Wednesday, March 8, 2017

வாழ்க்கை சந்தோஷம்



மனநல பிரச்சனைக்கு உள்ளானவர்கள் பெரும்பாலும்... பயனற்ற காரியங்களில் தன்னுடைய சக்தியை விரயமாக்குவர். முடிவில்லாமல் எதையாவது.. பேசிகொண்டேயிருப்பர்...

பட் எதையாவது முழுவதுமாக பேசிய திருப்தி இருக்காது... எதையோ மறந்ததுபோலவே... எதையாவது திரும்ப திரும்ப பேச எத்தனிப்பர்...

ஏகபட்ட வேலைகளை தொடங்கிகொண்டேயிருப்பர்.. எதனையும் முழுவதுமாக முடிக்கமாட்டார்... எல்லாவற்றிலும் எதையாவது சிக்கலாக செய்துவைத்திருப்பர்...

தானும் செய்யமாட்டார்..மற்றவர்களையும் செய்ய விடமாட்டார்... ஆனால் எப்போதும் சின்சியராக... அதன் சம்மந்தமாக வேலைகளை பற்றியே பேசுவதும் செய்வதுமாக இருப்பர்...

இந்த நிலை தன் சுயபரிசோதனையில் தென்பட்டாலும்.. மற்றவரால் சுட்டிகாட்டபட்டாலும் உடனடியாக ஆலோசனை பெறுவது அவசியம்...

ஆரம்ப நிலையில் சரிசெய்துகொள்வது எளிதானது---

ஒருசிலருக்கோ.... ஒரு குறிப்பிட்ட நேரங்களில்..அல்லது செயல்களில் மட்டும் பதட்டமாக இருப்பர்...ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்ப சூழ்நிலைகளில் ஏற்படும் படபடப்பு..மயக்கம் வருவதுபோன்ற நிலை... கூச்சம்..பயம்...

ஒரு சிலரோ..மிக பிடிவாதமாக இருப்பர்... தன்னுடைய பிடிவாதம் அபத்தம் என்று தெரிந்தாலும் அப்படியேதான் இருப்பார்.. எப்பொழுதும் கைகால்கள் முகம் கழுவிகொண்டே துடைத்துகொண்டே இருப்பர்....

உள்ளுக்குள் ஒரு போராட்டமே நிகழும்....  தன்னுடைய பிடிவாதத்திற்கும்.... மன உறுதிக்கும்... கடைசியில் முடிவை கண்டடையவே முடியாமல்... தலையை பிடித்து கொள்வர்

வலிகளால் அவதிபடுவர்.... உறங்கவேண்டும்போல் இருக்கும்... களைப்பாக உணர்வர்..ஆனால் உறக்கம் வராது... தலைவலிதான் தொடர்ந்துகொண்டேயிருக்கும்...

இந்த மாதிரியான அறிகுறிகள்கூட ஆரம்பநிலைதான்.. எளிதாக சரிசெய்துகொள்ளகூடியவைகள்தான்....

செல்வி அருள்மொழி...மனநல ஆலோசகர்

  --------

பொண்டாட்டி சொன்னா கேளுங்க! – இதநான் சொல்லலா,  உளவியலாளர்கள் சொல்றாங்க!

உடல்ரீதியாக பெண்கள் மென்மையானவர்களாக இருந்தாலும் உளவியல் ரீதியாக
பெண்கள் பலம் வாய்ந்தவர்கள்.

மனைவியின் உணர் வுகளுக்கு மதிப்பளிப்பது கணவரின் கடமைகளில் முதன்மையானது. எனவே மனைவி கூறுவதை செவி கொடுத்து கேட்பதை விட இதயப்பூர்வமாக கேளுங்கள்.

ஏனெனில் அதைத்தான் உங்கள் மனைவி அதிகம் எதிர்பார்க்கிறார்.

தம்பதியரிடையே எதிர்மறையான வார்த்தைகளை அதிகம் பயன்படுத்து வதை தவிர்க்க வேண்டும். எதற்குமே இல்லை என சொல்வதற்குமுன், இருமுறை சிந்தியுங்கள்.

ஏனெனில், நீங்கள் ஆம்! என்று கூறுவதனால் உறவு பலப்படுகிறது, என்பதை அறிந்து நீங்களே ஆச்சரிய மடைவீர்கள்.

குடும்பத்திற்காக பணம் செலவழிப்பது என்பது அவசியமானதுதான்.ஆனால் அதுவே அத்தியாவசியமாகிவிடாது.

பணத்தைவிட அவர்களோடு எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பது முக்கியமானது. ஏனெனில் பணத்தை விட மனைவிக்காகவும், குழந்தைகளுக்காகவும் செலவழிக்கின்ற நேரமே அதிகம் நன்மை தரக்கூடியது.

கணவன்-மனைவியே தொடர்பற்று இருப்பது சிக்கலுக்கு வழிவகுக்கும். எனவே எதை பற்றி வேண்டுமானாலும் பேசுங்கள். எந்த சூழ்நிலையிலும், கணவன்-மனைவி இடையே பேச்சு வார்த்தை குறைந்து விடக்கூடாது.

மாறாக அவர்களோடு உங்க பிள்ளைகள், காலநிலை, வீட்டு விவகாரம் செலவினங்கள் பற்றி பேசுங்கள். பேச்சு தொடர்பு குறை கின்றபோது மண வாழ்க்கை சிக்கலில் முடிவடையும்.

தவறுசெய்யாதவர்கள் என்று இவ்வுலகில் எவரும் இல்லை. மனைவி தவறு செய்தால் அவற்றை குத்திக்காட்டி பேசுவதைவிட பிழை களைச்சுட்டிக்காட்டி திருத்தவே முற்படவேண்டும்.

ஏனெனில் மன்னித்தல் என்பது தெய்வ குணத்திற்கு ஒப்பானது. தம்பதியரிடையே மன்னிக்கும் அம்சம் இல்லாவிட்டால் எந்த உறவும் நிலைத்திருக்க முடியாது.

வீட்டு வேலைகளை யார் செய்வது என்ற பிரச்சனையில்தான் அதிகமான குடும்பங்கள் பிரிந்திருக்கின்றன. பிள்ளைகளை பராமரிப்பது என்பது பெண்கள் மீது மட்டும் திணிக்கப்பட்ட சுமையல்ல.

மனைவியானவர் அதை எதிர்ப்பார்க்கா விட்டாலும் நீங்கள் அறிந்து உதவவேண்டும். ஒருவருக்கொருவர் அன்பாக இருக்கவேண்டும் என்பதையே சில தம்பதியர் புரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர்.

காதல் திருமணம் என்றாலும் சரி பெற்றோர் பார்த்து முடித்து வைத்ததிருமணம் என்றாலும் சரி சின்ன சின்ன பிரச்சனைகளுக்குகூட தற்போது நீதிமன்ற வாசலையே தேடி செல்கின்றனர்.

மனதிற்கு பிடித்தவரை சேர்ந்து வாழ்வோம், இல்லாத பட்சத்தில் சந்தோ ஷமா பிரிந்துவிடுவோம் என்ற மனநிலை இன்றைக்கு சாதாரணமாகிவிட்டது.

உயிருக்கு உயிரான தம்பதியராக இருந்துவிட்டு, திடீரென பிரிவது உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்துகிறது. ஆனால் இதை உணராமல் விவாகரத்தையே தீர்வாக நினைக்கிறார்கள். ஆகவே உளவியலாளர்கள் சொல்படி நடங்க அதாவது உங்க பொண்டாட்டி சொல்றதை நீங்க கேளுங்க‌!

---------------
: வாழ்க்கையில் வெற்றியடைந்து..மிக சந்தோஷமாக நிறைவாக இருப்பவர்களை கூர்ந்து கவனித்தால் தெரியும்...  வதந்தி பேசமாட்டார்கள்.... பிறரைபற்றி நோட்டம் விடுவதைவிட தன்னைபற்றிய கவனிப்பும் கனிப்பும் அதிகமாகவே இருக்கும்

தன்னைபற்றிய சுயமதிப்பீட்டை சரியாக கனித்திருப்பார்கள்.. தன்னால் என்ன இயலும்... எது தேவை... எது அவசிய அத்தியாவசியம் என்பது உட்பட பெரும்பாலும் தன்னையபற்றிய மதிப்பீட்டை சரியாக வைத்திருப்பார்கள்...

புலம்பல்களும்... நிராசை வார்த்தைகளும்.... எதிர்மறையாக எண்ணங்கள் பேச்சுக்கள் தேடிபார்த்தாலும் கிடைக்காது....

மற்றவர் கண்பார்வையில் அவசியமற்ற.. தேவையற்றவையாக தென்படுவதில்கூட.... உபயோகமான ஒன்றை கண்டுபிடிப்பர்....

அதிகம் வதந்தி பேசிகொண்டு..எப்பொழுதும் அடுத்தவர் விஷயங்களிலேயே மூக்கை நுழைத்துகொண்டு.... சம்மந்தமில்லாமல் எப்பொழுதும் யாரிடமாவது எதையாவது பேசிகொண்டும்..செய்துகொண்டும் இருப்பவர்களை கொஞ்சம் கூர்ந்து பார்த்தால் என்ன தெரியும்....

அவர் வாழ்க்கையில் அடிமட்டத்தில் இருப்பார்... பில்டப் பேச்சுகளும்... படாடோபமும்.. வார்த்தை ஜாலங்களும் நம்மையே மயங்கவைத்துவிடும்..

மிக திறமைசாலிபோல் காணப்படுவார்..உள்ளே நுழைந்து பார்த்தால் அங்கே ஒன்றுமே இராது... சொல்லிற்கும்.. செயலிற்கும்..அவரது வாழ்க்கைக்கும் சம்மந்தமே இராது...

எப்பொழுதும் யாரையாவது ஏமாற்றும் வித்தைகளையும்... அடித்து வீழ்த்தும் தந்திரங்களையும் திறம்பட கற்று வைத்திருப்பார்.... பட் அதனால் அவரது முன்னேற்றத்திற்கு ஒரு புரயோஜனமும் இராது...

சும்மா ..எப்பொழுதும் யாரையாவது..யார் வாழ்விற்காவது..தொந்தரவுகள் மட்டுமே செய்ய இயலும்..அதில் ஒரு குரூர திருப்தி தவிர..வேறு ஒரு புரயோஜனமுல் இல்லை...

இப்படிபட்டவர்களை பிரித்தறிந்து நட்போ உறவோ கொள்வது அவசியமப்பா.... பார்த்து பக்குவமாக நடந்துகொள்ளுங்கள்..

செல்வி அருள்மொழி....மனநல ஆலோசகர்

No comments:

Post a Comment