ஒரு வைத்தியரும் அவருடைய உதவியாளரும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக் கொண்டிருந்தனர்.
குரு என்ன தேடுகிறார் என்று சீடனுக்கு தெரியாது!
குருவும் சொன்னதில்லை!
சீடனின் வேலை அலைந்து திரிந்து வரும் குருவுக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்!
இப்படியே பல ஆண்டுகள் கழிந்து
இருவருமே முதுமை அடைந்து விட்டனர்.
ஆனாலும் தேடுவதை நிறுத்தவில்லை!
ஒருநாள் குரு வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே சீடனை காணவில்லை.
மாறாக இளைஞன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
குருவை பார்த்ததும் சாஷ்டாங்கமாக
விழுந்து சேவித்தான்.
குருவுக்கு ஒன்றும் புரியவில்லை.
யாரப்பா நீ என்று கேட்டார்.
அதற்கு அந்த இளைஞன் குருவே நான்தான் உங்கள் சீடன் என்றான்.
குருவுக்கோ மிகவும் குழப்பம்.
என்ன நடந்தது என்று கேட்க சீடன் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்:
" குருவே! உங்களுக்காக கூழ் காய்ச்சிக் கொண்டிருந்தேன்.
காய்ச்சிய கூழை கலக்கும் கரண்டி
உடைந்து விட்டது.
அதனால் அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து கலக்கினேன்.
கூழ் மொத்தமும் கருப்பாகி விட்டது.
அந்த கூழை இறக்கி வைத்து விட்டு
வேறு கூழ் காய்ச்சினேன் குருவே.
நீங்கள் வர தாமதமானதும் கருகிக் கிடந்த கூழை நான் குடித்து விட்டேன்.
குடித்த அரை நாழிகையில் எனது
முதுமை போய் இப்படி இளைஞனாகிவிட்டேன்" என்றான்.
குரு உடனே பதறியடித்துக் கொண்டு
" எங்கே அந்த குச்சி?
இதைத் தானே நான் இத்தனை ஆண்டுகளாய் தேடிக்கொண்டிருந்தேன்,"
என்று கேட்க அதற்கு அந்த சீடன்
"அதை தான் நான் அடுத்த கூழ் காய்ச்சும்போது அடுப்பில் வைத்து
எரித்து விட்டேனே?" என்றான்.
குரு நெஞ்சடைத்து மயங்கிச் சாய்ந்தார்!
நீதி 1. Corporate moral:
Inform your team mates
what exactly you are looking for,
when yu are in a project together!!!!
நீதி 2. தத்துவம்:
கிடைக்கிறது கிடைக்காமல் இருக்காது : கிடைக்காதது கிடைக்கவே கிடைக்காது!
நீதி 3. யதார்த்தம் :
பெரும்பாலும் பயன் தெரியாதவர்களிடம் தான் சில விஷயங்கள் அகப்பட்டுக்கொள்கின்றன!
அவர்கள் அதனால் பலனடைந்தாலும் அடுத்தவர்கள் பலனடைய விடாமல்
செய்து விடுகிறார்கள்!

----------------------
சுழன்றிடும் வெற்றி :
4 வயதில், உறங்கும் போது அறியாமல் உடையில் சிறுநீரை கழிக்காமல் இருந்தால், அது வெற்றி !
8 வயதில், தனியாக வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்பினால், அது வெற்றி !
12 வயதில், நல்ல நண்பர்கள் கிடைத்தால், அது வெற்றி !
18 வயதில், வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றால், அது வெற்றி !
22 வயதில், பட்டதாரியாக பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறினால், அது வெற்றி !
25 வயதில், நல்ல வேலை கிடைத்தால், அது வெற்றி !
30 வயதில், தனக்கென குடும்பத்தை அமைத்துக்கொள்ள முடியுமானால், அது வெற்றி !
35 வயதில், போதுமான அளவு சம்பாரிக்க முடியுமானால், அது வெற்றி !
45 வயதில், இளைஞரைப் போன்ற உருவத்தை தங்கவைக்க முடியுமானால், அது வெற்றி !
50 வயதில், தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை அளிக்க முடியுமானால், அது வெற்றி !
55 வயதில், நம் கடமைகளை தொடர்ந்து சரியாக செய்ய முடியுமானால், அது வெற்றி !
60 வயதில், ஓய்வு பெற வேண்டியவர் என நிராகரிக்கப்படாமல் செயலாற்ற முடியுமானால், அது வெற்றி !
65 வயதில், நோயில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
70 வயதில், மற்றவர்களுக்கு பாரமில்லாமல் வாழ முடியுமானால், அது வெற்றி !
75 வயதில், பழைய நண்பர்களுடன் உறவாடி மகிழ முடியுமானால், அது வெற்றி !
80 வயதில், மற்றவர் துணையில்லாமல் வெளியே சென்று வழி தவறாமல் வீடு திரும்ப முடியுமானால், அது வெற்றி !
85 வயதில், உறங்கும் போது அறியாமல் உடையில் சிறுநீரை கழிக்காமல் இருந்தால், அது வெற்றி !
இப்படி சுழன்றுகொண்டேயிருக்கும் நிலையற்ற தன்மையுடைய வெற்றியை மட்டுமே துரத்திக்கொண்டு அறியாமையில் வாழ்தலைக்காட்டிலும், எல்லோருக்கும் நன்மையே நினைத்து, அனைவரும் சமமென எண்ணி, அந்தந்த வயதில் செய்ய வேண்டிய கடமைகளை யாருக்கும் துன்பமளிக்காமல் செய்து, மகிழ்ந்து கடந்து வாழ்தலே அர்த்தம் நிறைந்த வாழ்க்கை !!!

No comments:
Post a Comment