Wednesday, March 8, 2017

வீட்டில் பழுதாகி உடைந்து போன சிதைந்து போன படங்கள்/விக்ரஹங்களை என்ன செய்ய வேண்டும்?

வீட்டில் பழுதாகி உடைந்து போன சிதைந்து போன படங்கள்/விக்ரஹங்களை என்ன செய்ய வேண்டும்?

இந்த பிரச்சினை மற்றும் கேள்வி எல்லோருக்கும் இருப்பதே. பல பேர் தங்கள் வீட்டில் சிதிலமடைந்த விக்ரஹங்கள் அல்லது படங்களை ஏதோ ஒரு கோவிலில் மரத்தடியிலோ அல்லது யாருமில்லாத இடத்திலோ போட்டுவிட்டு 'அப்பாடா' என்றிருப்பார்கள். ஆனால் இப்படி செய்வதை விட உன்னதமான வழி என்னவென்றால் அப்பேற்பட்ட படங்களை அக்னி பகவானிற்கு ஆஹுதியாக கொடுப்பது நல்லது. அது எப்படி ஸ்வாமி படங்களை அப்படி அக்னியில் போடுவார்களா? என்ற சந்தேகம் தேவையில்லை. அக்னி ஸர்வபக்ஷகர், எல்லா சமயத்திலும் புனிதமானவர். அதனால் பவித்ராக்னியில் தேவதைகளின் படங்களை சமர்பிப்பதில் எந்த ததவறுமில்லை. இனி உடைந்து போன விக்ரஹங்ளை நதியில் விஸர்ஜனம் செய்ய வேண்டும். ப்ரவாஹம் (ஓட்டம்) உள்ள நதியில் போடுவதினால் தண்ணீர் கெடாது. ஆனால் அக்னியில் போட்டாலும் நதியில் போட்டாலும் முதலில் அந்த படத்திற்கும் விக்ரஹத்திற்கு நமஸ்கரித்து "கச்ச கச்ச ஸுர ஸ்ரேஷ்ட ஸ்வஸ்தான பரமேஸ்வரஹ" என்று சொல்லி போட்டு விடுங்கள். இதுவும் தணிப்பதே என்று தெரிந்து கொள்ளுங்கள். இதைப் பற்றி அனைவருக்கும் தெரியபடுத்துங்கள்.

தர்மத்தை ஆதரிப்போம். தர்மத்தை காப்பாற்றுவோம்.

No comments:

Post a Comment