--
பெருமாள் கோவிலில், பெருமாளுக்கு காட்டப்படும் ( ஆர்த்தியை)தீபாராதனையை தொட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளலாமா..?
கூடாது......
பெருமாள்
கோவிலை பொருத்த மட்டில், பெருமாளுக்கு காட்டப்படும் ( ஆர்த்தியை )
தீபாராதனையை பெருமாளுக்கு காட்டியவுடன், ஆர்த்தியை, கர்பக்கிரகத்திலேயே
ஆராதகர் வைத்து விடுவார்கள்.
அது தான் சரியான முறையாகும்.
ஆனால் தற்போது சில சந்தர்ப்ப சூழ்நிலையாலும், பக்தர்களின் திருப்திக்காகவும், ஆராதகர் ஆர்த்தியை வெளியில் எடுத்து வருகிறார்கள்.
ஆராதகர் ஆர்த்தியை வெளியில் எடுத்து வந்தாலும், நாம் அதை தொட்டு கண்களில் ஒற்றிக் கொள்வது கூடாது.
அது தவறாகும்.
பெருமாள் கோவிலை பொருத்த மட்டில், பெருமாளை நேரடியாக கண் குளிர, தரிசிப்பது மட்டும் தான் முக்கியம்.
பெருமாள் கோவிலை பொருத்த மட்டில் ஜோதிக்கு முக்கியத்துவம் இல்லை.
பொதுவாக ஆராதகரின் தட்டு, தீபம், எதையும் பக்தர்கள் தொடுவது கூடாது.
சிவன் ஜோதி ரூபம் என்பதால், சிவன் கோவில்களில் ஜோதிக்கு முக்கியத்துவம் அதிகம், என்கிறார்கள்.
இவ்வளவும் நான் சொல்வதற்கு முக்கிய காரணம்,....எந்த கோவிலுக்கு செல்கிறோமோ, அந்த கோவிலின் முழு பலனும் நமக்கு கிடைக்க வேண்டும்.
எனவே,
நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது,...... பெருமாள் கோவில் முறைக்கும்,
சிவன் கோவில் முறைக்கும், வித்தியாசங்கள் நிறைய உள்ளன.
அவைகளை நன்கு தெரிந்து கொண்டு, அந்தந்த முறைகளை, அந்தந்த கோவில்களில், சரியாக பயன்படுத்த வேண்டும்.
முறைகளை மாற்றம் செய்தீர்கள் என்றால் அந்த கோவிலின் பலன் உங்களுக்கு கிடைக்காது.
என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
___*ஆன்மீக தேடல்கள்*___
'ஒரு முக லிங்கம்'
தத்புருஷ லிங்கம் என அழைக்கப் படும்
இந்த ஒரு முகம் கொண்ட லிங்கத்தை வணங்கினால் சகல செல்வங்களுடன் கூடிய ராஜ யோகத்தை அடையலாம்.
சில கோயில்களில் இவ்வகை லிங்கங்கள் தென் மேற்கு மூலையில் காணப் படுகின்றது.
தென்மேற்கு மூலையை "நிருதி" என அழைக்கின்றோம்.
நிருதி
தேவனால் இந்த லிங்கங்கள் வழிபடப் பட்டதால் இவை நிருதி லிங்கம் எனவும்
அழைக்கப் பட்டு, கோயில்களின் தென் மேற்கு மூலைகளிலும் வைக்கப் படுகின்றன.
சிதம்பரம்,
திருவண்ணாமலை, சுசீந்திரம் தாணுமாலய ஸ்வாமி கோயில், காளஹஸ்தி போன்ற
இடங்களில் ஒரு முகத்துடன் கூடிய லிங்க வடிவில் ஈசன் அருள் பாலிக்கின்றார்.
வேதத்தின் சாரமான அக்னி மற்றும் ருத்ரன் இருவரின் இணைப்பே இந்த லிங்க வடிவம்.
ஓம் நமசிவாய..........
No comments:
Post a Comment