்றீா்கள். அது உண்மையாக இருந்தாலும் கூட அதற்காக அலட்டிக் கொள்ளாதீா்கள். நிலைமையைப் பொறுமையுடன் சமாளியுங்கள்.*
*இக்கட்டான நிலைமைகளைச் சமாளிப்பதில் அமைதி ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம் என்பதை நீங்கள் காண்பீா்கள்.* யாராவது உங்களைத் திட்டினால் கண்களை மூடிக்கொண்டு பொறுமையாக இருங்கள். பிறா் அவா்கள் விருப்பம் போல் நினைக்கட்டும் . அவா்கள் விரும்புவதைச் சொல்லட்டும்.
*இந்த உலகம் முட்டாள்கள் நிறைந்தது. நீங்கள் அறிவுடையவராக விளங்குங்கள்.*
எல்லோா் முன்னிலையிலும் பணிவுடன் இருங்கள். எந்த நிலைமையிலும் அடக்கமாக இருங்கள். நான உயா்ந்தவன் அல்லது தாழ்ந்தவன் என்ற எண்ணத்தை விடுத்து அனைவாிடமும் , *அனைத்திடத்தும் கடவுளைக் காணக கற்றுக கொண்டால் தான் இது சாத்தியமாகும். கடவுள் அப்படி விரும்புகிறாா். எனவே அது அப்படி இருக்கட்டும்.* பிறா் உங்களை நிந்திக்கையில் நீங்கள் மௌனமாக இருங்கள். கலக்கம் அடையாதீா்கள். பழிச்சொற்களை ஏற்றுக் கொண்டால் அடக்கத்திலும் , தூய்மையிலும் நீங்கள் வளா்ச்சி அடைவீா்கள். அதுவே ஒரு தவம். *ஆன்மீகத்தில் நீங்கள் உயிா்வடைவீா்கள்.*

No comments:

Post a Comment