Wednesday, March 8, 2017

சங்கல்பம் ஏன் செய்ய வேண்டும் ??


மன்மத நாம சம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷ ரிதௌ, சிம்ஹ மாஸே, சுக்ல பக்ஷே, ஸப்தம்யாம் ததுபரி அஷ்டம்யாம் ஶூபதிதௌ, வாஸரஹ வாஸரஸ்து, ஸ்திர வாஸர யுக்தாயாம், விசாகா நக்ஷத்ர யுக்தாயாம், ப்ரஹ்ம யோக, வணிஜை கரண ஏவங்குண விசேஷேண விசிஷ்ட்டாயாம் அஸ்யாம் வர்த்தமானாயாம் ஸப்தம்யாம் ததுபரி அஷ்டம்யாம் ஶூபதிதௌ.
தப்பு செய்தவர்கள் வைதரணி கடந்தாக வேண்டும்...
 தர்மதேவதையுடன் ஸ்வர்கத்திற்கு சென்ற தர்மராஜாவிற்கு வழியில் வைதரணி எதிர்பட்டது. வழியெல்லாம் துர்கந்தத்தினால் மிகவும் கோரமாக இருந்தது. எல்லாம் ஒரே கும்மிருட்டு. மாமிசம், ரத்தம், எலும்பு, மயிர், ப்ரேதங்கள், கும்பல் கும்பலாக ஈக்கள், விஷக்கிருமிகள் தெரிகின்றன. அந்த துர்கந்தத்தை தாங்கிக் கொள்ள முடியாமல் மூர்சையடைந்து விட்டான். துரியோதனன் போன்றோர் ஸ்வர்கத்தில் இருக்கும் பொழுது எந்த பாவமும் செய்யாத என் சகோதரர்கள், மனைவி இந்த நரகத்தில் இருப்பதென்ன? என்றார் தர்மராஜர். இந்திரன் தர்மராஜர் அனுபவித்த இந்த நரகம் குருக்ஷேத்திர சமயத்தில் ஸங்க்ராம சமயத்தில் அவர் செய்த அஸத்ய பலனே என்றான்.
அஸ்வத்தாம ஹத: என்று பெரிதாகவும், குஞ்ஜர : என்று சின்னதாகவும் கூறி குருவான த்ரோணரை வஞ்சித்த பாபத்திற்கு, அந்த சிறிது நேர நரகத்தை அனுபவிக்க வேண்டி வந்தது என்று கூறினார். பொய் பேசுபவர்களுக்கு நரகம் தவிர்க்க முடியாதென்றால், மனிதர்களை கொலை செய்பவர்களுக்கு எப்படிப்பட்ட தண்டனை கிடைக்குமோ.... என்று படித்தால் பயம் ஏற்படுவது சகஜமே. அதனால் தான் கருட புராணத்தை வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது என்பார்கள். ஆனால் மற்ற எலௌலா புராணங்களைப் போல் இதையும் வீட்டிலௌ வைத்துக் கொள்ளலாம். யாருக்காவது கொடுக்க வேண்டும் என்றால் ஹம்ஸ (அன்னப்பறவை) ப்ரதிமையுடன் சேர்த்து கொடுக்க வேண்டும் என்பது சாஸ்திரம்.
பிள்ளைகள் பெற்றோர் விஷயத்தில் செய்யக்கூடிய மூன்று விஷயங்கள்.
1) ஜீவிதோ வாக்யகரணாத் - ஜீவன் உள்ள வரை அவர்கள் சொல்வதை கேட்டு நடைத்தல்.
2) ப்ரத்யப்தம் பூரி போஜனாத் - ஆப்தீகத்தை ஸ்ரத்தையோடு சாஸ்த்ரங்களில் கூறியது போல் ஆசரித்து, அந்த சமயத்தில் ஏனைய பேர்களுக்கு போஜனம் ஏற்பாடு செய்தல்.
3) கயாயாம் பிண்டதானேன - தன் வாழ்நாளில் ஒரு முறையாவது கயையில் பித்ருக்களை உத்தேசித்து பிண்டதானம் செய்தல்.
த்ரிபி: புத்ரஸ்ய புத்ரதா - இந்த மூன்றையும் ஆசரிப்பவன் யோக்யமா புத்திரனாகிறான் என்று விதிக்கப்பபட்டுள்ளது.
இதில் முதலாவது அவரவர்களின் ப்ரவ்ருத்தியினால் சாத்தியமாகும். மூன்றாவது எப்பொழுதோ ஒரு முறை செய்யத் தகுந்தது. மத்தியில் சொல்லப்பட்ட ஆப்தீகம் வருடத்திற்கு ஒரு முறை செய்ய வேண்டியது.
-------------------------------------
சங்கல்பம் எப்படி செய்ய வேண்டும் ...... !!
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷய த்வாரா  ஶ்ரீ பரமேஷ்வர ப்ரீத்யர்த்தம்
அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோபிவா| ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம்ʼ ஸ: பாஹ்யாப்⁴யந்தர: ஶுசி:  மானஸம் வாசிகம் பாபம் கர்மணா ஸமுபார்ஜிதம்  ஸ்ரீ ராம ஸ்மரணே நைவ வ்யபோஹதி ந ஸம்சய: ஸ்ரீ ராம-ராம-ராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவ ச  யோகஶ்ச கரணஞ்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத்  ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த
ததேவ லக்னம் சுதினம் ததேவ தாராபலம் சந்த்ர பலம் ததேவ வித்யாபலம் தைவபலம் ததேவ கௌரீபதே (லக்‌ஷ்மீபதே) தேங்க்ரீ யுகம் ஸ்மரராமி
இப்படித்தான் பல காரியங்களுக்கும் சங்கல்பம் ஆரம்பிக்கிறது.
இதன் பொருளை பார்ப்பது நல்லது. ஏன் என்பது பின்னால் விளங்கும். இதன் பொருளை பார்க்கலாம்.
நான் செய்த எல்லா பாவங்களையும் அழிப்பதன் மூலம், பரமேஸ்வரனை திருப்தி படுத்துவதற்காக
புனிதமல்லாததோ புனிதமானதோ எந்த நிலையில் இருப்பவனானாலும்.
யார் அந்த  கண்ணனை மனதால் நினைக்கிறார்களோ அவருடைய உள்ளும் புறமும் சுத்தமானதாகிறது. மனது சொல் இவற்றால் செய்த செயல்களால் கிடைத்த பாபம் ஸ்ரீ ராமனை நினைப்பதால் நீக்கப்படுகிறது. எந்த  சந்தேகம் வேண்டாம்.
விஷ்ணுவே திதி, அதுவே வாரம், நக்ஷத்ரமும் விஷ்ணுவே. யோகம் கரணம் ஆகியவையும் விஷ்ணுவே. உலகமெல்லாமே எல்லாமே விஷ்ணு மயமாகும்.
கௌரீ பதியாகிய சிவனே (லக்ஷ்மியின் பதியான விஷ்ணுவே) உனது பாதங்களிரண்டையும் நினைக்கின்றேன். அதனால் இச்செயல் தொடங்கும் இந்த நேரத்திற்குரிய லக்னம் நல்ல லக்னமே, நாள் நல்ல நாளே. நட்சத்திரம், சந்திரன் ஆகியவற்றின் அடிப்படையிலும் அவை நல்லன செய்வனவே. கல்வியறிவினாலும் தெய்வத்தின் துணையினாலும் அவை சிறந்து விளங்குகின்றன.
எல்லா கூறுகளையும் கவனிக்கப்போனால் நல்ல நேரம் என்பது தேவர்களுக்கும் அகப்படாதாம். அப்படியானால் மனிதர்களான நமக்கு மட்டும் எப்படி அகப்படும்?
அதனால் சுலபமான வழி பகவானை நினைப்பதே. அது ராமனோ கௌரீபதியான சிவனோ லக்ஷ்மி பதியான விஷ்ணுவோ அது நம் குல ஆசாரப்படி இருக்கட்டும்.
அப்படி இறைவனை நினைக்க அந்த லக்னமே நல்ல லக்னம் ஆகிவிடுகிறது. அந்த நாளே நல்ல நாள் ஆகிவிடுகிறது. அமாவாசை அன்று சந்திரனுக்கு பலமில்லை. இருந்தாலும் இறைவனை நினைக்க அது பலம் பொருந்தியது ஆகிவிடுகிறது.
ஒரு சிலர் நல்ல நாள்தான் பார்த்தோம், நல்ல முகூர்த்தம்தான் பார்த்தோம். இருந்தாலும் எடுத்த காரியம் இப்படி ஆகிவிட்டது என்று புலம்புகிறார்கள். என்ன பிரச்சினை?
கர்மாவை செய்து வைப்பவர் சொல்லச்சொல்ல திருப்பிச்சொன்னார்களே தவிர இந்த சங்கல்ப நேரத்தில் பகவானை நினைத்தார்களா?
அதற்காக முகூர்த்தமே பார்க்க வேண்டாம் என்று நினைக்க வேண்டாம். முடிந்த வரை நல்ல முகூர்த்தமாக பார்த்துவிட்டு  ஆதர்ச முகூர்த்தம் கிடைப்பது அரிது என்பதாலும், தெரிந்த தெரியாத தோஷங்கள் இருக்கலாம் என்பதாலும் - பகவானை நினைத்து சங்கல்பம் செய்ய வேண்டும்.
இனியேனும் சங்கல்ப நேரத்தில் பகவானை நினைத்துக் கொண்டு சங்கல்பம் செய்வோம் !!

No comments:

Post a Comment